Sunday, October 27, 2024

தவெக மாநாடு ஜோசப் விஜய் 2026ல் - இலக்கு மக்கள் நலக் கூட்டணீ தலைமை - திமுக எதிர்ப்பு ஓட்டு பிரிப்பு

 தவெக மாநாடு

 ஜோசப் விஜய்  2026ல்  இலக்கு   மக்கள் நலக் கூட்டணீ  தலைமை 




  
 
 


 



- திமுக எதிர்ப்பு ஓட்டு பிரிப்பு

ஒருவழியாக தமிழக வெற்றி கழகம் மாநாட்டில்... கொள்கை..★★

//மத சார்பற்ற சமூக நீதிக் கொள்கை...//

பெரியாரோடு அவரது படம்... சூப்பர்.😊

வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள்.. ★★பேச்சு..

பெண்களை மதிக்கும் பண்பு, முன்னேற்றத்தில் தனி கவனம் 

காமராசர், அம்பேத்கார்... ★★

ஏற்றத் தாழ்வு இல்லாத சம கல்வி, மருத்துவ வசதி...★★

திராவிடம், தமிழ் தேசியம் ★★

இரண்டும் ஒன்றாக பாவித்து பயணிப்பது.

அரசியல் போக்கு.. 😊😊 ★★

யாரையும் தாக்கி பேசி கட்சி வளர்ப்பதில்லை.

கூட்டணி சேர்பவர்களுக்கு  உரிய அதிகார பகிர்வு.... 😊😊

அப்புறம் என்ன? 2026....கு    ரெடி...

 நான் ரசித்தது 800 மீட்டர் நடை மேடையில் ஓடி ஓடி மக்களை வரவேற்றது.. அன்போடு வீசி ஏறியப்பட்ட  தூண்டுகளை நெடுகிலும் சலிக்காது பொறுக்கி தோளில் போட்டுக் கொண்டது, பின்னர் மேடையில் பொறுமையாக ஒவ்வொன்றாக கழட்டி வைத்து... ஒரு துண்டு மட்டும் கழுத்தில் அணிந்து பேச தயாரானது....

கைத்தட்டல் 👌👌👍

இறுதிவரை கலையாத மக்கள் கூட்டம்...

ஜூட்.... 😄😄😄😄😄😄

 பேச்சில் சற்று செயற்கைத்தனம் தெரிந்தாலும், பொதுவாக அவரது பேச்சு , விஷயம் நிறைந்ததாகவும், ரசிக்கும்படியாகவும், அவரது தொண்டர்களைக் கவரும் வகையிலும் இருந்ததை மறுக்க முடியாது. இன்று பதவியில் இருக்கும் பெரிய தலைவர்களின் பேச்சோடு ஒப்பிடும்போது, விஜயின் பேச்சு எவ்வளவோ  மேலானது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை எல்லா கட்சிகளுமே ஏற்பதால்,  தனியாக பாராட்டுவதற்கு ஒன்றும் இல்லை.

அதிகாரத்தில் பங்கு தருவோம் என்ற அறிவிப்பு சாதுர்யமானது. வரவேற்புக்குரியது. திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டுள் மறைமுகமான அழைப்பு. 

திராவிட மாடல் என்று சொல்லி ஏமாற்றும் கட்சி எனக் குறிப்பிட்டதன் மூலம், திமுகவை எதிர்ப்பதில் தனக்கு சிறிதும் தயக்கம் இல்லை என்று துணிவோடு உணர்த்தியிருப்பதும்  பாராட்டுக்குரியதுதான். திமுக- பாஜகவுக்கு எதிரான அறிவிப்புகளின் மூலம், அவ்விரு கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டுகளை தன் வசப்படுத்த முயற்சி செய்துள்ளார். யார் முதல்வர் என்ற கேள்வி காரணமாக அதிமுகவும் விஜயை ஆதரிக்க முடியாது. மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதே விஜயின் திட்டம் எனத் தெரிகிறது. அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போகப் போகத்தான் தெரியும்.  

அவர் அறிவித்த கொள்கைகளில் ஏற்கும்படியான அம்சங்கள் சிலவும் உள்ளன.  

விஷயத்துக்கு வருவோம்.

திமுக எதிர்ப்பை அவர் உறுதிப்படுத்தினாலும்,  தனது கொள்கைகளாக அவர் அறிவித்துள்ளவை பெரும்பாலும் திமுகவின் கொள்கைகள்தான்.

நீட் எதிர்ப்பு, கவர்னர் நீக்கம்,  இரு மொழிக் கொள்கை போன்ற பல அறிவிப்புகள் அவர் ஆதரிக்கத் தகுந்தவரா என்ற கேள்வியை எழுப்புகிறது. 

நீட் பற்றி அவருக்கு சரியான புரிதல் இல்லை. மாநில அரசு தறி கெட்டுச் செல்லும்போது கவர்னர் பதவி இன்றியமையாதது. இரு மொழிக் கொள்கை மாணவர்களை முன்னேற்ற உதவாது. 

டாஸ்மாக் , வாரிசு அரசியல் பற்றி விஜய் பேசவில்லை. இன்னும் கொஞ்சம் பயம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. 

இவற்றில் சரியான நிலையை அவர் அறிவித்தால், பாஜக அவருடன் கூட்டணி வைப்பது சரியாக இருக்கும். இல்லையென்றால் வெளியில் இருந்து வாழ்த்து சொல்வது நல்லது.

பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் கட்சிகளை சமாளிக்க விஜயின் அறிவிப்புகள் ஏற்றதாகத் தோன்றவில்லை.

திராவிடக்கட்சிகளை சமாளிக்கும் வகையில் பேசும் ஆற்றலோடு,  சரியான கொள்கை வழியையும் பின்பற்றும் அண்ணாமலையை ஒதுக்கி விட்டு, விஜய் கட்சியை ஆதரிக்க எந்தக் காரணமும் இல்லை.a



No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...