Friday, March 5, 2021

தமிழர் மெய்யியலை அழிக்க திமுக கூட்டணி

 
 
 



  
 

 










திருச்சியில் ஒரே ஒரு ஓட்டு.. இது தான் சீமான் கட்சியின் நிலை.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 | 
தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இதில் அதிமுகவை விட திமுக கட்சி சற்று அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டு கவுன்சிலராக நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நெ.சுனில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 

ஆனால் 10 வருடமாக உள்ள கட்சி ஒரே ஒரு கவுன்சிலர் வெற்றியை கொண்டாடி வருவதை நெட்சன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.  நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அரசியல் எந்த அளவுக்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதற்கு திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளதில் இருந்து தெரிகிறது என்றும் ஒரே ஒரு ஓட்டு என்றால் வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா? என்றும் நெட்சன்கள் கலாய்த்து வருகின்றனர். 

மேலும் சுனில் தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெற்றுள்ளதாகவும் சுயேட்சையாக போட்டியிட்டவர் கடைசி நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 10 முதல் 50 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. வெறுப்பு அரசியல், பிரிவினைவாதம், தனிப்பட்ட நபர்கள் மீதான விமர்சனம் போன்றவற்றை சீமான் மாற்றி கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Newstm.in uh

No comments:

Post a Comment