Tuesday, October 29, 2024

நடிகர் விஜய் வாங்கிய ரூ8 கோடி வெளிநாட்டு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரிய ரீல் நடிகன்

நடிகர் விஜய்  வெளிநாட்டு  ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரிய ரீல் நடிகன் 

Samayam Tamil13 Jul 2021, 
நடிகர் விஜய் வாங்கிய ரூ8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ரூ10 கோடி வரி விதிக்கப்படுகிறது. இதனால் தான் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்
ஹைலைட்ஸ்:
* நடிகர் விஜய் ரூ8 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் வாங்கியதில் சிக்கல்* அதற்கான வரி மட்டும் ரூ10 கோடி வந்ததால் கோர்ட்டை நாடினார்
* கோர்ட்டும் வரி விலக்கு தர மறுத்துவிட்டது
ரூ8 கோடி காருக்கு ரூ10 கோடி வரியா? நடிகர் விஜய் வரிக்கு விலக்கு கேட்டதற்கு காரணம் இது தான்..
நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு கோர்ட்டில் மனு கொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. நடிகர்கள் உண்மையான வாழ்க்கையிலும் ஹீரோவாக இருங்கள். ரீல் வாழ்க்கையில் மட்டும் ஹீரோவாக இருக்காதீர்கள். இந்த வழக்கை தொடர்ந்ததால் அவருக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும்உத்தரவிட்டது.
இந்நிலையில் பலருக்கு இது என்ன வரி, எதற்காக இந்த வரி என பல சந்தேகங்கள் இருக்கிறது அதை பற்றிய தெளிவான விளக்கத்தை இங்கே வழங்கியுள்ளோம்.

விஜய் தனக்கு விலக்கு கேட்டது வெளிநாட்டில் வாங்கிய காரை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கான வரி, இந்த வரி எதற்காக விதிக்கப்படுகிறது என பார்க்கலாம் வாருங்கள்

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் பணம் சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தை இந்தியாவில் செலவு செய்யாமல் வெளிநாட்டில் உள்ள பொருளை வாங்கி இந்தியாவிற்குள் பயன்படுத்தினால் அதனால் இந்தியாவிற்கு வரிநஷ்டம் ஏற்படும். அப்படியாக வரி நஷ்டத்தை ஈடுசெய்ய இந்திய அரசு வெளிநாடுகளில் பொருட்களை வாங்கி அதை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்தால் அதற்கு வரி விதிக்கிறது. பொருளுக்கு ஏற்ப இந்த வரி விதிப்பு மாறுபடுகிறது.

உதாரணமாக இந்தியாவில் கிடைக்காத பொருளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தால் அதற்கு குறைந்த வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் கிடைக்கும் பொருட்கள் வகைகளை வெளிநாட்டு நிறுவனத்தின் ஆடம்பரம் மற்றம் சொகுசை கருதி அதை வாங்கி இறக்குமதி செய்தால் வரி அதிகம், அதே வெளிநாடுகளிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவிற்குள் வைத்து அதை ஒன்று செய்து பொருளாக தயாரித்தால் அதற்கு வரி குறைவு இப்படியான கொள்கையை இந்தியா வைத்திருக்கிறது.

இதன் படி நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு வரி விதிக்கப்படுகிறது. அந்த வரியிலிருந்து தனக்கு விலக்கு வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு தான் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் வாங்கியது முழுவதுமாக வெளிநாட்டில் கட்டமைக்கப்பட்ட கார். அந்த கார வகை கார்களுக்கு இந்தியாவில் மிக அதிகமாக வரி விதிக்கப்படுகிறது.

வாகங்கனங்களை இங்கே இறக்குமதி செய்ய ரூ30 லட்சம் வரை 100 சதவீத வரியும், ரூ30 லட்சத்திற்கு மேல் 125 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. விஜய் வாங்கிய காரின் விலை கோடி கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் அதன் காருக்கு அவர் வாங்கிய விலையிலிருந்து அதிகமான விலை யை வரியாக கட்டவேண்டும். உதாரணமாக அவர் வாங்கிய கார் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை சுமார் ரூ7 கோடி இதற்கான இன்சூரன்ஸ், போக்குவரத்து என மொத்தம் ரூ8 கோடி செலவு என வைத்துக்கொண்டால் அதற்கு வரி மட்டும் ரூ10 கோடி கட்ட வேண்டும். அதாவது ரூ8 கோடி கொடுத்து வாங்கிய காருக்கு ரூ10 கோடி கட்டி தான் அதை இந்தியாவிற்குள் அவர் கொண்டு வர முடியும். ஆக மொத்தம் அந்த காருக்காக அவர் ரூ18 கோடி செலவு செய்ய வேண்டியது உள்ளது. இந்த இறக்குமதி வரியை நடிகர் விஜய் கட்டிவிட்டார். ஆனால் இந்த காரை தமிழகத்திற்குள் கொண்டு வர நுழைவு வரி கட்ட வேண்டும் தற்போது அந்த வரி நடைமுறையில் இல்லை ஜிஎஸ்டி வந்த பின்பு அது ஜிஎஸ்டிக்குள் சென்று விட்டது முன்னர் நுழைவு வரி இருந்தது. இந்த நுழைவு வரி என்பது வெளி மாநிலத்திலிருந்து ஒரு பொருளை வாங்கி தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தால் அது அத்தியாவசியமான பொருளாக இல்லாத பட்சத்தில் மாநிலத்திற்கு வரி கட்ட வேண்டும். இந்த வரியை எதிர்த்து தான் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் தலைமையிலான கோர்ட் இதை மறுத்துவிட்டது.

இந்த வழக்கை அவர் 2012ம் ஆண்டு தொடர்ந்தார். அப்பொழுது கோர்ட் அவருக்கு தற்காலிகமாக 20% வரியை கட்டி காரை பயன்படுத்திக்கொள்ளலாம் வழக்கு முடிவுக்கு வரும் போது அதன் தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்டநடவிடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி நடிகர் விஜய் 20 சதவீத வரியை கட்டி காரை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அந்த வழக்கிற்கு தீர்ப்பாகியுள்ளது. இனி மீதம் உள்ள 105 சதவீத வரியை நடிகர் விஜய் கட்ட வேண்டும் இந்த வரி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment

முட்டுக்காட்டில் பன்னாட்டு அரங்கம்

Public Works Department to begin work on International Convention Centre in Muttukadu soon It will also begin construction of Grand Library ...