Sunday, December 7, 2025

கோவில் நிதியில் பக்தர்‌ விடுதி கட்டிவிட்டு TTDC மாற்ற ஹைகோர்ட் தடை யாத்ர

கோயில் விடுதிகளை TTDC நிர்வகிக்க இடைக்காலத் தடை...! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு...!  by Vignesh Perumal on | 2025-12-05 

கோயில் விடுதிகளை TTDC நிர்வகிக்க இடைக்காலத் தடை...! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு...!
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான பக்தர் தங்கும் விடுதிகளை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு இடைக்காலத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில் விடுதிகளை TTDC நிர்வகிப்பது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் இன்று (டிசம்பர் 5, 2025) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கோயில் விடுதிகளை TTDC வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், விடுதிகளை நிர்வாகம் செய்யத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
மேலும், இந்த வழக்கு குறித்து இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) ஆகிய இரு தரப்பினரும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்தத் தடை உத்தரவின் மூலம், கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகள் TTDC வசம் செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்


 

No comments:

Post a Comment

புனிதத் தொன்ம நூல் வழிபாடு Bibliolatry -மனித சமுதாயத்திற்கு கேடு.

பிபிளியோலாட்ரி சிலை வழிபாட்டை விட தீங்கு விளைவிப்பதா? – வரலாற்று கொலைகள் மற்றும் கொள்ளையின் பார்வை பிபிளியோலாட்ரி (Bibliolatry) என்பது புனித...