கிறிஸ்துவ புதிய ஏற்பாடு தொன்மத்தில் சுவிசேஷக் கதைகளின் நாயகன் ரோமன் கிரிமினலாக மரண தண்டனையில் இறந்தபின், பிண உடலை அடக்கம் செய்தபின்னர் அதே பழைய உடலில் உயிர் பெற்று மீண்டும் சீடர்களுக்கு மட்டும் காட்சி எனக் கதை.
செத்துப் போனதான ஒரு மனிதன் மீண்டும் பழைய உடம்பில் உயிர் பெற்று வருவது என்ற நிகழ்வு சாதாரண அதிசய செயலே.
செத்துப் போனவர்களை பழைய உடம்பில் எழுப்பிய கதைகள் பழைய/புதிய ஏற்பாடு தொன்மக் கதைகளிலேயே உள்ளது.
1 ராஜா 17: 17-24 எலியாவால் சாறிபாத் விதவையின் மகன் 2ராஜா 4: 18-37 எலிசாவால் சூனேமிய பெண் மகன் 2ராஜா 13: 20–21 இஸ்ரவேல் இளைஞன், எலிசா கல்லறை தொடுகிறது லூக்கா 7: 11–17 இயேசுவால் நாயீன் விதவையின் மகன் லூக்கா 8: 49–56 இயேசுவால் யவீருவின் மகள் யோவான்11:1-44 இயேசுவால் லாசரஸ் மத்தேயு 27: 50-54 கல்லறைகளிலிருந்து பல யூத மூப்பர்கள் அப்போஸ்தலர் 9: 36-42 தபீதா பேதுருவால் அப்போஸ்தலர் 20: 7-12 பவுல் - துரோவா இளைஞன் ஐத்தீகு |
இயேசு சிலுவையில் இறந்தாரா- இல்லை என்பது- சுவீடன் கோதன்பர்க் பல்கலை கழக பைபிளியல் பேராசிரியர் குன்னார் சாமுவேல்சன் உடைய பிஎச்டி முனைவர் ஆய்வு கட்டுரை.
Jesus Christ May Not Have Died on Cross
https://www.telegraph.co.uk/news/religion/7849852/Jesus-did-not-die-on-cross-says-scholar.html
சிலுவையில் இயேசு தொங்கியது எத்தனை நேரம்
முதலில் வரைந்த மாற்கு(70 - 75) சுவிசேஷக் கதைபடி காலை 6 மணிக்கு விசாரணை தொடங்கி 9 மணி வாக்கில் சிலுவையில் அடைக்கப்பட்டார். 3மணிக்கு இறந்தார் எனக் கதை.
மாற்கு15:25 ரோமன் வீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி. 26 அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காட்ட “யூதருடைய மன்னன்” என எழுதி சிலுவையின் மேலே தொங்கவிட்டனர். 27 அவர்கள் இயேசுவின் இருபுறத்திலும் இரண்டு கள்ளர்களைச் சிலுவையில் அறைந்தனர். 33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? 'என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? 'எனப் பொருள்.. 37 இயேசு உரத்த குரலில் கதறி உயிர் விட்டார். |
ஆனால் நான்காவது சுவிசேஷம் யோவான்(95- 110)கதைபடி ஏசு சிலுவையில் அடைக்கப் பட்டதே நண்பகல் 12 மணிக்கு தான். அதாவது சிலுவையில் இருந்த நேரம் 3 மணிநேரம் மட்டுமே
யோவான் 19:14 அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதியவேளையாகவும் இருந்தது. பிலாத்து யூதர்களிடம் “இதோ உங்கள் இராஜா” என்றான். 16 அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை ரோமன் வீரர்களிடம் ஒப்படைத்தான். |
.மாற்கு கதைபடி 6 மணி நேரமும், யோவான்(95- 110)கதைபடி 3 மணி நேரம் மட்டுமே சிலுவையில் இயேசு தொங்கினார்
https://pages.uncc.edu/james-tabor/archaeology-and-the-dead-sea-scrolls/josephus-references-to-crucifixion/
கதைபடி இயேசு -30 வயது வாக்கிலான இளைஞர் 6 மணிநேரம் தொங்கினால் இறப்பது சாத்தியமில்லை என்பதை
மாற்கு15:44 பிலாத்து ஏற்கெனவே இயேசு இறந்து போனதைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டான். இயேசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்தான். இயேசு இதற்குள்ளே இறந்தது நிச்சயமா என்று அவனிடம் விசாரித்தான். 45 அந்த அதிகாரி இயேசு இறந்துபோனதை ஒப்புக்கொண்டான். எனவே இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல யோசேப்புக்கு பிலாத்து அனுமதி அளித்தான். |
இந்த வசனம் ரோமன் கவர்னர் "பிலாத்து ஆச்சரியமடைந்து" மற்ற சுவிகளிலே இல்லவே இல்லை.
யோவான் சுவியில் ஏசு மரணமடைந்திருக்க முடியாது என்பதை உறுதிப் படுத்திகிறார்.
யோவான்19:31 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக் கொண்டார்கள்.32 ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.33 பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன |
யோவான் சுவியில் மூவரில் இருவர் மரணமடையவில்லை, ஏசு மயங்கி இருந்தார் எனலாம். ஆனால் யோவான் சுவி ரோமன் மன்னர் டிராஜன்(97 - 118 ) காலத்தில் தான் புனையப்பட்டது. இது யோவான் சுவியின் நம்பகத்தன்மையில்லை எனத் தெளிவாக்கும். ஆனால் இவரும் இருவர் இறக்கவைல்லை எனலாம். ஏன் இதிலும் உள்ள
//34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன./ -/ இயேசு முழுமையாய் இறக்கவில்லை என்பர் மருத்துவர்கள்.
முதல் நூற்றாண்டு யூதர் யோசிபஸ் நூலில் அவர் மூன்று நண்பர்கள் தூக்குமரத்தில்டப்பட, 3 நாள் கழித்து ரோம் ஆட்சியிடம் கேட்டு மீட்டுவர, மூவரில் இருவர் மரண காயங்களால் மரணம் அடைய ஒருவரை மட்டும் காப்பாற்ற முடிந்தது என்கிறார். அதாவது 3 நாள் சிலுவையில் தொங்கிய பின்னர் மூவரும் உயிரோடு தான் இருந்தனர்.
http://religiousstudies.uncc.edu/people/jtabor/cruc-josephus.html //Life 76 And when I was sent by Titus Caesar with Cerealins, and a thousand horsemen, to a certain village called Thecoa, in order to know whether it were a place fit for a camp, as I came back, I saw many captives crucified, and remembered three of them as my former acquaintance. I was very sorry at this in my mind, and went with tears in my eyes to Titus, and told him of them; so he immediately commanded them to be taken down, and to have the greatest care taken of them, in order to their recovery; yet two of them died under the physician's hands, while the third recovered.// |
புராணக் கதை நாயகர் ஏசு மரணம் - தூக்கு மரத்தில்(சிலுவை) தொங்க விடப்பட்டு என்பது 4 சுவிசேஷங்களும், பவுல் கடிதமும் சொல்லும் கதை. இது ரோமன் தண்டனை முறை. இதில் ரோம் ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராளிகளுக்கு தரப் படும், குற்றவாளிகள் நிர்வாணமாக உயரமாக சாரம் கட்டி அதில் தொஙவிடப்படுவர். கழுத்து எலும்பு உடைந்து மண்டை ஓடு கீழே விழுந்து புரள வேண்டும் இதனால் தான், தூக்குமர தண்டனை தரும் இடம் கபாலஸ்தலம் அல்லது மண்டை ஓடு புரளுமிடம் எனப்படும். மரணம் வர 4- 5 நாள் ஆகும்.நிவாணத்தின் அசிங்கமும், கழுகு பருந்து போன்றவை துன்பமும் என நான்கு நாள் அலறல் கேட்டு- எவரும் ரோமை எதிர்க்க நினைக்கக் கூடாது என்பதே இத்தண்டனை முறை.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் மக்கள் நல்ல வெள்ளி அன்று செத்த மனிதன் இயேசு கதை போலவே சிலுவையில் அறைந்து கொண்டு தொங்கி விட்டு ஞாயிறு கீழே இறங்கும் விழா பல காலமாக நடந்து வருகிறது
துக்குமரத்தில் 3 நாள் தொங்கினால் ஒரு நல்ல இளவயது வாலிபர் மரணமடைவதில்லை என்பதை இந்தக் கூத்து நிரூபிக்கிறது
சிலுவையில் 3 நாள் தொங்கி இறங்கும் விழாக்கள்
33 வருடமாய் வருடா வருடம் இந்த நபர் சிலிவையில் அறைய, மீண்டும் இறங்குகிறார்
நாம் உறுதியாய் உணருவது - சிலுவையில் 3 அல்லது 6 மணி நேரம் சிலுவையில் ஏசு தொங்கினால் இறக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக உணரலாம்.
No comments:
Post a Comment