திமுக: பினாமிகளும் பேமானிகளும் – பகுதி 1
02/05/2011
https://othisaivu.wordpress.com/
நாம் திருடர் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான ‘அண்ணா அறிவாலயம்’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.
அதில் இருந்த ஊழல் மிகு ‘சன் டிவி’ பற்றி அறிவோம். அண்மையில் சிபிஐ -யால் சோதனைக்குட்படுத்தப் பட்ட அங்கிருக்கும் பொறுக்கி கலாச்சாரம் பரப்பும் ‘கலைஞர் டிவி’ பற்றியும் அறிவோம்…
ஆனால் ஏறக் குறைய 20 ஆண்டுகள் முன்பு வரை அங்கிருந்து ‘இயங்கிக்’ கொண்டிருந்த Maxwell Exim, Satyam Foods மற்றும் MVR Exports பற்றி அறிவோமா? (இந்தக் கம்பெனிகளின் அலுவலக முகவரியாக அண்ணா அறிவாலயம் இருந்தது! என்ன தைரியம்!!)
இவற்றின் பின் MV வரதராஜுலு என்பவர் இருந்தார் – இவர் அக்காலங்களில் மிகுந்த சக்தி படைத்தவராக இருந்தார். சக்தி என்றால் அப்படிப்பட்ட சக்தி – வங்கிகளிடமிருந்து பிரமிக்கத்தக்க அளவு கடன் பணம், மாபெரும் ‘ஏற்றுமதி – இறக்குமதி’ சம்பந்தப்பட்ட சந்தேகாஸ்பதமான தொழில்கள் – முந்திரியிலிருந்து யுத்த தளவாடங்கள் வரை; சர்வாதிகார நாடான சிங்கப்பூரில் பலப்பல நிறுவனங்கள். ஐரோப்பாவில் தொழில்கள். அரசியல் வாதிகளிடம் – GK மூப்பனார் உட்பட, உயர்கட்டத் தொடர்புகள்; அதிகார வட்டங்களில் அலட்டல்கள்… ஹவாலா பணப் புழக்கங்கள்…
அடிப்படையில் ‘சாமானியனாக’ இருந்த இந்த MVR, மிகக் குறைந்த காலத்தில் மிகுந்த ‘நிதி’ சேர்த்தது, எதையும் தாங்கும் இதயத்தைப் படைத்த எனக்கே, அப்போது மிகுந்த ஆச்சரியத்தை விளைவித்தது.
இந்த பினாமியால் நம் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் பல ஆயிரம் கொடிகள்.. நேரடி ஊழல்கள் சில ஆயிரம் கொடிகள். இதில் அதிக அளவு குளிர் காய்ந்த மிக முக்கியமான நபரும் நமக்குத் தெரிந்தவரே…
இந்த MV வரதராஜுலு யார்?
இருவார்த்தைகளில் சொல்வதானால்: கருணாநிதியின் பினாமி. (அய்யய்யோ, மன்னிக்கவும் – இவர் கருணாநிதியின், பல பினாமிகளில் ஒருவர்!)
ஒத்திசைவு படிக்கும் உங்களுக்கு, கருணாநிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளும் அவர்கள் நேரடியாக சுருட்டுவது / சுருட்டியது போதாது என்று, பல தரப் பட்ட மக்களையும் தங்கள் ஊழல் பணிகளில் இணைத்து அன்புடன் அவர்களை ஈடுபடுத்தி, தமிழகத்தினை முன்னேற்றப் பாதையில் முன்னெடுத்துச் செல்வது குறித்து நன்றாகத் தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன். இந்த MVR மனிதரும் இப்படி நம் இரண்டாம் ராஜராஜசோழனால் கொணரப் பட்டவர்தான்…
கருணாநிதி போல, இந்த உதிரி MVR-ம் திருவாரூர் பக்கத் தோன்றல் தான். இவர் தன் இளம் வயதில் என்ன செய்து கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. திடீரென்று வெடித்தெழுந்தார், சுத்த சுயம்புவாக – பணம் பல கோடிகள் பண்ணினார்.
யோசித்துப் பார்த்தால், நம் கருணாநிதியும் இப்படித்தான் – இளம் வயதில் ததிங்கிணத்தோம் போட்டுக்கொண்டு சினிமா கதை வசனம், நாடக வசனம் எழுதிக் கொண்டிருந்தவர் தான். சிறு அளவில் ஜேப்படிக்காரராக இருந்தவர் தான் – இவரும் பிற்காலத்தில் எப்படி பல்லாயிரக் கோடிகளுக்கு அதிபரானார் என்பதும் ஒரு ஆச்சரியம் தான்!
யோசியுங்கள் நண்பர்களே!
- ராஜீவ் காந்தி பிசாத்து 60 சொச்சம் கோடிகளுக்காக பதவியையும், ஏன் உயிரையும் இழந்தார்.
- குவாட்ரோக்கி – பெற்றது கூட இதனை விட மிகவும் குறைவுதான் – முப்பது கோடிகள் தான்!
- லாலு பிரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் கூட நாற்பது கோடிகள் தான்.
- ஆனால், இந்த MVR செய்த ஊழல் மொத்தம் பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல். இவருடைய சூத்திரதாரி அதற்கும் மேல் பற்பல மடங்கு. இவர்கள் எல்லோரும் வெளியில் சந்தோஷமாக இருக்கிறார்கள்…
நான் ராஜீவ் காந்தி, லாலு போன்றவர்களை உத்தமர்கள் என்று சொல்லவில்லை…
நாம் திருவாளர் MVR அவர்களிடம் வருவோம். இவர் எப்படி சுயம்பு பலகோடீஸ்வரர் ஆனார்? எப்படி மாட்டிக் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக கிரிமினல் வேலைகளைச் செய்தார்? அது ஒரு நூதனமான முறை. அறிவியல் பூர்வமானது. அயோக்கியத் தனமானது.
‘முந்திரிகுமாரன்’ (திமுக: பினாமிகளும், பேமானிகளும் – பகுதி 2)
04/05/2011
திருவாளர் புரட்டுத் தலைவர் MVR அவர்கள் எப்படி அதி நூதனமாகக் கொள்ளை அடித்து, தன் தானைத் தலிவனுக்கு, தமிழ் வேளுக்குக் கொடுத்தது போக திமிறிக் கொண்டு தனக்கும் ‘சிறிது ஈந்துக் கொண்டார்’ என்பதை இனி பார்ப்போம்.
ஏறக் குறைய 20 ஆண்டுகள் முன்பு வரை அண்ணா அறிவாலயத்திலிருந்து ‘இயங்கிக்’ கொண்டிருந்தன Maxwell Exim மற்றும் MVR Exports எனப் பெயரிடப்பட்ட நிறுவனங்கள்.
நண்பர்களே, நீங்கள் அறிந்து இருக்கலாம் – பண்ருட்டி, விழுப்புரம், பாண்டிச்சேரி அருகிலுள்ள வட்டாரங்கள் (தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்கள்) முந்திரிக் காடுகள் நிறைந்தவை. உங்களுக்கு இம்மாதங்களில் (ஏப்ரல் மே ஜூன்), இப்பகுதிகளில் பயணம் செய்யும் பேறு கிடைத்தால் முந்திரிக்காடுகளிளிருந்து வரும் மனம் கிறங்க அடிக்கும். இங்கிருந்து தான் தொடங்குகிறது முத்துக்ருஷ்ணன் வரதராஜுலு + முத்துவேல் கருணாநிதி கம்பைன்ஸ் – இன் அறுவடை…
=-=-=-=
முந்திரிப் பழம் என்று நாம் அழைப்பது தாவரவியல் ரீதியாக பழமே இல்லை. அதன் கொட்டையைத்தான் பழம் என்று சொல்ல முடியும். இப்பழம் பெரும்பாலும் தமிழகத்தில் உண்ணவோ, உபயோகமோ செய்யப்படுவதில்லை. கோவா போன்ற இடங்களில் செய்வது போல மதுபானம் (ஃபெனி) கூடத் தயாரிக்க உபயோகப் படுத்தப் படுவதில்லை. நாம் அதன் கொட்டையின் விதையை (cashew kernel என்று இதைச் சொல்வார்கள்) மட்டும்தான் புசிக்கிறோம்.
இப்பழக்கொட்டையின் தடிமனான கரும்பழுப்பு நிற மேல்தோல், அதனுள் ஒரு விதமான, அமிலம் போன்ற எண்ணெய் உட்கொண்டுள்ளது. இதன் பெயர் CNSL (Cashew Nut Shell Liquid) – முந்திரிப் பருப்புத் தோல் எண்ணெய். இந்த எண்ணெய் ஒரு மதிப்பு வாய்ந்த ரசாயனமாகும். எவ்வளவோ மதிப்புக் கூட்டப்பட்ட ரசாயனங்கள், இதிலிருந்து தயாரிக்கலாம்.
ஆனால், கருணாநிதி வழக்கமாகச் சொல்வது போல, ‘நான் தாவரவியல் ரீதியாக முந்திரிக்குள் புக விரும்பவில்லை’ – முந்திரியால் நம் முக்கிய மந்திரி ‘பெற்றதைப்’ பற்றித் தான் இவ்விடுகை. மேலும் ஒத்திசைவு வாசகர்களுக்குத் தெரியும், இந்தக் கருணாநிதி எப்படி பழத்தையும் தின்று கொட்டையையும் அமுக்கி விடும் ஆளென்று.
=-=-=-=
உலக அளவில், இந்தியா தான் முந்திரியை மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்கிறது – ஏறக்குறைய உலகத்தின் 40 % முந்திரி இங்கு தான் விளைகிறது. உலக ஏற்றுமதி அளவில் இந்திய முந்திரி 60% பங்கு வகிக்கிறது. சொல்லப் போனால், 80-90களில் தான் இந்திய முந்திரி இப்படியொரு அசுர வளர்ச்சி அடைந்தது – இதற்கு முக்கியமான காரணங்கள்: இந்திய அரசு கொடுத்த ஊக்கமும், வேளாண் பல்கலைக்கழகங்களின் வழிகாட்டுதல்களும், விவசாயிகளின் உழைப்பும்…
முந்திரியின் வணிக மதிப்பு மற்றும் உலகளாவிய தேவை பற்றி – இந்திய வேளாண்மை நிறுவனங்களுக்கு தெரிந்ததோ இல்லையோ, ஒழுங்காகத் தொழில் முனைவோர் இதனால் மிக ஊக்கம் பெற்றார்களோ இல்லையோ, நம் தமிழ் தானைத் தலைவரும், உதிரி அரசியல் வாதிகளும் இதன் மேல் தங்கள் ஊழல் கண்களைப் படிய விட்டனர்…
உங்களுக்கு முன்னமே தெரிந்ததுபோல் MVR அடிப்படையில் நம் தன்மானத் தமிழரின் ஊர்க்காரர். கொஞ்சம் கிரிமினல் மூளையும் உள்ளவர். ஆங்கிலம் பேசி அதிகார வட்டங்களில் வளைய வருபவர். தேவை ஏற்பட்டால் GK மூப்பனாரையும், இதர கருணாநிதி இன்னபிற உதிரிப் பெயர்களை உதிர்த்து காரியங்களைச் சாதித்துக்கொள்பவர்.
மேலும், டாக்டர் கலைஞர் தமிழவேள் ராஜராஜசோழ கருணாநிதியை நன்றாகத் ‘தெரிந்ததினால்’ அண்ணா அறிவாலயத்திலேயே அயோக்கிய அலுவலகம் ‘நடத்தியவர்.’ அறிவியல் பூர்வமாக ஊழல் செய்ய தன் தானைத் தலைவரால் தயார் செய்யப் பட்டவர். அவர் தலைவர் போன்றே, தேனை எடுத்து, புறங்கையை மட்டுமே நக்கியவர். நக்கியதே பல்லாயிரக் கணக்கான கோடி என்றால், தலைவர் எவ்வளவு அமுக்கி முழுங்கியிருப்பார் என எண்ணிப் பாருங்கள்!
(அல்லது)
கலைஞரின் திரைக்கதை வசனத்தில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்களில் தயாரிக்கப் பட்ட திகில் படம்
‘முந்திரிகுமாரன்’
- அரசு அறிவித்த சலுகைகளைப் பயன்படுத்தி முந்திரித் தொழில் தொடங்குவதாக திட்டம் போடுவது.
- வெறுங்கையால், ஒரு பைசா மூலதனமில்லாமல் முழமல்ல, பலநூறு கிலோமீட்டர் போடுவது
- அரசியல் சக்திகளையும் ஊழல் வங்கி அதிகாரிகளையும் உபயோகப் படுத்தி வங்கிகளிடமிருந்து மாபெரும் அளவில் கடன் வாங்குவது.
- இந்திய அரசு நிறுவனங்களிலிருந்து subsidy வாங்குவது
- ஏழைபாழை விவசாயிகளிடமிருந்து முந்திரியை (அதிக விலை ஆனால் கடனில் / கிரெடிட்-இல்) வாங்குவது – ஆனால் குறைந்த அளவு பணமே கொடுப்பது – கடைசியில் விவசாயிகளுக்கு வேண்டிய பணம் அறவே கொடுக்காமல் அவர்களை போண்டி ஆக்குவது
- CSNL தயாரிக்கிறேன் பேர்வழி என்று அரசுப் பணத்தில் தொழிற்சாலைகள் தொடங்குவதாக பாவ்லா செய்வது – அதனை சுருட்டுவது
- முந்திரி, CSNL ஏற்றுமதி செய்கிறேன் – ஆகவே முன்பணம் கொடுத்து நான் விவசாயிகளிடம் இவற்றை வாங்க வேண்டும் என்று பொய் சொல்லி வங்கிகளிடம் கடன் வாங்குவது.
- நைஜீரியா போன்ற பாவப்பட்ட நாடுகளில் பினாமி ‘letterpad’ நிறுவனங்கள் அமைத்து, அங்கிருந்து அடிமாடு விலைக்கு முந்திரி வாங்கி விற்பது (பின் நம் விவசாயிகளை விட அவர்களை மோசமாக ஏமாற்றி மொட்டை அடிப்பது)
- இப்படிப் பணம் கொடுக்காமல் (உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும்) பெறப்பட்ட ஸ்டாக்-கிற்கு பணம் கொடுக்கப் பட்டதாகக் கணக்குக் காட்டி இந்தியன் வங்கியிலிருந்து பணம் சுருட்டியது
- சிங்கப்பூர், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பினாமி ‘letterpad’ நிறுவனங்கள் அமைத்து அவைகளுக்கு அங்கேயே வங்கிக் கணக்கு ஆரம்பித்து – இந்த நிறுவனங்கள் தமிழகத்தில், அண்ணா அறிவாலயத்தில் இருந்த MVR-ன் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுப்பது
- மேலும், இந்த வெளிநாட்டுக் கம்பெனிகள் – MVR முந்திரி மிக நல்ல தரமாயுள்ளதால் அதற்கு, பொதுவான உலக மதிப்பை விட மிக அதிகமாக விலை கொடுக்கவேண்டும் (இருபதிலிருந்து எண்பது சதம் அதிகமாக) என்று – LC (லெட்டர் ஆஃ ப் கிரெடிட்) பல திறந்து ஆர்டர் கொடுப்பது.
- இந்த LC-க்களை வைத்துக் கொண்டு அண்ணா அறிவாலயக் கம்பெனிகள் தங்கள் இந்தியாவிலுள்ள இந்தியன் வங்கியில் கடன் மேலும் பெறுவது (இது எதற்கு என்றால், கச்சா முந்திரிகளை வாங்குவதற்காம்!)
- இந்தியாவிலிருந்து பொய் விவரம் கொடுத்து தங்களுடைய letterpad நிறுவனங்களுக்கு ‘ஏற்றுமதி’ செய்வது (எ.கா: அதாவது 100 ரூபாய் பொருளை 150 ரூபாய் என்று invoice போடுவது; ஒரு டன் அனுப்புகிறேன் என்று எழுதிக் கொடுத்து அரை டன் அனுப்புவது)
- இந்த பொய் விவரத்தின் பேரில் இந்தியாவில் வங்கிகளிடமிருந்து மேலும் கடன் வாங்குவது
- இச்சமயம், வெளிநாட்டு கம்பெனிகள் மூலம் முந்திரி விற்று அங்கேயே மொத்தப் பணத்தையும் திருட்டு ஸ்விஸ் வங்கிகளில் போட்டுவிடுவது
- இதே வெளிநாட்டு பினாமி நிறுவனங்கள் மூலம், இந்திய அண்ணா அறிவாலய பினாமி நிறுவனங்களுக்கு ‘உங்கள் தரம் சரியில்லை, ஆகவே உங்களுக்குப் பணம் தர முடியாது’ என்று சொல்ல வைப்பது.
- பல மாதங்களுக்கு எந்த வங்கிக் கடனையோ அல்லது பாவப்பட்ட விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையோ, அல்லது தங்கள் தொழிற்சாலைகளில்(!) வேலை செய்தவர்களுக்கு ஊதியமோ கொடுக்காமல் – நாங்கள் ஏற்றுமதி/விற்பனை செய்த முந்திரி / CSNL தரமானதாக இல்லை என்பதால் நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம் என்று எல்லாருக்கும் ‘அண்ணா நாமம்’ போடுவது
- கொஞ்சம் சந்தடி அடங்கியவுடன் மேலும் சில letterpad கம்பெனிகள் ஆரம்பிப்பது! மேற்கண்ட மாதிரியே ஈனத்தொழில் தொடங்குவது…
… தொடரத் தொடர வேதனை மிகும்.
இதை விட யாராவது அறிவியல் பூர்வமாக ஊழல் செய்ய முடியுமா? கலைஞர் அவர்களுக்கு ஏன் இன்னமும் எகனோமிக்ஸ் நோபெல் பரிசு கொடுக்கவில்லை? குறைந்த பட்சம் ‘பாரத ரத்னா’ கூட கொடுக்கப் படவில்லையே! ஐயகோ!! இவர் ஒரு சாமானியன் என்பதால் தானே…. …. ….
=-=-=-=
இந்த ஊழலின் விஸ்தீரணம் பற்றி பல விதமான எண்கள், எண்ணிக்கைகள் உலா வந்தன. மேலும் இது 20 வருடங்கள் முன் நடந்த கோரம். மக்களின் நினைவில் இவ்விஷயங்கள் தங்கியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே, நான் இங்கு சில தோராயமான எண்ணிக்கைகளைக் கொடுக்கிறேன்.
இந்தியன் வங்கிக்கு மட்டும் இந்த MVR பினாமியால் சுமார் 1100 கோடி ரூபாய் நஷ்டம் (இதில் சுமார் 130 கோடியை இந்தியன் வங்கி மீட்க முடிந்தது என்று நினைவு) – தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு சுமார் 340 கோடி ரூபாய் நஷ்டம். இந்திய விவசாயிகளுக்கு 400 கோடி நஷ்டம். வெளிநாட்டு ஆப்பிரிக்க விவசாயிகளுக்கு 150 கோடி ரூபாய் நஷ்டம்.
நிகர லாபம் எல்லாம் பாவம் கருணாநிதி மற்றும் அவர் பினாமிகளின் தலையில் தான் விழுந்தது… ஐயோ பாவம்…
இவை எல்லாம் அப்போதைய மதிப்பில் – இப்போது இவற்றுக்கு மதிப்பு நான்கிலிருந்து ஐந்து மடங்கு இருக்கும் – அதாவது இன்றைய கணக்கில் சுமார் 9000 கோடி ரூபாய்கள்!
=-=-=-=
நமக்கு நம் தொழில் முனைவர் கருணாநிதி என்ன ஆனார் என்று தெரியும். எவ்வளவு தண்டனை அனுபவித்தார் இந்த முக்கியமுந்திரி, முனகியமுந்திரி…
பாவம் மூன்று முறை முதலமைச்சர், இந்த தள்ளாத வயதிலும் அவர் தள்ளுவண்டியில் வந்து அடுத்த முறையும் நான்தான் முதலமைச்சரா என்று கதறுகிறார்…
அவர் குடும்பத்தினரும் பரிவாரங்களும் இப்பொழுதும் கூட சில லட்சம் கோடி சொத்துக்கள் தான் உடையவர்களாக இருக்கின்றார்கள். அந்தோ பரிதாபம்! எங்கு இருக்கவேண்டிய குடும்பம், எங்கு இருக்கிறது…
ஹ்ம்ம்…
ஓ மறந்து விட்டேனே… இந்தச் செல்வப் பெருந்தகை MVR என்ன ஆனார் என்று தெரியுமா? (அடுத்த பகுதியில் முந்திரிகுமாரன் கதை தொடரும்…)
பி .கு: மூப்பனார், MVR உடன் தொடர்பு வைத்திருந்தது பற்றி சில செய்திகள் அப்போதும் வந்தன. இருந்திருக்கலாம். அவர் ஆனால் ஊழல் பணம் பெற்றதாகச் சொல்ல முடியாது என நினைக்கிறேன். மேலும் இப்போது GK வாசன் கோடிக்கணக்கான ஊழல் பணத்தில் மிதப்பதாகத் தெரியவில்லை. மூப்பனாரின் மூன்றாம் தலைமுறை வழித்தோன்றல்கள் திரைப்படம் எடுப்பதாகவும் தெரியவில்லை.
திமுக மு.கருணாநிதியின் பினாமிகள், ‘அண்ணா அறிவாலயம்’ முகவரியிலிருந்தே லெட்டர்பேட் நிறுவனங்களை நடத்தி முந்திரி/ஆயுதக் கடத்தல் ‘வியாபாரம்’ செய்தார்கள்!
23/03/2021
…இது தெரியுமா உங்களுக்கு?
திமுக: பினாமிகளும் பேமானிகளும் – பகுதி 1 – https://othisaivu.wordpress.com/2011/05/02/post-23/
‘முந்திரிகுமாரன்’ (திமுக: பினாமிகளும், பேமானிகளும் – பகுதி 2) – https://othisaivu.wordpress.com/2011/05/04/post-24/
இந்த அயோக்கிய திராவிடப் பாரம்பரியம் கொண்டவர்களின் வழித்தோன்றல்களா, பிற பொறுக்கிகளையும் கூட்டுக்கொள்ளைக்கு ஆள் சேர்த்திக்கொண்டுஆட்சியமைக்கும் கனவுகளில் ஆழ்ந்து இருக்கிறார்கள்?
(பிரச்சினை என்னவென்றால், நாம் கொறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தால் – அப்பொறுக்கிகளின் கனவுகள் நிறைவேறியே விடும்தான்!)
No comments:
Post a Comment