Tuesday, March 23, 2021

கல்வாரி பேப்டிஸ்ட் சர்ச் பாதிரி ரெவரண்ட். ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் பல பெண்களோடு தொடர்பு -மனைவி கருவை கலைத்து துன்புறுத்தல்

 

போதகருடன் ஃபேஸ்புக் காதல்... உண்மை முகம் தெரிந்து நொந்து போன மனைவி!

https://www.polimernews.com/amp/news-article.php?id=142029&cid=1&fbclid=IwAR3fB3KdcGoeCeb1fJLlGqSk_O6IzTbBmCXniFPume_RKTOgHlhVRg6Ha0I  Mar 23, 2021 

பெற்றோர் எதிர்ப்பை மீறி ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான மதபோதகரை திருமணம் செய்த பெண், தனது நகைகளை பறித்து கொண்டு போதகர் பல பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வருவதாக புகாரளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி பி.எஸ்.சி பட்டதாரியான இவர் 2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மொரிஷியஸ் நாட்டிலுள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள இலவுவிளையை சேர்ந்த திருவரம்பு கல்வாரி பேப்டிஸ்ட் திருச்சபையின் தலைமை போதகரும் மருத்துவருமான ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களின் காதலுக்கு ஜான்சிராணியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018 ஜூலை மாதம் மொரிஷியஸ் நாட்டில் இருந்து தமிழகம் வந்தார் ஜான்சிராணி. ஆன்ட்ரு பிரவீன் சதிஷை தேடி சென்று அவரிடத்தில் ஐக்கியமானார். தேவாலயத்தில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2019 அக்டோபர் மாதம் 18-ம் தேதி சென்னை பெரியமேட்டிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவும் செய்து கொண்டனர் . இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதில் மகனும் உள்ளான்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஜான்சிராணி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகாரளித்தார். அதில், ஜான்சிராணி தன்னிடத்தில் இருந்து கணவர் ஆண்ட்ரூ ரூ.80 லட்சம் பணம், 40 பவுன் நகைகள், மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டுமென்று கூறி வாங்கிக் கொண்டார். என் தந்தையிடமிருந்து வரதட்சணையாக ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டார். ஏற்கெனவே, அவருக்கு திருமணமாகி 10 வயதில் மகன் உள்ளான் என்பதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். இதை தட்டிக் கேட்ட போது, என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினர். என் இரண்டாவது கருவையும் கலைத்து விட்டார். மேலும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்று கூறியிருந்தார்.

ஜான்சிராணி அளித்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜான்சிராணி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஜான்சிராணி யின் புகார் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து உண்மை விபரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்கு பின்னரே, குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் மத போதகர் ஆன்ட்ரு பிரவீன் சதீஷ் அவரின் தந்தை பொன்னையன், தாயார் நேவிஸ், மற்றும் உறவினர்கள் அமலேற்பவமேரி, சகாயதாஸ், ஜெரால்ட், ஜெகன் ஆகிய 7 பேர் மீது வரதட்சணை கொடுமை , கொலை முயற்சி , மோசடி செய்தல் உள்ளிட்ட 15-பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்ததும் போதகர் ஆன்ட்ரூ பிரவீன் சதீஷ் தலைமறைவாகி விட்டார். குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர். போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் மத போதகர் ஆண்ட்ரூ வீடியோ ஒன்றினை வெளியிட்டு கதறியுள்ளார்.

No comments:

Post a Comment

லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை   13 Oct 2023 04:48 AM சென்னை:  சென்னை மற்றும் ...