யூத மோசேயின் நியாயப் பிரமாணம் எனும் தொன்மக் கதைகள் இன்றைய வடிவம் பொமு 130லிருந்து பொஆ 180 இடையே தான் இயற்றப் பட்டது என்பது இன்று பைபிளியல் அறிஞர்கள் ஏற்பதை நாம் காண்போம்.
யோவான் 10:22 அது மழைக் காலமாயிருந்தது. எருசலேமில் தேவாலய மறு அர்ப்பணிப்பு (பிரதிஷ்டை) பண்டிகை வந்தது. 23இயேசு தேவாலயத்தில் சாலமோனின் மண்டபத்திலே இருந்தார்.
தேவாலய மறு அர்ப்பணிப்பு பண்டிகை உருவானது எப்படி
அலெக்சாண்டருக்கு பிற்பாடான கிரேக்கர் அரசு கீழ் இஸ்ரேல் வந்தது அப்போது கர்த்தருக்கு முக்கிய ஆலயங்கள் யூதேயாவில் ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலின் சமாரிய கெர்சிம் மலை தேவாலயம். இஸ்ரேலின் தேவன் ஆலயங்கள் உள்ளே கிரேக்கர் தேவன் சிலைகள் வைத்த பைபிள் கதை.
எருசலேமில் இஸ்ரேலின் தேவன் ஆலயத்தில் கிரேக்க தேவன் சிலை வைத்தல் 2 மக்கபேயர் 6:1 சிறிது காலத்துக்குப்பின், யூதர்கள் தங்கள் மூதாதையரின் தேவடைய சட்டங்களின்படி நடப்பதை கைவிடும்படியும் அவர்களைக் கட்டாயப்படுத்துமாறு ஏதன்சு நகர ஆட்சிமன்றத்தைச் சேர்ந்த ஒருவனை அந்தியோக்கு மன்னன் அனுப்பி வைத்தான். 2 மேலும் எருசலேமில் இஸ்ரேலின் தேவன் ஆலயத்தில் கிரேக்க ஒலிம்பஸ் தேவனின் சிலை வைத்தனர். “எருசலேம் ஒலிம்பஸ் தேவன் கோவில்” எனப் பெயரிட்டனர், கெரிசிம் மலையில் இருந்த கர்த்தர் தேவாலயத்தில் கிரேக்க தேயுஸ் தேவன் சிலை வைத்தனர். “கிரேக்க தேயுஸ் தேவன் கோவில்” எனப் பெயரிட்டனர். |
இந்த கிரேக்க முற்றுகை பொமு 164ல் எதிர்த்து வென்றபின் தேவாலய மறு-அர்ப்பணிப்பு நிகழ்ந்த கதை(1 மக்கபேயர் 4:36 -59) கீழே
இதில் பலம் பெற்ற ஜெருசலேமை ஆண்ட யூத -கிரேக்க கலப்பு ஹஸ்மோனியர் பின்னர் பொமு 126ல் சமாரியா மிது படைக்கு பின், சமாரியர் ஜெர்சுசலேமில் நுழைய தடை யூதர் சமாரியா செல்வது நிறுத்தினர், பொமு 126க்கு பின் பழைய ஏற்பாடு முழுவதும் ஜெருசலேம் மட்டுமே என மாற்றப்பட்டது. இந்த அரசியல் பிரிவினை தீண்டாமையை ஏசுவும் சீடர்களிடம் யூதர் அல்லாதவர்களிடம் செல்லாதீர், ச்மாரியரிடம் செல்லாதீர் என்பதில் காணலாம்
சமாரியர் பொமு.126ல் பிரிந்த போது தோரா மட்டுமே பழைய ஏற்பாடு, அதனால் சமாரியர் பைபிள் என்பது மோசேயேவின் 5 நியாயப் பிரமாண நூல்கள் மட்டுமே
யூதேயாவில் இஸ்ரேலின் ஆயிரத்திக்கும் பொமு600 வாக்கிலான மேலான யாவே கர்த்தர் மனைவி அஷேரா தேவியின் சிலைகளும், சில கர்த்தர் சிலைகளும், இரண்டு கல்வெட்டு யாவேயின் மனைவி அஷேரா எனவும் கிடைத்துள்ளது
கானான் பகுதியில் மக்கள் குடியேற்றம் என்பதே மிகக் குறைவு, அதிலும் யூதேயா - ஜெருசலேமில் மக்கள் வாழ்ந்தது மிகக் குறைவு, யூதேயா கீழ் இஸ்ரேல் வரும்படியான அளவு அரசியல் பலம் வரலாற்றில் இருந்த்து எனில் அது கிரேக்க ஹஸ்மோனியர் கீழே தான்.
1 மக்கபேயர் 4:36 யூதாவும் அவருடைய சகோதரர்களும், “நம் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய்த் தேவாலயத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்” என்றார்கள். 37எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச்சென்றார்கள். 38 தேவாலயம் பாழடைந்திருந்ததையும், பலிபீடம் தீட்டுப்பட்டுக் கிடந்ததையும், கதவுகள் தீக்கிரையானதையும், காட்டிலும் மலையிலும் இருப்பதுபோல முற்றங்களில் முட்செடிகள் அடர்ந்திருந்ததையும், குருக்களுடைய அறைகள் இடிபட்டுக் கிடந்ததையும் அவர்கள் கண்டார்கள்; 39தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பெரிதும் அழுது புலம்பி, தங்கள்மீது சாம்பலைத் தூவிக் கொண்டார்கள்; 40நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார்கள்; எக்காளத்தால் அடையாள ஒலி எழும்பியதும் விண்ணக இறைவனை நோக்கி மன்றாடினார்கள். . 41தாம் தூய இடத்தைத் தூய்மைப்படுத்தும்வரை கோட்டையில் இருந்தவர்களோடு போர்புரியும்படி யூதா சிலரை ஒதுக்கிவைத்தார்; 42திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த குற்றமற்ற குருக்களைத் தேடிக்கொண்டார். 43அவர்கள் தேவாலயத்தைத் தூய்மைப்படுத்தி, தீட்டுப்பட்ட கற்களை அழுக்கடைந்த இடத்தில் எறிந்துவிட்டார்கள்; 44தீட்டுப்பட்ட எரிபலிப் பீடத்தை என்ன செய்வது என்று அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்; 45அதை வேற்றினத்தார் தீட்டுப்படுத்தியிருந்ததால், தங்களுக்குத் தொடர்ந்து இகழ்ச்சியாய் இராதவாறுஅதை இடித்துவிட வேண்டும் என்ற நல்ல முடிவுக்கு வந்தார்கள்; அவ்வாறே அதனை இடித்துவிட்டார்கள். 46அக்கற்களை என்ன செய்வது என்று அறிவிக்க ஓர் இறைவாக்கினர் தோன்றும்வரை, அவற்றைக் கோவில் மலையில் தகுந்ததோர் இடத்தில் குவித்து வைத்தார்கள்; 47திருச்சட்டப்படி முழுக்கற்களைக்கொண்டு⁕ முன்பு இருந்த வண்ணம் புதிய பலிபீடத்தைக் கட்டினார்கள்; 48தூயகத்தையும் கோவிலின் உட்பகுதிகளையும் பழுதுபார்த்தார்கள்; முற்றங்களையும் தூய்மைப்படுத்தினார்கள்; 49தூய கலன்களைப் புதிதாகச் செய்தார்கள்; விளக்குத் தண்டையும் தூபபீடத்தையும் காணிக்கை அப்ப மேசையையும் கோவிலுக்குள் கொண்டுவந்தார்கள்; 50பீடத்தின் மீது சாம்பிராணியைப் புகைத்துத் தண்டின்மீது இருந்த விளக்குகளை ஏற்றியதும் கோவில் ஒளிர்ந்தது;✠ 51மேசைமீது அப்பங்களை வைத்துத் திரைகளைத் தொங்கவிட்டார்கள்; இவ்வாறு தாங்கள் மேற்கொண்ட வேலைகளையெல்லாம் செய்து முடித்தார்கள். 52நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு⁕ கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து, 53தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள். 54வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின. 55எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்; 56பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்;✠ 57பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணிசெய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள். 58மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது. 59ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள்வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள். |
No comments:
Post a Comment