Thursday, October 31, 2024

லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

 13 Oct 2023 04:48 AM

சென்னை: சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, 2019-ல் வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்திருப்பதையும் கண்டறிந்தனர்.

இதனால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து மறுபுறம் விசாரணை மேற்கொண்டு, மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதில், 2019 மற்றும் 2021-ல் மொத்தம் ரூ.277.59 கோடி, 2022-ல் ரூ.173.48 கோடி மதிப்புகளில், அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஏற்கெனவே முடக்கியது.

கடந்த மே மாதம் மீண்டும் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.456.86 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் இணைந்து கோவையில் மார்ட்டின் வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் மார்ட்டினின் வீடு, அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று சோதனை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.

இதேபோல், சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டினின் மருமகன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், திருவல்லிக்கேணியில் உள்ள மார்ட்டினின் மருமகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும், ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் மார்டினின் மகனுக்கு சொந்தமான இடத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மற்றும் சென்னையில் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸார், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை! பதறும் விசிக தொண்டர்கள்!


சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வீடு மற்றும் பொது விநியோக திட்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில், பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சில நிறுவனங்கள் வினியோகம் செய்ய ஒப்பந்த முறையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் தரம் இல்லாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான அருணாசலம் இம்பேக்ஸ் நிறுவனம் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் இன்று அமலாக்க துறையினர் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பாரிமுனையில் உள்ள அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவன அலுவலகம் மற்றும் அபிராமபுரத்தில் உள்ள இந்நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ரேஷன் பொருள் ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

இவரது வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் ’தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்’, ’ரேஷன் பொருள் அவசரம்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பிரின்ஸ் கலாடா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பைனான்ஸ் மற்றும் கட்டுமான தொழில் அதிபர் மகாவீர் ஈரானி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனும், தொழிலதிபருமான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன்க்கு சொந்தமான பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல அவரது அரைஸ் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

கோவையில் கியா ஷோரூம் உரிமையாளர் அனிஸ் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட ஆதவ் அர்ஜூனுக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விசிக சார்பில் அவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியிருந்தது. 100க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கம் குறித்த விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூன் வீட்டில் ஏற்கனவே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் கோவையில் உள்ள கியா ஷோரூம் உரிமையாளர் அனீஸ் என்பவரது வீட்டில் 3 கார்களில் வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...