Thursday, October 31, 2024

லாட்டரி மார்டின் வழக்கு முடித்து வைப்பு! திமுக போலீஸார் மீது சந்தேகம் கிளப்பி மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 28 Oct 2024 

https://www.hindutamil.in/news/tamilnadu/1332078-madras-high-court-order-retrial-of-lottery-martin-and-his-wife-case.html









சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமாரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பணம் லாட்டரி அதிபர் மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மகராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததன் மூலமாக திரட்டப்பட்ட தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து நாகராஜன், மார்ட்டின், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை முடித்து வைக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் ஆலந்தூர் நீதிமனறத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையேற்ற நீதிமன்றம் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

இந்த பணம் லாட்டரி சீட்டு விற்பனை மூலம் கிடைத்த பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி, லாட்டரி அதிபர், மார்ச் 2, 2012 தேதியிட்ட விற்பனை ஒப்பந்தத்தை சமர்ப்பித்து, 12.30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வாங்கியதற்காக 2012 மார்ச் 1ம் தேதி முத்திரை விற்பனையாளர் தனது மனைவிக்கு வழங்கப்பட்டதாகக் கூறினார். கைப்பற்றப்பட்ட ₹7.20 கோடி உண்மையில் சொத்து வாங்குவதற்காக செய்யப்பட்ட முன்பணம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விற்பனையாளர் மயில்சாமிக்கு 2012ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி அரசு கருவூலம் முத்திரைத்தாள் வழங்கியதும், அதை விமலா என்ற பெண்ணுக்கு 2012 மார்ச் 13ம் தேதி விற்றதும் தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு முன் தேதியிட்ட விற்பனை ஒப்பந்தத்தை உருவாக்கி, வழக்கிலிருந்து வெளியேறுவதற்காக புனையப்பட்ட ஆவணத்தை நம்பியிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக்.28) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்கள் வலுவாக இருந்த நிலையிலும், போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்திருப்பது தவறானது” என வாதிட்டார்.

மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மத்திய குற்றப் பிரிவு போலீஸாரின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை” என வாதிட்டார். அதேபோல, மார்ட்டின் தரப்பிலும் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப் பிரிவு போலீசாரே இந்த வழக்கை முடித்து வைக்கும்படி அறிக்கை தாக்கல் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். எனவே, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், அமலாக்கத் துறையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-highcourt-orders-to-continue-the-investigation-in-lottery-martin-case-650257.html

Order in favour of lottery baron Santiago Martin set aside; Madras HC allows ED to revive case

Permits ED to proceed with the money laundering investigation initiated pursuant to seizrue of ₹7.20 crore from the residence of one of the accused in the case

Updated - October 28, 2024 10:49 pm IST - CHENNAI

A file photo of  lottery baron Santiago Martin

A file photo of  lottery baron Santiago Martin | Photo Credit: Reuters

The Directorate of Enforcement (ED) probing a money laundering case can always take recourse to legal remedies available to it for prosecuting the accused even if other investigating agencies such as the State police probing into the predicate offence, based on which the money laundering case had been booked, choose to close the case booked by them under other criminal laws, the Madras High Court has held.

A Division Bench of Justices S.M. Subramaniam and V. Sivagnanam held so while allowing a criminal revision petition filed by the ED. It set aside an Alandur Judicial Magistrate’s November 17, 2022 order accepting the closure report filed by the Chennai city Central Crime Branch (CCB) police on November 14, 2022 in a criminal case registered against lottery baron Santiago Martin, his wife M. Leema Rose and three others.

The judges directed the ED and the CCB to proceed with their respective cases in tandem. Additional Solicitor General (ASG) AR.L. Sundaresan, representing the ED, had brought it to the notice of the court that the CCB had registered a case under various provisions of the Indian Penal Code after seizing ₹7.20 crore from the residence of one of the five accused at Nanganallur in Chennai on March 12, 2012

The money was suspected to be the proceeds from sale of lottery tickets. While seeking bail in the case, the lottery baron had produced a sale agreement dated March 2, 2012 and claimed that it was issued to his wife by a stamp vendor on March 1, 2012 for purchasing a property worth ₹12.30 crore. He also claimed that the seized amount of ₹7.20 crore was actually the advance payment made for the purchase of the property.

However, subsequent investigation revealed that the Government treasury had issued the stamp paper to the vendor Mayilsamy only on March 9, 2012 and that he had sold it to a woman named Vimala on March 13, 2012. Therefore, a conclusion was arrived at that the accused had created an ante-dated sale agreement and relied upon the fabricated document in order to wriggle out of the prosecution.

Though a single judge of the High Court had allowed a petition filed by the lottery baron and quashed the case booked against him by the CCB. The State took the matter on appeal and got the High Court’s order set aside in 2018. However, suddenly in 2022, the CCB turned a volte face and filed a closure report by stating that ante-dating a sale agreement was not a criminal offence, the ASG complained to the Division Bench.

Pointing out that the ED had registered a Enforcement Case Information Report (ECIR) in 2016, on the basis of the CCB’s 2012 First Information Report (FIR), Mr. Sundaresan said, the central agency was now unable to probe into the money laundering charges despite the seizure of a huge amount of ₹7.2 crore and bring the culprits to book since the Judicial Magistrate had accepted CCB’s closure report by way of a cryptic order.

Finding force in his submissions, the Division Bench wrote: “The offence of money laundering hampers the economic growth of the country. The sufferers, ultimately, will be the common man... Therefore, it is important that the State and the Central investigating agencies act in an unbiased, fair and cautious manner to ensure that the object of the PMLA is preserved.”

Stating that the closure report filed by the CCB appeared to be palpably wrong, the Bench said, the investigating officer had come to a callous conclusion of there being no evidence to prove fabrication of the sale agreement. The judges also observed that the Judicial Magistrate had accepted the closure report mechanically without taking note of the relevant facts and materials available against the accused.


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா