Saturday, October 26, 2024

தயாநிதி மாறன் மகள் நீட் பாஸ் (600க்கு 138) செய்யவில்லை. -Launch HIgh end Sneaker brand K-Kix

 நீட் தேர்வு - நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படித்து டாக்டர் ஆக சமூக நீதி காக்கும் பாதுகாப்பு. தமிழகத்தின் நம்பர்-1 கார்ப்பரேட் குடும்ப தயாநிதி மாறன் மகள் தமிழ்நாடு மாநில பாடத்திட்ட படிப்பு படித்ததால் நீட் பாஸ் (600க்கு 138) செய்யவில்லை. மலேசியா சென்று படித்தார் எனக் கதை. 


தயாநிதி மாறன் வாரிசுகள்.. கரண், திவ்யா துவங்கிய புதிய நிறுவனம்.. சென்னை தான் கோட்டை..! 

By Prasanna Venkatesh Updated: Thursday, September 7, 2023, 18:29 [IST] 

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆரம்பம் முதல் தீவிர அரசியலில் இருக்கும் காரணத்தால் அவருடைய மூத்த சகோதரர் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் போல் வர்த்தக துறையில் இல்லை. ஆனால் தயாநிதி மாறனின் வாரிசுகள் இளம் வயதிலேயே ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.

இதன் மூலம் தயாநிதி மாறன் வாரிசுகள் கரண், திவ்யா வர்த்தக துறைக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளனர். இவர்கள் துவங்கிய வர்த்தகம் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒரு டிரெண்டியான வர்த்தகமாகும்.

 நிவேதிதா அரவிந்த் (25 வயது), திவ்யா தயாநிதி மாறன் (22 வயது) மற்றும் கரண் தயாநிதி மாறன் (19 வயது) ஆகியோர் இணைந்து உருவாக்கிய பிராண்ட் தான் Kkix. இந்த நிறுவனம் சென்னையை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகும், Kkix ஒரு ஸ்னீக்கர் ஷூ கஸ்டமைஸ் சேவையை வழங்குகிறது. 

கரண் தயாநிதி மாறன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆக்கவுன்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவில் ஜூன் 2024ல் பட்டம் பெற்றார். கல்லூரியை முடிக்கும் முன்பே Spark Capital Advisors, Unifi Capital, Boston Consulting Group (BCG) ஆகியவற்றில் இன்டர்ன்ஷிப் முடித்துள்ளார். இதை தொடர்ந்து MUTIS Ethical Investment Fund நிறுவனத்தில் எனர்ஜி பிரிவின் தலைவராக 11 மாதம் பணியாற்றியுள்ளார். 

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் ஸ்னீக்கர் ஷூக்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் மற்றும் ஆர்வம் உள்ளது. இந்தியாவை ஒப்பிடுகையில் வெளிநாடுகளில் ஸ்னீக்கர் ஷூ கலாச்சாரம் அதிகமாக உள்ளது. Kkix நிறுவனம் சென்னையில் இருந்துக்கொண்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு யாரிடமும் இல்லாத ஒரு கஸ்டமைஸ் ஸ்னீக்கர் ஷூவை வழங்குகிறது.

 நிவேதிதா, திவ்யா மற்றும் கரண் ஆகியோர் ஸ்னீக்கர் ஷூ விரும்பிகள் என்பதாலும், இளம் தலைமுறையினர் மத்தியில் இருக்கும் டிரெண்ட்-ஐ உணர்ந்து Kkix நிறுவனத்தை சென்னையில் துவங்கி தற்போது இந்திய அளவில் சேவை அளிக்க உள்ளனர். "சென்னை தொழிற்சாலை விரிவாக்கம்.. அதிரடி முடிவு எடுத்த ஜப்பான் நிறுவனம்..!! "

 இதற்காக Kkix நிறுவனம் சுமார் 50 தென்னிந்திய கலைஞர்கள் கொண்ட குழுவை இணைத்துள்ளது, வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக, டிஜிட்டல் டிசைனர்கள் ஷூ வடிவமைப்புகளின் மாக்-அப்களை உருவாக்கி அதன் மூலம் ஒப்புதல் பெற்று கஸ்டமைஸ் ஸ்னீக்கர் ஷூ தயாரிக்கின்றனர். 

இதன் மூலம் ஒரு ஆர்டர் பெற்று டெலிவரி செய்ய இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரையிலான காலம் தேவைப்படும் என தெரிகிறது. இந்த நிறுவனத்தின் டார்கெட் ஆடியன்ஸ் 18 முதல் 30 வயதுடையவர்கள் மட்டுமே, K-kix கஸ்டமைஸ் ஸ்னீக்கர் ஷூ விலை 17,999 ரூபாயில் துவங்குகிறது, சில ஆர்டர்களின் மதிப்பு 30,000 ரூபாய் வரை இருக்கும்.

https://tamil.goodreturns.in/news/dayanidhi-maran-son-karan-daughter-divya-created-kkix-custom-sneaker-shoe-brand-in-chennai-036861.html?content=liteversion&ref=fb-instant


https://timesofindia.indiatimes.com/business/india-business/dayanidhi-marans-children-to-launch-sneaker-customization-platform-kkix/articleshow/99091504.cms

யாருக்கும் தமிழில் பெயர் இல்லை. நிறுவனம் பெயரும் தமிழில் இல்லை

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...