Wednesday, March 24, 2021

பெரும்பாக்கம், சித்தர் மலை சிவ லிங்கத்தை அகற்றல் கிறிஸ்துவ அரசு அதிகாரி அராஜகம்

சென்னை மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம், அரசன்கழனி, சித்தாலபாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய ஊர்களையும், போலினேனி ஹில்சைட் (Bollineni Hillside) போன்ற நவீன குடியமைப்பு நகரங்களின் நடுவில் அமைந்துள்ளது ஔடத சித்தர் மலை.  25 ஆண்டு முன்பாக  சிவலிங்கம் கிடைக்க கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்தது.

பக்தர்கள் அங்கு விமர்சையாக வழிபாடு செய்கிறார்கள் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி அன்று கிரிவலம் என்பது இங்கு மிகவும் பிரபலம்.  இந்த கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது எனக் காரணம் காட்டி கிறிஸ்தவ மத வெறி பிடித்த அலெக்ஸாண்டர் என்ற அதிகாரி அந்த சிவலிங்கத்தை அகற்றிட பக்தர்கள் & இந்து முன்னணியின் சங்பரிவார் அமைப்புகள் போராட மீண்டும் அங்கு சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது

இதே வனப்பகுதியில் ஒரு சர்ச்சும் சட்டவிரோதமாக  கிறிஸ்தவர்கள் கட்டியுள்ளனர்; ஜெபக்கூடம் என கூச்சல் போடுகின்றனர் என பத்திரிக்கை செய்தி காட்டுகிறது.  கிறிஸ்தவ மத வெறி அலெக்சாண்டரின் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை.  

பாதிரி எஸ்றா சற்குணம் தன் நூலில் வள்ளுவர் கோட்டம் அருகே அரசு நிலத்தை நாங்கள் ஆக்கிரமித்து சர்ச் கட்டினோம் என வாக்குமூலம் தந்துள்ளார். 

கிறிஸ்துவ பைபிள் கதைகள் முழுவதும் கட்டுக்கதை; இஸ்ரேலில் எந்தவிதமான இறைவன் வெளிப்பாடும் நிகழவில்லை பைபிள் தொன்மக் கதைகள் மனித கற்பனை கட்டுக்கதை என இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் கூறுகிறது.

நேற்றைக்கு (21/3/2021) மேடவாக்கம் பகுதி பெரும்பாக்கம் மலையில் உள்ள சிவலிங்கத்தை கிறித்தவ வனத்துறை அதிகாரி ஒருவர் அராஜாகமாக மலை மேல் உள்ள சிவலிங்கத்தை உடைத்து வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்துள்ளனர். இதை கேள்விப்பட்ட RSS மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பலரும் சேர்ந்து உடனடியாக வனத்துறை அலுவலகத்திற்கு சென்று சிவலிங்கத்தை திரும்ப தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அந்த பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் அவர்கள் தலையிட்டு சிவலிங்கத்தை அந்த கிறித்தவ வன அதிகாரியிடமிருந்து பெற்றுத் தந்தார். சிவலிங்கத்தை திரும்ப பெட்ற மகிழ்ச்சியுடன் பொது மக்கள் அனைவரும் சேர்ந்து மீண்டும் அந்த சிவலிங்கத்தை அதே மலை மீது பிரதிஷ்டை செய்து வணங்கி விட்டு வந்தனர். ஹிந்துக்கள் ஒன்று பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்

சித்தர் மலை லிங்கத்தை அகற்றிய வனத்துறை பக்தர்கள் போராட்டத்தால் மீண்டும் பிரதிஷ்டை   

https://www.dinamalar.com/news_detail.asp?id=2736628


பெரும்பாக்கம், சித்தர் மலையில் இருந்த சிவ லிங்கத்தை, வனத்துறையினர் பெயர்த்து எடுத்து சென்றதால், பெரும் பிரச்னை வெடித்தது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு பின், லிங்கம் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சென்னை, மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி, பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், நுக்கம்பாளையம் நடுவே, சிறிய மலை உள்ளது. அது, சித்தர் மலை எனவும் அழைக்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன், அந்த மலை மீது ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள், மலை உச்சியில் புதைந்திருந்த சிவ லிங்கத்தை கண்டு, ஊர் பெரியவர்களிடம்தகவல் கொடுத்தனர்.அங்கு சென்ற ஊர்மக்கள், மலையில் ஏற்கனவே சிவன் கோவில் அமைந்திருக்கலாம், இயற்கை சீற்றத்தால் அது அழிந்திருக்கலாம் என கருதினர். பின், அந்த சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில், மேலும், இரண்டு சிவ லிங்கங்களும், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன.    

அதற்கு, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் என பெயரிட்டு வழிபாடு நடந்தது. பிரதோஷம், சிவராத்திரி விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக அந்த மலையை சுற்றி, பக்தர்கள் கிரிவலம் வர ஆரம்பித்தனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த மலையின் கீழ் பகுதியில், சர்ச் கட்டப்பட்டது. வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, சர்ச் கட்டப்பட்டதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கிரிவலம் செல்லும் பக்தர்களை, சர்ச் உறுப்பினர்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழந்தது.

சமீபத்தில், மகா சிவராத்திரி அன்று ஏராளமான பக்தர்கள், பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். நுாற்றுக்கணக்கானோர் கிரிவலமும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், திடீரென வனத்துறையைச் சேர்ந்த அலுவலர் அலெக்சாண்டர் என்பவர், மலையில் இருந்து சில லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றுள்ளார்.

இத்தகவல், காட்டு தீயாக பரவியது. மலைக்கு கீழ் உள்ள சர்சுக்கு ஆதாரவாக, சிவ லிங்கம் அகற்றப்பட்டதாகக் கூறி, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் வனத்துறையை முற்றுகையிட்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பக்தர்களும் பங்கேற்றனர்.

தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர்.இதையடுத்து, சிவ லிங்கம் வழங்கப்பட்டு, மலையில் பிரதிஷ்டை செய்யவும், வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.லிங்கத்தை பெற்ற பக்தர்கள், மீண்டும் மலையில் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தினர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்னைக்கு தீர்வு

போலீசார் தரப்பில் கூறிய தாவது:சம்பந்தப்பட்ட மலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, புதிதாக ஏதேனும் சிலை வைத்தால், அனுமதி பெற வேண்டும். ஆனால், வனத்துறை அனுமதி இல்லாமல், புதிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

எனவே, வனத்துறையினர் லிங்கத்தை கொண்டு சென்றனர். தற்போது, மீண்டும் அங்கேயே லிங்கம் வைக்க அனுமதி வழங்கியதால், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வரலாற்றை கண்டறிய வேண்டும்!

சித்தர் மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் குறித்தும், அம்மலை மற்றும் லிங்கத்தின் வரலாற்றை கண்டறியப்பட வேண்டும் எனவும், ஆன்மிகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, ஆன்மிகவாதிகள் கூறியதாவது:தமிழகத்தின் தொண்டை மண்டலம், சிவஞானம் விளைந்த பூமியாக திகழ்கிறது. அதிலும், தென்சென்னை பகுதி,

சித்தர்கள் இருப்பிடமாக திகழ்ந்து உள்ளது.பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள சித்தர் மலையில், இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நம்பப்படுகிறது.சித்தர்களின் இருப்பிடமாக இருந்த அந்த இடம், சித்தர்பாக்கம் என அழைக்கப்பட்டது.

பின்னாளில், இது மருவி, சித்தாலப்பாக்கம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சித்தர்கள், ஞானிகள் சிவபூஜை செய்ய, பெரிய சோலையாகிய நந்தவனத்திற்குச் சென்று பூக்கள் பறித்து வந்ததால், அந்த இடம் சோலையூர் என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அது சேலையூராக மருவியது.

கபில முனிவர் பூஜித்த மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர்; அதனருகில், 18 சித்தர்களுக்கும் கோவில்; ஆயிரம் ஆண்டுகள் பழமையான பள்ளிக்கரணை அகத்தீஸ்வரர்; அரசன்கழனி பசுபதீஸ்வரர்; ஒட்டீஸ்வரர் கோவில் என, இந்த மலையை சுற்றி ஏராளமான சிவன்

கோவில்கள் அமைந்துள்ளன. எனவே, அந்த சித்தர் மலையில் கண்டு எடுக்கப்பட்ட சிவ லிங்கம், மிகவும் பழமை வாய்ந்தது. அதன் வரலாற்றை கண்டறிய வேண்டும். சித்தர்களால் பூஜிக்கப்பட்டதாக கருதப்படும் அந்த இடத்தில், கோவில் கட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- -நமது நிருபர்- -

சென்னையில் ஒரு கிரிவலம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தமிழ் வழக்கு. ஆற்றல் உள்ள மலைகளை சிவமாகவே வணங்கி வலம் வருவதும் நம் மரபு. அவ்வாறாக இந்தியாவில் பல்வேறு மலைகளை சிவமாக வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஒரு மலை சென்னை மாநகரிலும் உள்ளது. 

சென்னை மாநகரின் மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம், அரசன்கழனி, சித்தாலபாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய ஊர்களையும், போலினேனி ஹில்சைட் (Bollineni Hillside) போன்ற நவீன குடியமைப்பு நகரங்களின் நடுவில் அமைந்துள்ளது ஔடத சித்தர் மலை.

 இந்த மலையின் மீது பன்நெடுங்காலமாக சிவபெருமான் இலிங்க வடிவாய் எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார். நிறைய பக்தர்கள் இம்மலை மீது இருக்கும் சிவபெருமானைத் தரிசித்து அபிஷேக வழிபாடு செய்து வருகிறார்கள்.

இம்மலை மீது கார்த்திகை தீபத் திருநாள் அன்று, திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் முழுமதி/நிறைமதி/பௌர்ணமி தினத்தன்று மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றளவு உள்ள இந்த மலையை ஒரு முறை வலம் செய்ய 1 மணி நேரம் 15 நிமிடங்களும் ஆகிறது. மலை மீது ஏற சுமார் 20-30 நிமிடமும், இறங்க சுமார் 15-20 நிமிடங்களும் ஆகிறது.

நீங்களும் முழுநிலவு நாளில் இந்த மலையை மலைவலம் (கிரிவலம்) வந்து பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானின் தரிசனத்தைக் கண்டு அவனருள் பெற வாருங்கள்.

ஒரு பெரும் குழு தற்போது ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் மலைவலம் செல்கிறது. இந்த குழுவோடு இணைந்து நீங்களும் மலைவலம் செல்ல நீங்கள் அரசன்கழனி கல்யாண பசுபதீசுவரர் கோவிலுக்கு சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடவும்.

கோவிலை அடையும் வழி

மேடவாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 51B பேரூந்து சைதாப்பேட்டை, மேடவாக்கத்திலிருந்து அரசன்கழனி நிறுத்தத்தில் நிற்கும். இறங்க வேண்டிய இடம் அரசன்கழனி பஸ்டாப். தாம்பரத்திலிருந்து 51K பேரூந்து இந்த நிறுத்தத்தில் நிற்கும்.

ஒவ்வொரு முழுமதி அன்றும் வாருங்கள்.

அரசன்கழனி பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ள இடம் – இதை சுட்டவும்

மேலும் தகவல்களுக்கு: +91-8122299938, +91-9382664059 அழைக்கவும்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா