"கந்தன்மலை படம் ரிலீஸாச்சே இன்னிக்கு..?" என்று மின்னல் வெட்டியதில் Youtube-ஐ திறந்தால் 1000+ கமெண்ட்கள்.
முதல் கமெண்ட்டே,
"உலகத்துலேயே Youtube ல படம் ரிலீஸ் பண்ண மொத ஆளு நம்ம தலைவன்தான்..!"
பாக்கி 999+ கமெண்ட்களும்,
"நடிப்பு அரக்கன் ராஜா..."
"நடிப்பு சூறாவளி தலைவன்.."
"அகில உலக சூப்பர்ஸ்டார் எச் ராஜா..."
"ஆஸ்கர் நாயகன் ராஜா..."
"ராஜா கைய வெச்சா.....!"
Jokes apart, படத்தின் பெயர் கந்தன்மலை என்பதும், மையக்கரு திருப்பரங்குன்றம் மலை vs முஸ்லீம்களின் தர்கா சார்ந்த பிரச்சனைகள் என்பதும் வெட்ட வெளிச்சம். தவிர படத்தின் கட்சி/மத சார்பும் அனைவர்க்கும் தெரிந்ததே.
படத்திலும் கந்தன்மலை விவகாரம் ஆரம்பத்திலிருந்து ஒரு ஓரமாக நகர்ந்துகொண்டே தான் இருக்கிறது.
"என்னது ஓரமாவா...?"
"எஸ்..."
"அப்போ கதை...?"
படத்தின் இயக்குனர் வீரமுருகன் நமது தர்மப்போராளியிடம் கதை சொல்லும்போது,
"அய்யா....படத்தோட மெயின் ப்ளாட் கந்தன்மலை விவகாரம்தான்...ஆனா மத்த படங்கள்ல இந்த குறியீடு வைப்பாங்கள்ல....அது மாதிரி....ஏதாச்சும்...வைக்கலாமாய்யா....?"
"குறியீடா..? அப்படின்னா....?"
"அதாங்கய்யா...இந்த புத்தர் சிலை வெக்கிறது, அம்பேத்கர் போட்டோ காட்டுறது, "நா ஆண்ட பரம்பரடானு வில்லன் சொல்லிகிட்டே நாயி, பன்னிக்குட்டின்னு விலங்குகளை அடிக்கற மாதிரி காட்டுறது....இப்படி ஒரு க்ரூப்பும், அவங்களுக்கு எதிரா இன்னொரு க்ரூப் நாடகக்காதல்...வில்லன்கள் பன்னிக்கறி சாப்புடறது....பச்சை பச்சையா பேசறது....சாதி பெரியவங்க போட்டோ பெருசா காட்டுறது, பாட்டு வெக்கிறது...இப்படி....இன்னொரு பக்கம்னு...வைக்கலாமா...?"
"யோவ்.....குறியீடாவது மயிராவது..! எல்லாத்தையும் அப்படியே நேரா காட்டு...!"
"இல்ல...பிரச்சனை வந்திருமே...ன்னு..."
"என்ன பயந்து பயந்து படம் எடுக்குற நீ...யு ஆர் அன் ஆன்ட்டி இந்தியன்..!"
Probably, இந்த சம்பாஷணையின் வெளிப்பாடாக படம் இருந்திருக்கலாம் போல.
ஒருசில வசனங்களும் காட்சிகளும்-
---------------
குடித்துவிட்டு பொண்டாட்டியை அடிக்கும் குடிகாரன் ஒருவனிடம்,
"இனிமே குடிப்பியா..?"
"ஆமா..எனக்கென்ன கவலை..?? எங்க அப்பா ஆட்சி நடக்குது..எங்கப்பா ஆட்சில....." அவன் சொல்லுமுன்னேயே சப்ப்ப்பென்று அறை.!
-----------------
காதல் ஜோடிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உட்கார்ந்திருக்க,
"டேய்..நம்ம வீட்டு பொண்ணோட அந்த நாயி உக்காந்திருக்கு பாரு..!"
"இவனுங்கள எல்லாம் ஊருக்குள்ள விட்டதே தப்பு..!"
------------------
குடியும் போதையுமாய் இளசுகள் உக்காந்திருக்க அவர்களைப்பார்த்து ஒருவன்,
"டேய்..சுகமா இருக்கா..? இப்புடித்தான்டா..மேப்படியான் ஊட்டு பொண்ணுங்கள காதலிச்சு அவளுங்க வயித்த ரொப்பணும்..! அப்பதான்டா சாதி ஒழியும்..!"
---------------------
கூட்டத்தின் நடுவே ராஜா உக்காந்திருக்க, குண்டாய் கருப்பாய் ஒரு பெண் சாராய வியாபாரி வருகிறாள்-
"ஓ...நீ இந்த அடங்க மறு அத்து மீறு கூட்டம்தானே..!"
"யோவ்..ஒழுங்கா பேசு..! நிக்க வெச்சு பேசுறியா என்ன...?"
"உக்கார சொல்லலாம்..ஆனா இங்க பிளாஸ்டிக் சேர் இல்லியே.!!"
(By the way, அவரே பிளாஸ்டிக் சேரில் தான் உட்கார்ந்திருப்பார்!)
--------------------
அதே காட்சியில்,
"பன்னி மேய்க்கிற கூட்டம்தானே நீங்க..?"
"யோவ்..! அது எங்க குலத்தொழில்...!"
"ஓஹோ..நீங்க குலத்தொழில் பண்ணலாம்..ஆனா அதையே நாங்க பண்ணினா..விஸ்வகர்மான்னு சொல்லிக்கிட்டு குடும்பத்தொழில் பன்றானுங்கன்னு நக்கல் பண்ணுவீங்க..?"
------------------------
கோவில் பணத்தை கணக்குக்கேட்டு வந்து கோவில் நிர்வாகியை அடிப்பவர்களிடம்,
"யாருயா நீங்கல்லாம்...?"
"இந்து அறநிலையத்துறை ஆளுங்க..!"
"ம்ஹ்ம்ம்....யோவ்..நீங்கதான் இந்துக்களே இல்லங்கறீங்களே...அப்புறம் என்ன அதுக்கு ஒரு இலாகா..? இந்துவே இல்லன்னும்பானுங்க..ஆனா அதுக்கு ஒரு அறநிலையத்துறை வெச்சு காச சுருட்ட வேண்டியது.!"
------------------------
பஞ்சாயத்து காட்சி ஒன்றில்..
"நல்ல வேலை...ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கோம்..பெரியார் மட்டும் இல்லனா....."
"வந்துட்டானுங்க..கருப்பு சட்டை மாட்டிகிட்டு அடுத்தவன் குடியை கெடுக்க...! உடுமலைப்பேட்டைல செத்துப்போன ஒருத்தன் பொண்டாட்டிக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணி வெச்சானுங்க..அப்புறம் அத்து விட்டானுங்க..இப்ப அவ எவன்கூட இருக்கா ன்னு எவனுக்குமே தெரில..!"
------------------------------
குடியால் கணவனை இழந்த பெண் தன்னிடம் வந்து முறையிடும்போது,
"என்கிட்டே ஏம்மா கேக்கறீங்க..? இனி விதவைகளே தமிழ்நாட்டுல இருக்காது...தீவிர மதுவிலக்கு கொண்டு வருவோம்னு உங்ககிட்டலாம் உருட்டி எம்.பி ஆனாளே தேன்மொழி(தேன்..?)....அவகிட்ட போயி கேளுங்க.!!!!"
------------------------------
இதுபோல் நிறைய காட்சிகள்/வசனங்கள். மற்றபடி குறியீடு, போட்டோ, Symbolism, Metaphor, அவ்வளவு ஏன்...கதை திரைக்கதை என்று கூட எதுவுமே காட்டவில்லை.
சொல்ல வரும் ஒரே விஷயம்,
"எங்ககிட்டயும் ஆளு இருக்கு.!"
---------------------------
ரொம்ப ரொம்ப Observe பண்ணிப்பார்த்தால், ஒரே ஒரு குட்டி விஷயம் நெஞ்சைத் தொட்டது. ஹீரோயினை காதலிக்கும் அந்த தலித் பையன், தன்னை கொலை செய்யப்போகும் தன்னுடைய ஆட்களிடமே இப்படிச்சொல்லுவான்-
"அண்ணா..சாதி ஒழியணும்னு தான் காதல் பண்ணேன்..மனசார காதல் பண்ணேன்...அவ வயித்தை ரொப்புறதுக்காக இல்ல.!
No comments:
Post a Comment