Sunday, October 27, 2024

திருவள்ளுவ மாலையில் புகழாரம்

 திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் தமிழ் சமணரான மணக்குடவர் உரை எழுந்தது,  திருவள்ளுவமாலை சிலபல பாடல்கள் மணக்குட்வர் அதிகார அமைப்பைக் கூறுவ்தால் அவை வள்ளுவம் இயற்றிய அடுத்த  நூற்றாண்டிலே பெரும்பாலான பாடல்கள் இய்ற்றப்பட்டன என்பதே தமிழ் அறிஞர் கருத்து

 திருவள்ளுவ மாலையில் புகழாரம்

வள்ளுவர் கடவுள் எனல்

28 காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் \ பிரமன் வள்ளுவனாக வந்து 133 அதிகாரம் தந்தான்.

4 உக்கிரப்பொருவழுதியார் \ நான்முகன் திருவள்ளுவனாக மாறித் தன் நான்மறையை முப்பொருளாய்ச் சொன்னான்.

21 நல்கூர்வேள்வியார் \ வடமதுரைக்கு அச்சு நப்பின்னையை மணந்த கண்ணன். தென்மதுரைக்கு அச்சு சிவபெருமான் போன்ற, ஆனால் தொண்டையில் மறு இல்லாத செந்நாப்போதார்.

வள்ளுவர் கடவுளின் மேலானவர் எனல்[

6 பரணர் \ திருமால் தன் இரண்டு தப்படிகளால் மூவுலகப் பரப்பைதான் அளந்தான். திருவள்ளுவரோ தன் பாவடிகள் இரண்டால் உலகத்தார் உள்ளத்தையெல்லாம் அளந்தார். \ வேற்றுமை அணி \

14 பொன்முடியார் \ அன்று குறள் உருவம் (திர்ருமால்) காசிபன் (வாமணன்) என்னும் பெயரோடு உலகை அளந்ததாம். இன்று குறள் பாடல் உலகை அளக்கிறது.

39 உறையூர்முதுகூத்தனார் \ திருவள்ளுவர் தேவரினும் சிறந்தவர். நாவுக்கு நல்வாழ்வு திருக்குறள்.

8 மாமூலனார் \ வள்ளுவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் சொன்ன தேவர். அவரை வள்ளுவன் குடியில் பிறந்தவன் என்பவன் ஒன்றும் அறியாத முட்டாள்.

53 ஆலங்குடிவங்கனார் \ அமுதம் சுவைத்தவர் தேவர் மட்டுமே. திருக்குறளை மக்களும் சுவைக்கின்றனர். எனவை திருக்குறள் அமிழ்தத்தினும் சிறந்தது.

திருக்குறள் வேதம் எனல்

32 பெருஞ்சித்திரனார் \ வேதம் தன்னைத் தானே திருக்குறளாகப் பிறப்பித்துக்கொண்டது.

43 வண்ணக்கஞ்சாத்தனார் \ ஆரியத்தில் வேதம் இருக்கிறது. தமிழில் திருக்குறள் இருக்கிறது. எனவே இரண்டும் சமம்.

15 கோதமனார் \ ஏட்டில் எழுதினால் நான்மறையின் ஆற்றல் போய்விடும் என்று எழுதாமல் விட்டுவிட்டனர். திருக்குறள் ஏட்டில் எழுதியபின் ஆற்றல் கூடுகிறது.

24 மாங்குடிமருதனார் \ வேதப்பொருளாக விளங்கும் திருக்குறள் ஓதுவதற்கு எளிது, உணர்வதற்கு அரிது, உள்ளுந்தோறும் உள்ளுந்தோறும் உள்ளம் உருக்கும்.

30 பாரதம்பாடியபெருந்தேவனார் \ பாரதமும், இராம கதையும் திருக்குறளுக்கு இணை ஆகா.


இயற்கையோடு ஒப்பிட்டு மேன்மை கூறல்

52 மதுரைப்பாலாசிரியனார் \ வெள்ளி, வியாழம், ஞாயிறு, திங்கள் ஆகியவை புறவிருள் போக்கும். திருக்குறள் அகவிருள் போக்கும்.

46 அக்காரக்கனிநச்சுமனார் \ கலை நிரம்பல், இனிதாதல், நீர்மைத்து ஆதல் ஆகியவற்றால் திங்களும், திருக்குறளும் சமம் என்றாலும் திருக்குறளீன் நயம் திங்களுக்கு இல்லை. வேற்றுமைஅணி

47 நப்பாலத்தனார் \ திருக்குறள் அக இருள் நீக்கும் விளக்கு. அறம் - அகல். பொருள் - திரி. இன்பம் - நெய். செஞ்சொல் - தீ. குறட்பா - விளக்குத் தண்டு. உருவகஅணி

48 குலபதிநாயனார் \ ஞாயிறு கமலம் மலர்த்தும். திருக்குறள் உள்ளக் கமலம் மலர்த்தும். ஞாயிறு புறத்திருள் போக்கும். திருக்குறள் அகத்திருள் போக்கும். இரண்டும் ஒப்பு எனினும் திருக்குறள் உயர்ந்தது. வேற்றுமைஅணி

7 நக்கீரர் \ திருக்குறள் மழைக்கு நம்மால் கைம்மாறு செய்யமுடியாது.

திருக்குறள் மருந்து எனல்  

11 மருத்துவன்தாமோதரனார் \ :சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரு பெயரைச் சீ ஒழுகும் தலையை உடைய சாத்தனார் என்று கொண்டு, புண்ணால் உண்டாகிய தலைவலி திருவள்ளுவரின் திருக்குறளைக் கேட்டதும் தீர்ந்துவிட்டது என்கிறார் இந்தப் புலவர்.

35 மதுரைஅறுவைவாணிகன்இளவேட்டனார் \ இவர் திருக்குறளை 'வாயுறை வாழ்த்து' என்கிறார். இன்பம் எய்தவும், தின்பம் போக்கவும் உதவும் மருந்து இது

51 கவுணியனார் \ இருவினை தீர்க்கும் மாமருந்து.

 திருக்குறள் இலக்கணச் செப்பம் 
45 நச்சுமனார் \ எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, வனப்பு, அணி, வண்ணம் அமைய வழு இல்லாமல் திருக்குறள் அமைந்திள்ளது.
 

திருக்குறளில் எல்லாம் உண்டு  

42 செயலூர்க்கொடுஞ்செங்கண்ணனார் \ உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் திருக்குறளில் உண்டு.

29 மதுரைத்தமிழ்நாகனார் \ எல்லாப் பொருளும் இதன்பால் உள. இதில் இல்லாத எப்பொருளும் இல்லையால்.

33 நரிவெரூஉத்தலையார் \ இன்பம், பொருள், அறம், வீடு வள்ளுவர் சொன்னார்.

40 இழிகட்பெருங்கண்ணனார் \ இம்மை, மறுமை, எழுமை அனைத்தும் மும்மையில் (முப்பாலில்) சொன்னார்.

தனிச் சிறப்புகள்

13 அரிசில்கிழார் \ வள்ளுவர் பொருள் விரியும் சுருங்கிய சொல்லை வைத்துப் பாடியுள்ளார்.

17 முகையலூர்ச்சிறுகருந்தும்பியார் \ உள்ளுதல், உள்ளி உரைத்தல், உரைத்தவற்றைத் தெள்ளி எடுத்தல் என்கிற முறையில் திருவள்ளுவர் தம் பாடல்களை உருவாக்கியுள்ளார்.

பொதுநூல் 

9 கல்லாடனார் \ ஆறு சமயத்தவரும் ஏற்கும்படி வாழ உதவும் பொருளை வகுத்துத் தந்தவர் வள்ளிவர்.

23 வெள்ளிவீதியார் \ செய்யாமொழி எனப்படும் வேதத்துக்கு உரியவர் அந்தணர் மட்டுமே. பொய்யாமொழி எனப்படும் திருக்குறளைச் சொல்வதற்கு உரியவர் எல்லா மக்களும்.

நவீன தமிழ் புலவர்கள் எனும் சர்ச் கொத்தடிமைகளால்   திருவள்ளுவ மாலை ஏற்காமல் கீழ்த்தரமாக தூற்றுவது தொடர்கிறது

 திருவள்ளுவ மாலை எனும்  தில்லுமுல்லு மாலை!

--நா.முத்துநிலவன்--

திருவள்ளுவ மாலை எனும் நூல்திருக்குறளின்  பெருமை களையும்,  திருவள்ளுவரின்   பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஒருநூலுக்கோநூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்ததுதிருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்புதிருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளனஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். இடைக்காடர் ஔவையார் இருவரும் குறட்பாவிலும்ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக் களாலும்வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன – எனும் இந்த வரிகளும் இக்கட்டுரைக்கான ஆதார நூலும் விக்கிப்பீடியாவில் உள்ளன ( https://ta.wikipedia.org/s/ai2 )

திருக்குறளை ஆழ்ந்து படித்தவர்கள்திருக்குறளைப் புகழ்ந்து(?) எழுதப்பட்ட திருவள்ளுவ மாலை  நூலைப்பற்றி அறிந்திருப்பார்கள்.

திருவள்ளுவ மாலை என்னும் நூல்திருக்குறள் தோன்றி சுமார் ஆயிரம் ஆண்டுக் கழித்துத் தொகுக்கப்பட்டதாகத் தெரிகிறதுஇதனை எழுதியவர் ஒருவரா, பலரா என்னும் சந்தேகம் எழுவதோடுதிருக்குறளின் மூலக் கருத்துகளுக்கு முற்றிலும் முரணான கருத்துகளை இந்நூல் கொண்டுள்ளது என்பதால் இது பற்றிய ஆய்வை இக்கட்டுரையின் வழி முன்வைக்கிறேன்

திருதராட்டிர ஆலிங்கனம்

மகாபாரதக் கதையில் “திருதராஷ்டிர ஆலிங்கனம்” என்றொரு தொடர் வரும்இறுதிப் போரில் தன்மகன் துரியோதனனைக் கொன்ற பீமனை, பிறகு பழி வாங்க நினைப்பான் துரியோதனன் தந்தையான திருதராட்டிரன்ஆனால்கண்பார்வையற்ற தன்னால் அவனுடன் போரிட்டுக் கொல்ல முடியாது என்பதால்பீமனை அருகில் அழைத்துஇரு கரங்களாலும் பீமனை நெருக்கி அணைத்தே கொல்லத் திட்டமிடுவான்வழக்கம்போல இதனை முன் உணர்ந்த கண்ணன்தந்திரமாகத் தடுத்துவிடுவான் என்றாலும்இப்படி “நெருக்கி அணைத்தே கொன்று விடத் திட்டமிடுவது” என்னும் பொருளில் “திருதராட்டிர ஆலிங்கனம்” என்னும் தொடர், இன்றும் மக்கள் வழக்கு உரையாடலில் கூட சொல்லப்படுகிறது

திருவள்ளுவ மாலைக்கும் இந்தத் தொடர் பொருந்தும்அதாவது குறளில் இல்லாததையும் பொல்லாதததையும் இருப்பதாகச் சொல்லி புகழ்ந்தே இழிவு படுத்தி திருக்குறளின் புகழைக் கெடுத்து விடுவதுஇது எல்லாருக்கும் புரிந்துவிடாது என்பதே இந்நூலைத் தொகுத்தவர்களின் உளவியல் அறிவுஇன்று வரைதிருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளையும் திருவள்ளுவரையும் புகழ்ந்து எழுதப்பட்டதான பொதுப் புத்தியே இதற்குச் சான்று!

திருவள்ளுவ மாலை என்னும் பொய் மாலை

திருவள்ளுவ மாலையில், (நாலடி கொண்ட நேரிசை/இன்னிசை வெண்பா 53உடன்குறட்பாக்கள் 2 சேர்த்துமொத்தம் 55வெண்பாக்கள் உள்ளன.

இதில்-

முதல் வெண்பா அசரீரி (ஆளற்ற ஒலிஎழுதியதாக உள்ளது!

இரண்டாம் வெண்பா – கலைமகள் எழுதியதாக உள்ளது

மூன்றாம் வெண்பா - இறையனார் எழுதியதுஇதிலிருந்தே இது எந்த அளவிற்கு மிகையானது என்பது புரியும்இறையனார் என்னும் பெயரிலான புலவர் ஒருவர் சங்கஇலக்கியமான குறுந்தொகையில் ஒரு பாடல் எழுதியதாக உள்ளது. (பாடல் எண்-02) இதில் இறையனார் என்ற குறிப்பு மட்டுமே உள்ளதுஇந்தப் பெயரை வைத்துக் கொண்டுபெரியபுராணத்தில் (படலம்-52, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்) என ஒரு கதை உள்ளதுஇதை வைத்து, “திருவிளையாடல்” என்றொரு திரைப்படமும் வந்ததுஉண்மையில் சங்கக் குறுந்தொகை அடிக்குறிப்பில் இப்படி எதுவும் இல்லை!, நாகேஷ்-தருமியும் இல்லை, சிவாஜிகணேச-சிவனும் இல்லை! “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேஎன்ற நக்கீர-.பி.நாகராஜனின் புகழ்பெற்ற வசனமும் இல்லைஇதற்கு,  கரந்தைப் பாவலர் பாலசுந்தரம் எழுதிய ஓர் இலக்கிய நாடகமே ஆதாரம்இந்தப் பெயரோடு திருவள்ளுவ மாலையில் ஒரு பாடல் என்ன கதை

இந்தக் கதைக்குரிய இறையன் பெயரைத் திருவள்ளுவ மாலையில் சேர்த்தது நல்ல நகைச்சுவை! (இறையனார் வேறு எந்த சங்கப் பாடலும் எழுதி யிருப்பதாகவோசங்கம் பற்றிய பற்பல கற்பனைகளுக்கு இடம்தந்த இறையனார் அகப்பொருள் என்னும் பிற்கால இலக்கண நூல்தவிர திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடந்ததாக வேறெந்த ஆதாரமும் இல்லை!)

நான்காம் வெண்பா – உக்கிரப் பெருவழுதி எனும் மன்னன் எழுதியதாக உள்ளதுஆனால் இந்த மன்னன் எழுதியதாக சங்கஇலக்கியத்தில் இரண்டு பாடல்கள் நற்றிணை(98) அகநானூறு(26) உள்ளனஇரண்டுமே  அகப்பாடல்கள்!  https://ta.wikipedia.org/s/twd எனில் இதையும் நம்புவதற்கில்லைஎனினும் இதைத் தொகுக்க உதவியிருக்கலாம் அதோடு பாடல்ஒன்றையும் எழுதியிருக்கலாம் என்று வேண்டுமானால் ஏற்கலாம் என்றாலும் காலக் குழப்பம் நீடிக்கிறது.

அப்படி வைத்துக் கொண்டாலும்அந்த சங்கப் புலவர்கள்49பேர்மற்றும் இந்த நால்வர் ஆக 53தானே வரவேண்டும். 55பேர் திருவள்ளுவ மாலையில் எழுதியிருக்கிறார்களே என்றும் குழப்பம் வருகிறதுஏனெனில் அதே நூலில் (இறையனார் அகப்பொருளில்உள்ள “கடைச்சங்கப் புலவர்கள்” பட்டியலில் உள்ள பலர் பெயர் இந்த திருவள்ளுவ மாலையில் இல்லைஅதில் இல்லாத பலர் பெயர்கள் இதில் உள்ளனஅட என்னடாஇந்த மதுரைக்கு (நகரில் அரங்கேற்றப்பட்ட திருவள்ளுவ மாலை நூலுக்குவந்த சோதனை!

இந்த நூல்பலபெயர்களில் ஒருவர் அல்லது ஒரு குழுவினரே பலபெயர்களில் எழுதியிருக்கலாம் என்று நான் சொல்வதற்கான ஆதாரங்கள் 

வள்ளுவர் பாடாததை யெல்லாம் பாடியதாகப் புகழும் பாடல்கள் பல உள்ளன-

வள்ளுவர் அறம் பொருள் இன்பம் என முப்பாலே பாடியிருக்கஅவர்பாடாத நான்காம் பொருளான வீடும் குறளில் உள்ளதாகப் புகழ்வது--

அறம் முதலாகிய மும்முதற் பொருள்” எனதொல்காப்பிய (செய்யுளியல் நூற்பா-102) தமிழ்நெறியில் எழுதப்பட்ட திருக்குறளில்வடமொழியில் உள்ள (தர்ம அர்த்த காம மோட்சம் எனும்நான்காவது பொருளான வீடுபேறு இல்லைஆனால் திருக்குறள் வீடுபேறு எனும் நான்காம் பொருளையும் பாடி இருப்பதாகப்  பெருமையோடு பாராட்டும் பத்து வெண்பாக்கள் இதில் உள்ளன (திருவள்ளுவ மாலை பாடல்எண்கள்7, 8, 19, 20, 22, 33, 38, 40, 44, மற்றும் 50பத்துப் பொய்களில் குத்து மதிப்பாய் ஒரே ஒரு பொய்யைப் பார்ப்போம் –

      பாடல் எண்-8

      அறம்பொருள் இன்பம்வீ டென்னும்அந் நான்கின்

      திறம்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்

      வள்ளுவன் என்பானோர் பேதைஅவன்வாய்ச் சொல்

      கொள்ளார் அறிவுடை யார்    (எழுதியவர் மாமூலனார்.

இதற்கு விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன்.

வடமொழி வேதம் சொன்னதையே வள்ளுவர் பாடினார் என்பது--

வர்ண தர்மத்தை வலியுறுத்தியே வேதமும்மனு()தர்ம நூலும்பகவத் கீதையும் பாடியிருக்கஇவற்றுக்கு எதிரான “மனித சமத்துவத்தை” வலியுறுத்தியே வாழ்வியல் பாடியிருக்கும் வள்ளுவரை வேதம் சொன்ன வழிகளைத் தமிழில் பாடியவர் என்பது அவருக்குப் பெருமையா என்ன?

இப்படி ஒன்பது வெண்பாக்கள்  (பாடல்எண்கள் -2,4,15,18,28,30,32,37,42) இதற்கும் ஓர் உதாரணம் பார்ப்போம் –

      அறமுப்பத்து எட்டுபொருள் எழுபதுஇன்பத்

      திறம்இருபத் தைந்தால் தெளிய – முறைமையால்

     வேத விழுப்பொருளை  வெண்குறளால வள்ளுவனார்                

     ஓத அழுக்கற்றது உலகு  (மதுரைப் பெருமருதனார் – பா.எண்-37)

வள்ளுவர் மனிதரே அல்லதெய்வத்தன்மை வாய்ந்தவர்

 எனப்புகழ்வது--

மிகையாகப் புகழ்வது நம்காலத்திலும் சாதாரணமாக நடப்பதுதான்என்றாலும் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதப் பாடலே அல்ல அல்ல அதையும் தாண்டி புனிதமானது” என, (கமலகாசன் போலஇதில் 9பாடல்கள் உள்ளனஇதுவும் வள்ளுவரின் இயல்புக்கு மாறானதுதான்அவர் சொல்வன்மையில் எதை எந்த அளவுக்கு எப்படிச் சொல்லவேண்டும் என்றவர்ஆனால் அவரைப் புகழ்கிறேன் பேர்வழி என்று இவர் மனிதரே அல்லதெய்வத்தன்மை பொருந்தியவர் என்பது அவருக்குப் பெருமையா என்ன?

பாடல் எண்கள் – 1,3,6,21,28,36,39,41,49 இப்படி உள்ளன

ஒரு சோறு –

“…தெய்வத் திருவள்ளுவர் செப்பிய குறளால்

வையத்து வாழ்வார் மனத்து (எண்-49, தேனீக் குடிக் கீரனார்

ஒருசில அருமையான பாடல்களும் உள்ளன

      வெறும் பொய்யைச் சொன்னால் எப்போதுமே பருப்பு வேகாதல்லவாஎனவே பொய்யைக் கொஞ்சம் உண்மை கலந்தும் தருவதுதானே உலகநடப்புஇந்தக் கருத்துக் கேற்ப நல்ல சில பாடல்களையும் – திருக்குறளின் உண்மையான பெருமைகளைச் சொல்வதான பாடல்களும் இதில் உள்ளனகபிலர் பாடல் அப்படி நல்லவிதமாகவே உள்ளது      

பாடலைப் பாருங்களேன்

தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட

பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு

வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி  (பாடல்எண்-5)

    வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல்குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலேதிருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது.

தொன்மை நூலாகிய தொல்காப்பியம்சங்க நூல்கள்திருக்குறள் முதலியவற்றில் வீடு’ பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நூல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர். திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஓரு தொடக்கம் உண்டானது எனலாம். இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர்.

எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும்,  உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.

    தொன்மை நூலாகிய தொல்காப்பியம்சங்க நூல்கள்திருக்குறள் முதலியவற்றில் ‘வீடு’ பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றனதிருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் கு..ஆனந்தன் 

நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியுள்ள அறிஞர் மு.அருணாசலம் அவர்களும் திருவள்ளுவ மாலை திருக்குறளுக்குப் பெருமை சேர்க்காத வண்ணம் பொய்யாகத் தொகுக்கப்பட்டது என்னும் பொருளிலேயே கருத்துரைக்கிறார்.

எனவே,
திருக்குறளை 

அதன் மூலம்கொண்டு மட்டுமே 

அறிவது நல்லது.

மிகையாகப் புகழ்வதும் தவறுபழிதூற்றுவதும் தவறு என்பதைதிருக் குறளையும் திருவள்ளுவ மாலையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தால் புரியும்.

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

      மெய்ப்பொருள் காண்பது அறிவு – (குறள்-423)

-------------------------------------------------------------------------------------------------------------

வெளியீட்டுக்கு நன்றி

தீக்கதிர் –நாளிதழ் 30-01-2022 தேதியிட்ட 

வண்ணக்கதிர் இணைப்பு

மற்றும் 

மறுபதிவு செய்த

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மேடை மின்னிதழ்

https://mymintamil.blogspot.com/2022/01/blog-post_29.html


No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...