Thursday, October 2, 2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் மரணம்; தவெக, போலீசு அலட்சியத்தால்- கொத்தடிமைகள் அறிக்கை

சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி- ஸ்டாலின் குடும்பத்துடன், மற்றும் அமைச்சர்கள், போலீசு முக்கிய அதிகாரிகள் எல்லாம் தனி வழியில் செல்ல, 5 பேர் மரணம், 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் .
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் கூட்ட நெரிச, பெண்கள் மீது பாலியல் சீண்டல், சாலை வாகன நெரிசலில் ஸ்டாலின் கார் 25 நிமிடம் சிக்கி சாலையில் நின்றது.
இதில் போடவும் இல்லை, விசாரணை செய்யவும் இல்லை. மக்களைக் நிர்வாகம் என ஒன்று உள்ளதா? 
இதைக் கேட்காமல் தற்போது ஆளும் கட்சியினர் திட்டம் இட்டு செய்த விஷமங்கள் பூதாகரம் ஆகி மக்களைக் கொன்றதா? என ஆதாரம் வரும்போது ஏன் கொத்தடிமைகள் தங்களை தாழ்த்தி தரையில் படுத்தே விட்டனரே
https://x.com/SureshDMK19/status/1971875904789139930 - Tweet of Suresh DMK taken on 29th morning 8.30am

ஸ்டாலின் கரூர் செல்ல 5 மணி நேரத்திற்கு முன்னரே தனி விமானம் புக் செய்யப்பட்டது அம்பலம் !
https://athirvu.in/indian-news/cm-mk-stalin-booked-flight-to-karur-5-hours-early-prior-to-death-of-people/
கரூரில் நடந்த கொடுமையைக் குறித்து தமிழ் நாட்டின் அறிஞர் பெருமக்கள் கொடுத்திருக்கும் அறிக்கையைப் படித்தேன். அதில் கையெழுத்திட்டிருப்பவர்களில் சிலர் எந்த அறவுணர்வும் இல்லாமல் திமுகவிற்குச் சாமாரம் வீசும் கேடு கெட்ட போலி அரையணா அறிஞர்கள். இன்னும் சிலர் பெரியாரிய நாஜி அழித்தொழிப்பு வாதிகள். ஆனால் நான் உண்மையாகவே மதிக்கும் சில அறிஞர்களும், கவிஞர்களும், செயல்பாட்டாளர்களும் அவ்வறிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
என்னுடைய கேள்விகள் அவர்களை நோக்கித்தான்.
1. விஜய் மீதுதான் பெரும் தவறு இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. கூட்டத்தை வழிநடத்திச் செல்வதில் எந்த முன்னனுபவமும் இல்லாமல் திமிரையும் தடித்தனத்தையும், சினிமாத்தனமான வெற்று வேட்டு வீர வசனத்தையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஒரு கட்சியை நடத்துவது மக்கள் ஆட்சித் தத்துவத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பதும் உண்மை. ஆனால் இவ்வாறுதானே திமுகவும் வளர்ந்தது? எந்தக் கூட்டத்திற்கு அண்ணாவும், கருணாநிதியும் எம்ஜியாரும் நேரத்திற்கு வந்திருக்கிறார்கள்? மக்களைக் காக்க வைத்து கூட்டத்தைப் பெருக்குவதை ஒரு உத்தியாகக் கொண்டு வந்ததே திமுகதானே? எனவே விஜயை விமரிசனம் செய்யும் போது எல்லாக் கட்சிகளும் இச்சம்பவத்தை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டாமா? இல்லையா?
2. மின் கம்பங்கள், மரம், கட்டிடங்கள் போன்றவற்றில் கூட்டம் ஏறுவது இதுதான் முதல் தடவையா? இதற்கு முன் கட்சிக் கூட்டங்களில் நடந்ததே கிடையாதா? அத்துமீறல்களை ரசிப்பது இதுதான் முதல் தடவையா? 'அடங்கமறு, அத்துமீறு' போன்ற முழக்கங்களை முதன்முறையாகச் செய்தவர் விஜய் அவர்களா? விஜய் தமிழகத்தில் மக்களாட்சிப் போர்வைகளின் கீழ் தொடர்ந்து நடந்து வரும் பாசிச, நாஜி நாடகத்தில் ஒரு பாத்திரம். அவ்வளவுதான். ஆனால் உங்கள் அனுமதியின்றி மேடையில் இறங்கிய பாத்திரம். அதனால் அவர் மீது கோபம் பொங்குகிறதா?
3. காவல்துறை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டதா?அதை ஏன் மயிலிறகு வைத்து வருடி இருக்கிறீர்கள்? நிர்வாகத்தின் குறைபாடுகள் கண்ணுக்குத் தெரியவில்லையா? நான் சொல்கிறேன். தவறு என்றால் தவறு என்று சொல்லுங்கள்.
4. உலகம் முழுவதிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகத் திறமை மிக்கவர்கள் இந்திய நிர்வாகிகள். தமிழகத்தின் நிர்வாகிகள் திறன் மிக்கவர்கள் என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டாம். அவர்களிடம் உளவுத்துறை என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா? ஏற்கனவே விஜய் நடத்தும் கூட்டம் கட்டுங்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது என்பது நிர்வாகத்திற்குத் தெரியாதா? அப்படி இருக்கும் போது அவருடைய ஒவ்வொரு செயலையும் கண்காணித்து அசம்பாவிதம் நடக்காமல் முன் கூட்டியே தடுக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை இல்லையா? இது போன்ற சமயங்களில் நிர்வாகம் "மோசமாக எது நடக்குமோ" (the worst case scenario) அது நிச்சயம் நடக்கும் என்பதை நினைவில் வைத்துத்தான் செயல்பட வேண்டும் என்பது அடிப்படை இல்லையா?
5. உணவு, குடிநீர், கழிப்பிடம் போன்ற வசதிகள் இல்லாமல் மக்கள் துயரத்திற்கு உள்ளானார்கள் என்பது உண்மை. ஆனால் நிர்வாகம் இவற்றிற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டாமா? குடிதண்ணீர் வழங்குவது, நகர்த்தக் கூடிய கழிப்பறைகள் (moblile toilets) போன்றவற்றை அது ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? வேர்க்கடலை போன்ற தின்பண்டங்களே பசியிலிருந்து ஓரளவு நிவாரணத்தை அளித்திருக்கும். விஜய் கட்சியினர் கையாலாகாத அடிமூடர்கள் என்பதைத் தெரிந்திருந்தும் மக்களை இது போன்று கவனிக்காமல் விட்டு விடுவது நிர்வாகத்திற்கு அழகா?
6. Damned if you do, damned if you don't - என்பதுதான் நிர்வாகத்தின் தலைவிதி என்பதை நான் முற்றிலும் அறிந்தவன். தேடிப் பிடித்து குற்றம் கண்டு பிடிப்பதும் எளிது என்பதையும் நான் அறிந்தவன். ஆனாலும் கரூர் விவகாரத்தில் அடிப்படை வசதிகள், அடிப்படை அறிவிப்புகள் போன்றவற்றை நிர்வாகம் செய்திருந்தால் இவ்விழப்பு பெருமளவு தடுக்கப்பட்டிருக்கலாம். செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியது உங்கள் கடமையா, இல்லையா?
7. விஜய் தாமதமாக விமானம் ஏறுகிறார் என்பது நிர்வாகத்திற்குத் தெரியாதா? கரூருக்கு அவர் எப்போது வருவார் என்பதை அதனால் தோராயமாகக் கணக்கிட்டிருக்க முடியாதா? அவர்களே கூட்டத்திற்கு விஜய் வருவதற்கு மிகவும் தாமதம் ஆகும் என்று கூடியிருந்த மக்களுக்கு அறிவுறுத்தி இருக்க முடியாதா?
8. இதற்கெல்லாம் மேலாக விஜய் வரும் வாகனம் கூட்டத்திற்குள் வந்தால் நெரிசல் ஏற்படும் என்பதை நிர்வாகத்தால் கணிக்க முடியவில்லையா? விஜய் அவ்வாறு செய்வதை அவர்கள் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்வது அவதூறுக்கு உள்ளாக்கப் படும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் அவதூறுகளுக்கு அஞ்சும் நிர்வாகம் சிறந்த நிர்வாகம் என்று சொல்ல முடியுமா?
மீண்டும் சொல்கிறேன். கரூர் சம்பவத்திற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டியவர் விஜய். ஆனால் நிர்வாகமும் குற்றமற்றது அல்ல. இதை உங்கள் அறிக்கை தெளிவாக்கியிருக்க வேண்டும். அதுதான் அறம். #P.A.Krishnan

கூட்டறிக்கை
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் - ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப் படுத்தப் படுவதைக் காணச் சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றாம்.
விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம்.

கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.

விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலைய விட்டதும் தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச் சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல.

தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டுநாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது.

கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத் தன்மை அற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன.

எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம்.

விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
- சமூக அக்கறையுடன்,
கி.சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்
ஆர்.பாலகிருஷ்ணன், சிந்துவெளி ஆய்வாளர்
எம்.ஜி.தேவசகாயம், இ.ஆ.ப. (ஓய்வு)
எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர்
‘தி இந்து’ என்.ராம், ஊடகவியலாளர்
ஹென்றி டிபேன், வழக்குரைஞர்
ட்ராட்ஸ்கி மருது, ஓவியர்
து.ரவிக்குமார், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
சல்மா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
வண்ணதாசன், எழுத்தாளர்
பொன்னீலன், எழுத்தாளர்
கவிஞர் கலாப்ரியா
எழுத்தாளர் பாமா
ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்
பெருமாள் முருகன், எழுத்தாளர்
சுப்ரபாரதிமணியன், எழுத்தாளர்
இமையம், எழுத்தாளர்
அழகிய பெரியவன், எழுத்தாளர்
ராஜசங்கீதன், எழுத்தாளர்
கவிஞர் அறிவுமதி, பாடலாசிரியர்
கவிஞர் பழனிபாரதி, பாடலாசிரியர்
கவிஞர் யுகபாரதி, பாடலாசிரியர்
கவிஞர் சுகிர்தராணி
கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
கவிஞர் குட்டி ரேவதி
கவிஞர் சக்திஜோதி
கவிஞர் ரத்திகா
கவிஞர் பா.மகாலஷ்மி
கவிஞர் வெய்யில்
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்
கவிஞர் யாழன் ஆதி
கவிஞர் ஷங்கர்ராமசுப்பிரமணியன்
கவிஞர் முத்துவேல்
கவிஞர் செல்மா பிரியதர்ஷன்
கவிஞர் லிபி ஆரண்யா
கவிஞர் சைதை ஜெ
கவிஞர் மதிவண்ணன்
கவிஞர் கரிகாலன்
கவிஞர் கண்டராதித்தன்
கவிஞர் கண்மணி ராஜா முஹம்மது
கவிஞர் ஜோசப் ராஜா
கவிஞர் நறுமுகை தேவி
கவிஞர் தங்கம் மூர்த்தி
கவிஞர் பாரதிவாசன்
கவிஞர் மைதிலி நிதர்சனா
கவிஞர் தேவசீமா
கவிஞர் உமா சக்தி
கவிஞர் வெண்புறா சரவணன்
கவிஞர் அமிர்தம் சூர்யா
கவிஞர் தமிழ் மணவாளன்
கவிஞர் க மோகனரங்கன்
கவிஞர் ஜெனிஃபர்
கவிஞர் மரக்கா
கவிஞர் பொன்முகலி
கவிஞர் நெல்லை ஜெயந்தா
கவிஞர் சந்திரா தங்கராஜ்
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
கவிஞர் சுஜாதா செல்வராஜ்
கவிஞர் கண்மணி ராசா
கவிஞர் தமிழ்ப்பித்தன்
கவிஞர் முருக தீட்சண்யா
கவிஞர் இரா.தெ.முத்து
கவிஞர் பாபு சசிதரன்
கவிஞர் ஆனைமங்கலம் கணபதி குணசேகரன்
அ.வெண்ணிலா, எழுத்தாளர்
க.உதயசங்கர், எழுத்தாளர்
தேனி சீருடையான், எழுத்தாளர்
பவா செல்லதுரை, எழுத்தாளர்
யூமா வாசுகி, எழுத்தாளர்
ம.காமுத்துரை, எழுத்தாளர்
ராஜன் குறை, எழுத்தாளர்
இரா.முருகவேள், எழுத்தாளர்
புலியூர் முருகேசன், எழுத்தாளர்
யெஸ்.பாலபாரதி, எழுத்தாளர்
மதிக்கண்ணன், எழுத்தாளர்
சாம்ராஜ், எழுத்தாளர்
சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்
அரிசங்கர், எழுத்தாளர்
நட.சிவகுமார், எழுத்தாளர்
மு.ஹரிகிருஷ்ணன், எழுத்தாளர்
வீ.எம்.எஸ்.சுபகுணராஜன், எழுத்தாளர்
மு.அப்பணசாமி, எழுத்தாளர்
நா.முத்துநிலவன், எழுத்தாளர்
என். ஸ்ரீராம், எழுத்தாளர்
விழியன், எழுத்தாளர்
கோவை சதாசிவம், எழுத்தாளர்
மு.ஆனந்தன், எழுத்தாளர்
தி. பரமேசுவரி, எழுத்தாளர்
கரன் கார்க்கி, எழுத்தாளர்
கருப்பு அன்பரசன், எழுத்தாளர்
கே.என்.செந்தில், எழுத்தாளர்
அ.முத்துகிருஷ்ணன், எழுத்தாளர்
ஜமாலன், எழுத்தாளர்
தீபலட்சுமி, எழுத்தாளர்
சாரோன், எழுத்தாளர்
மீரான் மைதீன், எழுத்தாளர்
நந்தவனம் சந்திரசேகரன், எழுத்தாளர்
வே.கி. அமிர்தராஜ், சின்னத்திரை எழுத்தாளர்
முத்து செல்வன், சின்னத்திரை எழுத்தாளர்
அழகு நிலா பொன்னீலன், எழுத்தாளர்
கலைக்கோவன், எழுத்தாளர்
பார்த்தசாரதி எழுத்தாளர்
பேரா அரங்க மல்லிகா, எழுத்தாளர்
எழுத்தாளர் அம்பை
அ ச சேரிவாணன், எழுத்தாளர்
மாதவன் சுப்ரமணியன், எழுத்தாளர்
ஞா சத்தீஸ்வரன், எழுத்தாளர்
அவை நாயகன் எழுத்தாளர்
புதிய மாதவி, எழுத்தாளர்
அஜயன் பாலா, எழுத்தாளர்
புது எழுத்து மனோன்மணி, எழுத்தாளர்
நாராயணி கண்ணகி, எழுத்தாளர்
எழுத்தாளர் நீதிமணி, எழுத்தாளர்
சுபஸ்ரீ தேசிகன், அறிவியல் எழுத்தாளர்
தமிழ் மகன், எழுத்தாளர்
அ.கரீம், எழுத்தாளர்
துளசி பாக்யவதி, எழுத்தாளர்
தமயந்தி, எழுத்தாளர்
சீராளன் ஜெயந்தன், எழுத்தாளர்
மாதவன் சுப்ரமணியன், எழுத்தாளர்
மு குலசேகரன், எழுத்தாளர்
லட்சுமிகாந்தன், எழுத்தாளர்
முத்துக்கந்தன் , எழுத்தாளர்
விளாத்திகுளம் அன்பழகன், எழுத்தாளர்
மீனா சுந்தர், எழுத்தாளர்
எழுத்தாளர் ஹேமலதா
நா கோகிலன், எழுத்தாளர்
ஜி குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்
கமலாலயன், மொழிபெயர்ப்பாளர்
குறிஞ்சிவேலன், மொழிபெயர்ப்பாளர்
அசதா, மொழிபெயர்ப்பாளர்
ஞானராஜசேகரன், திரைப்பட இயக்குநர்
ரோஹினி, திரைக்கலைஞர்
கவிதாபாரதி, திரைப்பட இயக்குநர்
ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர்
லெனின் பாரதி, திரைப்பட இயக்குநர்
அதியன் ஆதிரை, திரைப்பட இயக்குநர்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, திரைப்பட இயக்குநர்
கௌதம் ராஜ், திரைப்பட இயக்குநர்
ராஜூமுருகன், திரைப்பட இயக்குநர்
பாரதி கிருஷ்ணகுமார், ஆவணப்பட இயக்குநர்
மீரா கதிரவன், திரைப்பட இயக்குநர்
எழில் பெரியவேடி, திரைப்பட இயக்குநர்
குணசுந்தரி, குறும்பட இயக்குநர்
பேரா.வி.அரசு, ஆய்வாளர்
வ.கீதா, ஆய்வாளர்
ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வாளர்
அ.ஜெகநாதன், ஆய்வாளர்
ந.முருகேசபாண்டியன், ஆய்வாளர்
பேரா கே.ஜோதி சிவஞானம்
பேரா. அ.ராமசாமி, ஆய்வாளர்
பேரா ஸ்ரீ.ரவீந்திரன், அசோகா பல்கலைக்கழகம், ஹரியானா
மு.ராமசாமி, நாடகவியலாளர்
பிரளயன், நாடகவியலாளர்
அ.மங்கை, நாடகவியலாளர்
சுதா ராமலிங்கம், வழக்கறிஞர்
சுகி சிவம், சொற்பொழிவாளர்
கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
கு.ராமகிருட்டிணன், தலைவர், பெரியார் திராவிடர் கழகம்
அ.அருள்மொழி, பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்
பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
பேரா. ஹாஜா கனி, பொதுச்செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
பேரா. சுப. வீரபாண்டியன், தலைவர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை
நாகை திருவள்ளுவன், தமிழ்ப்புலிகள் கட்சி
து.சேகர் அண்ணாதுரை, மாநிலச்செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
கு.ஜக்கையன், தலைவர், ஆதித்தமிழர் கட்சி
தமீமுல் அன்சாரி நிஜாமி, தேசிய செயலாளர் இந்திய சோசியலிஸ்ட் பார்ட்டி
சிவகுமார் சங்கரலிங்கம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க்கம்
ஆ.பிரகாஷ் குமார், சமூகச் செயல்பட்டாளர்
அ. தேவநேயன் சமூகச் செயல்பாட்டாளர்
சுபேர், அரசியல் விமர்சகர்
செந்தில்குமார், இலக்கியச் செயல்பாட்டாளர்
கார்த்திக், இலக்கியச் செயல்பாட்டாளர்
பேரா. செ.ஆதிரை, ஆய்வாளர்
மதுக்கூர் ராமலிங்கம், தலைவர், தமுஎகச
சுதீர் செந்தில், ஆசிரியர், உயிர் எழுத்து
டி.பாலாஜி, தமிழ் முழக்கம்
ஆர்.விஜயசங்கர், ஊடகவியலாளர்
ஆர்.கே ராதாகிருஷ்ணன், ஊடகவியலாளர்
‘நக்கீரன்’ கோபால், ஊடகவியலாளர்
மருதையன், இடதுசாரி செயற்பாட்டாளர்
ஹசீப் முகமது, ஊடகவியலாளர்
ஜெயராணி, ஊடகவியலாளர்
பாரதி தம்பி, ஊடகவியலாளர்
சுகுணா திவாகர், ஊடகவியலாளர்
பி.ஆர்.அரவிந்தாக்ஷன், ஊடகவியலாளர்
மயிலை பாலு, ஊடகவியலாளர்
வாசுகி லட்சுமணன், ஊடகவியலாளர்
கவின்மலர், ஊடகவியலாளர்
பிரிப்ஸ் என்னாரெசு, ஊடகவியலாளர்
செந்தில்வேல், ஊடகவியலாளர்
முரளி கிருஷ்ணன் சின்னதுரை, ஊடகவியலாளர்
சமரன் நாகன், ஊடகவியலாளர்
அருள் எழிலன், ஊடகவியலாளர்
மைனர் வீரமணி, ஊடகவியலாளர்
ஜீவ சகாப்தன் ஊடகவியலாளர்
கரிகாலன், ஊடகவியலாளர்
அரவிந்த் சதீஷ் செல்லதுரை, ஊடகவியலாளர்
விக்னேஷ், ஊடகவியலாளர்
பா ஜீவசுந்தரி, ஊடகவியலாளர்
அ.குமரேசன், ஊடகவியலாளர்
ஆ பீர்முகமது, ஊடகவியலாளர்
வாலாசா வல்லவன், ஆசிரியர், புதிய சிந்தனையாளன்
வாசுகி பாஸ்கர், நீலம்
கண.குறிஞ்சி, ஆசிரியர், புதுமலர்
டாக்டர் கோ.ஒளிவண்ணன், எழுத்தாளர், பதிப்பாளர்
நிழல் திருநாவுக்கரசு, பதிப்பாளர்
இஷாக், பதிப்பாளர்
அனுஷ், எதிர் வெளியீடு
அருண் பிரசாத், பதிப்பாசிரியர்
சிவசெந்தில்நாதன், பதிப்பாளர்
கருப்புப்பிரதிகள் நீலகண்டன்
ஓவியர் ராஜசேகரன்
ஓவியர் சந்தோஷ் நடராஜன்
ஓவியர் சரண்ராஜ்
ஓவியர் நிதர்சனா
மகிழினி மணிமாறன், புத்தர் கலைக்குழு
நர்த்தகி நடராஜ், நாட்டியக்கலைஞர்
ஆர் ஷாஜகான் , செயற்பாட்டாளர்
பேராசிரியர் ப சிவக்குமார், சமூகச் செயற்பாட்டாளர்
டிஸ்கவரி வேடியப்பன், பதிப்பாளர்
நிறங்கள் சிவா , சமூகச் செயற்பாட்டாளர்
பேராசிரியர் இரா காமராசு
செம்மலர் செல்வி , சமூகச் செயற்பாட்டாளர்
சரிதா ஜோ, எழுத்தாளர்
கவிஞர் சுவாதி சா.முகில்
சரிதா ஜோ, எழுத்தாளர்
பி எஸ் கீதா, சமூகச் செயற்பாட்டாளர்
சந்துரு மாயவன், ஆய்வாளர்
கே.சுகந்தி, நாட்டுப்புற திரை இசைப் பாடகர்
கவிதா கஜேந்திரன், செயற்பாட்டாளர்
கிருத்திகா தரன் , செயற்பாட்டாளர்
சாரதா தேவி , செயற்பாட்டாளர்
ரமேஷ்பாபு, செயற்பாட்டாளர்
கவிஞர் இராதமிழரசி
கவிஞர் பூங்கொடி பாலமுருகன், சிறார் எழுத்தாளர்
கவிஞர் இளையவன்சிவா
கவிஞர் மு கீதா
ஞா கலையரசி, சிறார் எழுத்தாளர்
புவனாசந்திரசேகரன், சிறார் எழுத்தாளர்
அப்பு சிவா, சிறார் எழுத்தாளர்
கவிஞர் பாரி கபிலன்
எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன்
சுரேஷ் காத்தான், செயற்பாட்டாளர்
எழுத்தாளர் அமுதாஆர்த்தி
கவிஞர் பிரியம்வதா
எழுத்தாளர் மதியழகன் சுப்பையா
மதுரை சரவணன், குழந்தைகள் செயல்பாட்டாளர்
கவிஞர் அம்பிகா குமரன்
காஸ்ட்லெஸ் தீவி
எழுத்தாளர் பிரேமா சந்துரு
எழுத்தாளர் நக்கீரன்
ச.பாலமுருகன், எழுத்தாளர்
ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
விஜி முருகநாதன் எழுத்தாளர்
(இந்தக் கூட்டறிக்கையில் இணையவிரும்பும் அன்பர்கள், இவ்வறிக்கையை தமது சமூக ஊடகப் பக்கங்களில் தமது பெயரையும் இணைத்துப் பகிரவும். இங்கும் தமது பெயரை பின்னூட்டத்தில் இடவும். )


 

No comments:

Post a Comment