Wednesday, October 23, 2024

கீழடி அகழாய்வு முடிவுகள்- இந்திய நாகரீகம் என உறுதி செய்தது

 பிராமி கல்வெட்டுகளில் குபேரன் - குவிரன்.

குபேரன் என்ற வடசொல் பெயர் குவிரன் என பொமு.2ம் நூற்றாண்டு கீழடி பானைக் கீறலில் உள்ளது.

சங்க இலக்கியப் பாடல்களில் குவிரன் இல்லை

குபேரன் பொமு-2ம் நூற்றாண்டு சிற்பம். மகாராஷ்டிரா பிதால்கோரா குகைகளில் கிடைத்தது, தற்போது இது டில்லி தேசிய மியூசியத்தில் உள்ளது.

இந்த சிற்பத்தை செதுக்கிய சிற்பி தன் பெயரை(கன்ஹதாசன்) பிராமியில் எழுதி உள்ளது சிறப்பு.

இந்த குபேரன் என்பது தமிழில் குவிரன் என கீழடி பானைக்கீறல்களில் உள்ளது

 பெ.யு.மு.2ஆம் நூற்றாண்டிலேயே பர்ஹுத் ஸ்தூபத்தில் வருகிறது. கொங்குவேள் இயற்றிய பெருங்கதையில் 5:3:91-92, குபேரனைக் குறிக்க "குவேரன்" என்ற பதம் தான் இடம்பெறுகிறது.

"குவிரா" kuvirā என்று விக்கிரமங்கலத்தில், 'அன்' என்கிற படர்க்கை வினைமுற்று விகுதியின்றி கிடைத்துள்ளது.

குவீரா குபிரஹ, குயிர. வட நாட்டில் மூன்று விதமாக கிடைத்துள்ளது - குபிர ,குவேர, குபீரோ என்றும் கிடைத்துள்ளது.

குபிரஹ" என்ற அரிக்கமேட்டு பானையோடு?


குபேரனின் தமிழ் பெயர் என்ன?
வரலாற்றில் தொல்லியல் சுவடுகளில் குபேரனின் பெயர் தாங்கிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் பெரும்பாலும் குவிரா என்று இருக்கும். குபேரா என்பதின் தமிழ் சொல் குவிரா என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
குவிரன் என்பது குபேரன் என்ற பிராக்ருத (அ) சமசஸ்கிருத மொழிச் சொல்லின் தமிழ் வடிவம் என்கின்றனர், ஆய்வாளர்கள் திரு. ஐராவதம் மகாதேவன் மற்றும் திரு. சுப்புராயலு அவர்கள்.
குவிரன் என்பது குபேரன் என்பதன் மரூஉ என்கின்றனர். இவர் "குபிரோ யக்ஷா" என்று இவர் குறிப்பிடப்படுகிறார். யக்ஷா யட்சர்கள் எனப்படுவோர், வட இந்தியாவில் வாழ்ந்த திராவிட முன்னோரான தசுயுக்களின் மழை மற்றும் வளமைக்கான தெய்வம் எனப்படுகிறார்.
தமிழக குடவரையிலும், கொடுமணல் அகழாய்விலும் குவிரன் என்ற தமிழி கல்வெட்டாக இப்பெயர் வருகிறது.
குவிரா, குயிரா - தமிழ்
குபிரா - பழஞ்சிங்களம்
குபேரா - வடமொழி
சிலர் குவி என்பது தமிழ்ச்சொல்லே. அது செல்வம் குவிந்த வணிகரை குறிக்கும் அல்லது பொருட்கள் குவிந்த வணிகரை குறிக்கும் என்றும் கருதுகின்றனர். வ, ப மாற்றத்தால் குவிரன் குபேரன் ஆகியிருக்கலாம் என்பது அவர்களின் வாதம். குப்பைக்கும் குவை என்ற பெயருள்ளது. அதே போல பொன்னை உருக்கக்கூடிய கலத்திற்கும் குவை என்ற பொருள்ளது.
"இருந்தைக் குவை யொத்தன" (தணிகைப்பு. திருநாட்டுப்.63);
குவா, குவன், குஅன் போன்ற பெயர்களும் தமிழி கல்வெட்டில் வருகின்றன.
குவிந்த என்ற சொல்லுறகு உயர்ந்த என்றும் பொருள் கொள்ளலாம். சோழ நாட்டை ஆண்ட முத்தரைய மன்னர்கள் மாறன் குவாவன், குவாவன் மாறன், குவாவன் சாத்தன், இரவி குவாவன் என்ற பெயர்களைக்கொண்டு விளங்கினர். இங்கு குவாவன் என்ற சொல்லுக்கு உயர்ந்தோன் என்று பொருள் கொள்ளப்படுகிறது." என்கின்றனர்.
தொல்காப்பிய உரையில், குபேரா என்ற சொல்லுக்கு, "நிதியின் கிழவர்" என்ற சொல் பயின்று வருகிறது. நிதியின் கிழவர் வணிகரின் அடையாளமாகக் கூறப்படுகிறது. காவிரிப்பூம்பட்டினமும், மதுரையும் என்பன வணிகர் குரிய அவர்கள் தோன்றிய ஊர்கள் என்று கூறப்படுகிறது. நிதியின் கிழவர் என்ற புலவரும் தமிழ் முதற்சங்க காலத்திலயே இருந்துள்ளார்.
தமிழ் வணிகர்கள் தங்களை நாகர் குலத்தை சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். மத்திய இந்தியா வரை நாகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், இரண்டாம் சந்திர குப்தர், ஆட்சியைப் பெற "குவேரா" என்ற நாக இளவரசியை மணந்தாக கூறப்படுகிறது. குப்தர்கள், பல்லவர், சோழர், சிங்கள மன்னன் வரை நாக கன்னிகளை மணந்து ஆட்சி அதிகாரத்தை பிடித்த தகவலும் இலக்கியம் மற்றும் வரலாற்றில் வருகின்றன.
படம்: கீழடி பானை ஓட்டில் குவிரன் ஆதன்.

குவிரன், ஆதன் வடமொழிச் சொல் அல்ல! தமிழ்ச்சொல்லே!
கீழடி அகழாய்வில் அறியப்பட்ட "குவிரன்" என்ற சொல் வடமொழிச் சொல் என சாதிக்க நினைக்கும் சில வடமொழி ஆதரவாளர்களுக்குத் தக்கதொரு பதிலாக தொல்லியல் அறிஞர் டாக்டர் ராஜவேலுவின் பதில்..
தவறான தகவல்கள் பகிரப்படுவதை தவிர்க்க இச்செய்தியை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
~~~~~~~~~
"குவி" என்பது வணிகத்தின் அடிப்படையில் பிறந்தது. கூல வணிகன் போன்றது தமிழ் சொல். ஐராவதம் பிற்கால வடமொழி குபேரனுக்கு இட்டுச் சென்றது பெரும் தவறு. எடுத்துக்காட்டுகள் சொல்லும்பொழுது மூலச் சொல் எப்பொழுது வழக்கில் வந்தது என்பதை பார்க்க வேண்டும். மொழியியலார்கள் செய்யும் தவறுகள் இவை. வடமொழியில் ப தமிழில் வ ஆகும் என இலக்கணத்தை வகுப்பர். வடமொழியே புழக்கத்தில் இல்லாத காலத்தில் குழியின் பெயர் சொல் கொடுப்பதிலும் குகை கல்வெட்டிலும் தற்பொழுது கீழடியிலும் கிடைத்துள்ளன. அதாவது வணிகத் தொடர்பை மவன் தானியங்களை குவிப்பவன் (அல்லது) பொருள்களை குவித்து வணிகம் செய்பவன் என்ற பொருள் கொள்ளுதல் வேண்டும். கொடுப்பதில் மட்டும் நான்கு சில்லுகளில் இப்பெயர் உள்ளது ஒன்றில் குழியின் அத்தை என வருகிறது.
காலம் கணிக்கப்பட்ட பின்பு கூட வடமொழியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது நடுநிலையான ஆய்வாளர்களுக்கு அழகல்ல.
டாக்டர் ராஜவேலு
கடல்சார் தொல்லியல் அறிஞர்
...
அண்மையில் கீழடி அகழ்வாய்வின் பானையோடுகளில் எழுதிய பெயர்களில் ஆதன் என்பதும் ஒன்று. இப்பெயர் தமிழவை நூல்களில் பலவிடங்களிலுண்டு. பெரும்பாலும் சேரமரபினரின் பெயர்களே ஆதன் என்றுள்ளன. ஆனால், பாண்டி நாட்டில் கிடைத்த தொல்சான்றில் சேரப்பெயரான ஆதனெனும் பெயர் நம்முள் பலவினாக்களைத் தொடுக்கிறது. எது எவ்வாறோ இருக்கட்டும். இப்பெயர், சங்கநூல்களில் யாங்கெல்லாம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்பும் சிறுபதிவே இது. நம்முடைய சங்கநூல்களும் இப்போது கிடைக்கும் தொல்சான்றுகளும் நூறு விழுக்காடு ஒத்தே காணப்படுகின்றன. இவ்வறிவிலியேனுக்குக் கிடைத்த சிலசான்றுகளை உமக்கும் அறிவிக்கிறேன்.
மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும்.
வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது.
ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.
1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
4. பெருஞ்சேரலாதன்
5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நண்பர்களுள் ஒருவன்
6. ஆதன் - ஓரியின் தந்தை
7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன்
8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன்
9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன்
10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன்
11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன்
12. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்
15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருத்தொண்டர் மாக்கதை.
*******************
நன்றி. வணக்கம்.
பதிவிற்கு உதவிய நூல்கள் :
1. புறநானூறு நூல்
2. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சங்ககாலவரசர் வரிசை நூல்
4. பெரியபுராணம்.
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

  1. விஸாகி 2. கித்த. 3. மாஸாபாக 4. மாகிசம்ப 5 இலோகிபா 6. டகாஸி. 7. குவிரன் அதன் 8. தூகா 9. அந்தைய சம்பன் அகல் 10. ஸந்ததன் 11. ஸாசா 12. லிகன். 13 வாருணி. 14. ஸாதன். 15. தேவா. 16. அஸூ 17 ரஜக 18 சமுதஹ 19 யகமித்ரஸ 20. மதினகா

இவை அனைத்தும் பிராகிருதப் பெயர்கள். கிடைத்திருக்கும் பெயர்களில் பாதிக்கும் மேல் இருக்கலாம்.

//மண்டையில் பலமாக அடிபட்ட கழுதையின் அறிவு இருந்தால் கூட நான் சொல்வது புரியும்.
1. கீழடிக்கும் பிராமணர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
2. கீழடிக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் பிராகிருதத்தோடு இருக்கிறது என்று பானைக் கீறல்களே கூறுகின்றன. குவிரன் என்றால் குபேரன் என்பதை சுப்பராயுலு சொல்கிறார், மகாதேவன் சொல்கிறார்.
3. அசோகன் பிராமி பிராமணர்களுக்குச் சொந்தமானது அல்ல.
4. சிந்துச் சமவெளி நாகரிகம் பிராமணர்களுக்குச் சொந்தமானது அல்ல.
5. சிந்துச் சமவெளி நாகரிகத்தினர் ஹெலிகாப்டர்களில் கீழடிக்கு வந்து குதித்து விடவில்லை. அவர்கள் குஜராத், மகாராஷ்ட்ரா, ஆந்திரா பகுதிகளைத் தாண்டித்தான் வந்திருக்க வேண்டும். கீழடி உண்மையிலேயே கீழே இருக்கிறது. உண்மையாக வந்திருந்தால் அங்கு கடைசியாகத்தான் வந்திருக்க வேண்டும்.
6. கீழடி காட்டுவது இந்திய கலாச்சாரப் பெரும்பரப்பில் ஒரு பகுதி. தமிழ்நாடு ஒரு தீவு அல்ல.
7. . இங்கே கிடைத்திருக்கும் பானைகள் இந்தியா முழுவதும் கீழடிக்கு முன்னால் கிடைத்திருக்கின்றன. இங்கே கிடைத்திருக்கும் கண்ணாடி மணிகள் இங்கே செய்யப்பட்டவை அல்ல. பானை செய்யும் திறமை கீழடிக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே தமிழகத்திலும் இந்தியாவிலும் இருந்திருக்கிறது.// Ananthakrishnan Pakshirajan அவர்கள் பதிவு.
சுப்பராயலு, மகாதேவன் எல்லாம் என்ன அவ்வளவு பெரிய அறிஞர்களா?! - குபீர் குபீர் குவீரன் வேர்ச் சொல் ஆராய்ச்சி மையத்தார் கிடுக்குப்பிடி கேள்வி!


கீழடியில் கிடைத்த மகத காசு, குவிரன் பெயர் பதித்த பானை ஓடு இவை எல்லாம் எதை உணர்த்துகின்றன?! குவிரன் குபேரன் என்பதன் திரிபு! குபேரன் யாருடைய தெய்வம்?!
// பாடலிபுத்திரத்தைத் தவிர்த்துவிட்டுத் தமிழகத்தின் வணிக-பொருளாதார வரலாற்றை ஆராய இயலாது. பிஹாரி லுள்ள ராஜக்ருஹத்தின் வரலாற்றுடன் குபேரன்-ஹாரிதி புராணம் பின்னிப்பிணைந்து. அவர்களிடமிருந்து ஐந்நூற்றுவர் என்ற வணிக வர்க்கத்தார் உருவாயினர். வரு முலை ஆரித்தி என்ற குறுந்தொகைப் புலவர்-பெண்புலவர் பெயர் எதனை உணர்த்துகிறது? குவீரன் என்ற பானையோட்டுப் பொறிப்பு கீழடி அகழாய்வில் கண்டறியப் பட்டுள்ளதே! குபேரன் இயக்கர் கோமான் ஆவான். இயக்கி-இசக்கி வழிபாடு தென் மாவட்டங்களில் இன்றுவரை வலிமையாக நீடிப்பது உணர்த்துவது என்ன? இவற்றையெல்லாம் விட அடிப்படையான கேள்வி: மதுரை என்ற ஊர்ப்பெயர் எப்படி வந்தது? மதுரைக்காஞ்சி சங்க இலக்கியம் தானே?// - கேள்வி வழியே நல சிந்தனைகள் - கல்வெட்டு ஆய்வாளர் திரு. Ramachandran ஐயா அவர்கள் கமெண்டிலிருந்து!

குவேரன் என்பதே சரியான வடிவமாகத் தெரிகிறது. இது குவீரன் என்று பிராகிருதத்திலும் குபீரன் என்று சமஸ்கிருதத்திலும் வழங்கியிருக்கிறது. குபீரநாகா என்ற குப்த அரசமாதேவி இருந்துள்ளாள். குபீரன் என்பது குபேரன் என்று காலப்போக்கில் திரிபடைந்தது எனக்கொண்டால், குவீரன் என்ற மூலவடிவம் என்ன பொருளுடையது எனப் பார்க்கவேண்டும். குபேரன் என்பதை பேரம் (உடல்) சிதைந்தவன் எனப் பொருள்கொள்வது சரியன்று என்பது என் கருத்து. பாற்கடல்வடிவினன் என்ற பொருளில் க்ஷீரன் என்ற பெயர் வழங்கத்தொடங்கிக் குவீரன் (இலக்குவன் என்பது போன்று) என்றும் கீரன் என்றும் வழங்கிவந்திருக்கலாம் என எண்ணுகிறேன்

உலகம் முழுவதும் மதிக்கப்படும் வரலாற்று ஆசிரியரான சுப்பராயலு என்ன சொல்கிறார்?
The pottery inscriptions are very short and therefore the contents of these inscriptions are limited in nature. With the exception of a few inscriptions, most have only the names of the persons with one segment or two...The names are in both Tamil and Prakrit. Nearly one-fifth of the names on the pottery can be definitely recognized as Prakrit names either in the original form or in Tamilized form on the basis of the use of as many as eleven non-Tamil characters. There are other names of Prakirt origin that have been fully Tamilized avoiding non Tamil letters like Kuviran (from Kubera). There are several star-based names Asatan, Mulan, Visakan and so on. If we put together the pure Prakrit forms and Tamilized Prakrit forms they would make nearly 50% of all names found on the pottery as well as rock inscriptions.
A Concise History of South India - 2014
இன்னொரு கட்டுரையில் சொல்கிறார்:
As the Tamil merchants first took the writing knowledge from the Prakrit speaking merchants of the Northern India, the Tamil language found in the pottery inscriptions, which represents the first stage of the written, Tamil is naturally influenced by Prakrit as far as the orthography is concerned.
கட்டுரையில் இன்னொரு இடத்தில் சொல்கிறார்:
The name Kuviraṉ and its Prakrit variant Kubira is to be traced to Kubēra, who is considered as one of the eight guardian deities of the earth and also the god of riches.
'அதன்' என்ற பெயரைப் பற்றி அவர் சொல்வது:
The origin of the name Ataṉ, which occurs more frequently in both pottery and rock inscriptions, is also difficult to judge. The name Ātaṉ (with the long vowel ―ā), which is found among the names of some Chera kings, may be different from Ataṉ (with the short 'a').
- Pottery inscriptions of Tamil Nadu - A comparative view 2008
கீழடி பானைத் துண்டுகளில் கிடைத்துள்ள பெயர்கள் 'அதன்', 'குவிரன் அதன்'. இப் பெயர்களே கொடுமணல் பானைத்துண்டுகளிலும் இருக்கின்றன. கல்வெட்டுகளிலும் இருக்கின்றன. எனவே இவை வணிகர்களின் பெயர்களாக இருக்க பெரும் வாய்ப்பிருக்கிறது.
எல்லா உணர்ச்சிகளும்:
நீங்கள், Baalaji JI, Venkatramanan Srinivasan மற்றும் 41 பேர்

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா