Tuesday, March 9, 2021

இயேசுவிற்கு முத்தமும் இயேசு கையால் அப்பமும் சாத்தானை தரும்

 சுவிசேக் கதையின் நாயகன் இயேசு தன் ஆட்சியில் யூதர்களின் 12 ஜாதியை நீதி பரிபாலனம் செய்ய 12 சீடர்கள் என்பதில் ஒருவர் யூதாசு இஸ்காரியோத்து. 

மத்தேயு 19:28இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள். 

இயேசு  கையால் அப்பம் தந்து ஏசு யூதாசிடம் சாத்தானை அனுப்பினார்.

 

யோவான் 13:26 இயேசு அதற்கு, “நான் இந்தத் தோய்த்தெடுத்த அப்பத்துண்டை எவனுக்குக் கொடுக்கிறேனோ அவனே எனக்கு எதிரானவன்” என்றார். பின்னர் இயேசு  அப்பத்துண்டை தோய்த்து எடுத்து, சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான்.

இயேசுவால் தேர்ந்தெடுத்து இயேசுவோடு வாழ்ந்து,  பேச்சுகளக் கேட்ட யூதாஸ்  இயேசுவால் காப்பாற்ற முடியவில்லை. இயேசுவால் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை  

  

மாற்கு 14:44 யூதாஸ் அவர்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்து வைத்திருந்தான். அதன்படி, “நான் யாரை முத்தமிடுகிறேனோ அவர்தான் இயேசு. அவரைக் கைது செய்து பத்திரமாய்க் கொண்டு செல்லுங்கள்” என்று சொல்லி இருந்தான். 


இயேசு கையால் அப்பம் வாங்கிய யூதாசு -மத்தேயு சுவிசேஷக் கதையின்படி இயேசுவின் மரணத்திற்கு முன்பே தற்கொலை செய்து இறந்தார் .  லூக்கா கதையின்படி இயேசுவின் மரணத்திற்குப்பின் தான் பெற்ற பணத்தில் வாங்கிய நிலத்தில் உடல் பெரிதாக ஊதி வெடித்து இறந்தார்

 இயேசுவின் கைது நிகழ்ந்தபோது, சீடர்கள் அனைவரும் தப்பி ஓடினர் எனக் கதை, பின்னர் ஒன்று சேர்ந்து சர்ச் தொடங்கியதாகக் கதை.  

 மாற்கு 14:50 இயேசு சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். 51.ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52.ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான். 

இயேசு வந்தவர்களை எல்லாம் தன்னோடு சேர்த்துக் கொள்ளவில்லை, தன் புதிய உலகில் நீதி பரிபாலன செய்ய தகுதியானவர் எனத்தேர்ந்த யூதாசினைப் பற்றிய சுவிசேஷம் கூறும் கதைகள்

   இயேசு தான் கைது ஆவேன் எனச் சொன்னதாகக் கதை பண்ணுவோர், யூதாசு காட்டிக் கொடுப்பன் என்றும் கதை பண்ணினர்.  

யோவான்6: 49 நமது மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப் போன்றே பூமியில் மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன்  பூமியில் என்றென்றைக்கும் உயிர் வாழ்வான்.   

யூதர்கள் இறந்த மனிதர் ஏசுவைத் தெரியும், தெய்வீகர் என்பது இல்லை எனத் தெரியும். சர்ச்சின் மதமாற்ற இலக்கு யூதரல்லாத புற ஜாதியினர். எனவே கிரேக்க மொழியில் ஏசுவை அறியாதவர்களால் புனையப் பட்டதே 
இந்த பூமியில் மனிதன் சாகக் காரணம் ஆதாம் செய்த பாவம் என கதை. ஆதி பாவம் இயேசுவின் மரணத்தினால் போய்விட்டது என்றால் இந்த பூமியில் எந்த மனிதனும் சாகக்கூடாது. இயேசு ரோமன் மரண தண்டனையில் செத்துப்போன ஒரு சாதாரண மனிதன்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா