Tuesday, March 23, 2021

மனைவி முன்பு கள்ளக்காதலியுடன் கும்மாளம் அடித்த மதபோதகர் பால்சாமுவேல் தாமஸ் கைது!

 

மனைவியின் ஆபாசப்படத்தை இன்டெர்நெட்டில் போடுவதாக மிரட்டிய நெல்லை மதபோதகர் கைது

சென்னை, 16 மார்ச் 2021, 08:12 PM 

http://www.dinamalarnellai.com/cinema/news/101098

https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-man-for-fideilty-dowry-torture

மனைவியின் ஆபாசப்படத்தை இன்டெர்நெட்டில் போடுவதாக மிரட்டல் விடுத்த நெல்லையைச் சேர்ந்த மதபோதகர் பால்சாமுவேல் தாமஸை சென்னை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:

  



நெல்லையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரிப் பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, ‘‘எனக்கு நெல்லையைச் சேர்ந்த மதபோதகர் பால்சாமுவேல் தாமஸ் என்பவருடன் கடந்த 2008ம் ஆண்டு  பாளையங்கோட்டையில் வைத்து திருமணம் நடந்தது. 12 வயதில் மகன் உள்ளான்.  

திருமணத்தின் போது என் பெற்றோர் எனக்கு 150 பவுன் தங்க நகைககளும், ரூ. 5 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்தனர். ரூ. 2 லட்சத்துக்கு சீர்வரிசை பொருட்கள் என மொத்தம் ரூ. 25 லட்சம் செலவில் திருமணம் செய்து கொடுத்தனர். 

திருமணமாகி சில நாட்களில் தனது தங்கை உஷாவின் திருமணத்திற்காக 35 சவரன் தங்க நகையை எனது கணவர் மிரட்டி வாங்கிக் கொண்டார். மேற்கொண்டு வரதட்சணை தர மறுத்ததால் எனது பெற்றோர் எனக்கு போட்ட 120 சவரன் தங்க நகைகளையும் கணவர் பறித்து அவற்றை விற்று விற்றார். மேலும் அவர் வரதட்சணையாக பெற்ற ஸ்கார்பியோ காரையும் விற்று விட்டார்.

வேலைக்கு செல்லாமல் என் கணவர் ஊதாரியாக திரிந்ததால் என் எதிர்கால வாழ்வை எண்ணி கணவரை பிரியாமல் நான் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். சென்னை, சைதாப்பேட்டை, ஸ்ரீநகர் காலனியில் குடியேறினோம்.

அப்போது வீட்டு வேலைக்காக உறவுப்பெண் ஒருவரை சென்னைக்கு அழைத்து வந்து எனது வீட்டிலேயே தங்க வைத்தார். அந்தப் பெண்ணுடன் என் கண் முன்பே குடிபோதையில் தகாத உறவு வைக்கத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அவரைக் கண்டித்த போது வேலைக்காரப் பெண்ணுடன் சேர்ந்து என்னை அடித்துக் கொடுமைப்படுத்த தொடங்கினார்.

மேலும் என் அப்பா, அம்மா பெயரில் உள்ள நெல்லையில் உள்ள ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து விற்க முயற்சி பால் சாமுவேல் தாமஸ் செய்தார். அவரது கொடுமை தாங்காமல் அவரிடம் இருந்து நான் விவாகரத்து பெற முயன்றேன். அதற்கு அவர் என்னிடம் ரூ. 50 லட்சம் தந்தால் விவாகரத்து  தருகிறேன் என்று மிரட்டினார். பணம் தர மறுத்தால் நான் அவருடன் தனிமையில் இருந்த போது செல்போனில் எடுத்த படங்களை இன்டெர்நெட்டில் போட்டு விடுவேன் எனவும் மிரட்டினார். ஆகவே அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பால் சாமுவேல் தாமஸ் அவரது மனைவியிடம் ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டியதும், சொத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்ததும் உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து அவர் மீது 498 ஏ (வரதட்சணை கொடுமை), 406 (நம்பிக்கை மோசடி) உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் சாமுவேல் தாமசை நேற்று கைது செய்தனர்.

  விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பால் சாமுவேல் தாமஸ் இதே போல சைதாப்பேட்டையில் ஒரு நபரிடம் சுய தொழில் தொடங்குவதாக கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது கள்ளக் காதலியிடம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment