Thursday, October 24, 2024

நந்தன் :- சினிமா விமர்சனம் . ஈவெரா வழி திராவிடியார் 55ஆண்டு ஆட்சியில் தொடரும் தீண்டாமை

 நந்தன் :

தமிழ்நாட்டில் நிலவும் தலித் விரோதப் போக்கினை குறிப்பாக கிராமப்புறங்களில் மிக வெளிப்படையாகவே இருக்கும் நிலையினை எந்த விதமான  சமரசமும் செய்து கொள்ளாமல் காட்டியிருக்கும் படம் நந்தன். அதற்காகவே படத்தை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இரா.சரவணனை மிகவும் பாராட்டலாம்.

 அன்றாடம் நாம் செய்தி தாள்களில் படிக்கும்,தலித்துகளின்  பிரச்சனையை படமாக்கும்போது அதில்  வந்து விடக்  கூடிய ஆவணப்படத் தன்மையும், பிரச்சார நெடியும் மிக அழகாகத் தவிர்க்கப்பட்டுள்ளதும் சிறப்பு அதைப் போலவே காட்சிகளிலும் வசனத்திலும், மிகையுணர்ச்சியும் தவிர்க்கப் பட்டிருக்கிறது.பொருத்தமான நடிக நடிகையர் தேர்வும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.கோப்புலிங்கமாக வரும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் பிரமாதமாக நடித்திருக்கிறார்.கூழ்ப்பானை/அம்பேத்குமார் ஆக வரும் சசிகுமாரை விட அவரது மனைவியாக வரும் ஸ்ருதி பெரியசாமி இன்னும் சிறப்பாக நடித்திருக்கிறார்.சசிகுமார் பரவாயில்லை.அவரது மதுரை ஸ்லாங் அவருக்கு ஒருபெரிய சுமை. அவரால் அதை மாற்றிக் கொள்ளவே முடிவதில்லை.மற்ற அனைவருமே மிகப் பொருத்தம்.சமுத்திரக்கனி கூட அடக்கியே வாசித்திருக்கிறார்.

மிக மிக இயல்பாக  எந்த சமரசமும் இன்றி சமூக யதார்த்தத்தை காண்பிக்கும்  இந்தப்  படத்திலும் சில நெருடல்கள் இருக்கத்தான் இருக்கின்றன. 

அந்த BDO  அலுவலகத்தில் அம்பேத்குமாரை அந்த அலுவலர் வலியுறுத்தி  நாற்காலியில் உட்காரச் செய்யும் காட்சியில் இன்றைய  முதல்வரின் படம் காண்பிக்கப்படுவதன் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. தலித் பஞ்சாயத்துத் தலைவர்களை  பணியாற்ற விடாமல் செய்யும் போக்கில் இன்றைய ஆளுங்கட்சியும் பிரதான பங்கு வகிக்கிறது எனும் நிலையில்,இது பொருத்தமற்றதாக இருக்கிறது.சொல்லப்போனால் 2021க்குப்பிறகு தலித்துகள் மீதான தாக்குதல் இங்கே அதிகமாகி இருக்கின்றன என்று எவிடென்ஸ் கதிர் போன்றவர்கள் அறிக்கையே வெளியிட்டுள்ளார்கள்.    (இந்த ஒரு இடத்தைத்தவிர குறியீடாகக் காட்டப்படும் பல தலைவர்களின் படங்களும் அவர்களின் பொன்மொழிகளை பொருத்தமாகவே இருக்கின்றன.)

இரண்டாவதாக,படத்தின் இறுதியில் அந்த பஞ்சாயத்துக் கிளார்க் தடாலடியாக கட்சி மாறுவது படு செயற்கையாக இருக்கிறது. அந்தக் காட்சியைத்  தவிர்த்திருந்திருக்கலாம்.மூன்றாவதாக,படத்தின் கதை நடக்கும் இடம்  புதுக்கோட்டை மாவட்டத்தின் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் என்று வருகிறது. அந்தப் பகுதியின்  வட்டார வழக்குக்கு மாறாக பெரும்பாலான பாத்திரங்கள் மதுரைப் பகுதியின் வட்டார வழக்கிலேயே  பேசுகிறார்கள்.சசிகுமார் அதில்  Prime Culprit.

படத்தின் இறுதியில் தமிழ்நாட்டின்  பல தலித் பஞ்சாயத்துத் தலைவர்களும்  திரையில் தோன்றி,அவர்களது மோசமான அனுபவங்களை  நம்முடன் பகிர்ந்து கொள்வது படத்துக்கு ஆழத்தையும் கனத்தையும் சேர்க்கிறது. 

அண்மைக்காலமாக வந்து கொண்டிருக்கும் பல போலி முற்போக்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு  ஒரு நல்ல மாற்றாக இந்தப்  படம் அமைந்திருப்பது மகிழ்வளிக்கிறது.கொட்டு காளி ,நந்தன் போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் போக்கு நல்ல திசைக்கு  மாறுவதை அறிவிக்கின்றன.இது தொடரவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

இது ஒரு புறமிருக்க,படத்தில் பேசப்படும் பிரச்சினை இல்லாத இடமாக தமிழ்நாடு மாறுவது எப்போது என்ற வலிமிகுந்த கேள்வியையும் படம் நம்முள் எழுப்பிவிடுகிறது.அதுதான் படத்தின் உண்மையான வெற்றி என்று சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா