ஜே டி வான்ஸின் கிறிஸ்துவ(பாசீச) புத்தியை மாற்ற முடியுமா???
2024இல் வான்ஸ்: "நாத்திகனாக இருந்த என்னை கத்தோலிக்கனாக மாற்றியது என் ஹிந்து மனைவி உஷா"
JD Vance hopes Hindu wife Usha will be ‘moved’ by the church one day, ‘eventually’ embrace Christianity
At an event honouring Charlie Kirk, US V-P says he makes ‘no apologies’ for believing Christian values are key to America’s foundation, adding that ‘neutrality’ often hides an agenda.
2025இல் வான்ஸ்: "என் மனைவியும் கத்தோலிக்கராவார் விரைவில்".
நா*ய் வாலை நிமிர்த்த முடியுமா??? தூ...
JD Vance Reveals How His Hindu Wife, Usha Chilukuri, Helped Strengthen His Catholic Faith
JD Vance hopes Hindu wife Usha will be ‘moved’ by the church one day, ‘eventually’ embrace Christianity
அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா இந்திய வம்சாவளியினர் என்பது பலருக்கும் தெரியும். ஆந்திராவைச் சேர்ந்த பிராமண குடும்பத்தைச் சேர்ந்த உஷா ஒரு ஹிந்துப் பெண்ணாக வளர்க்கப்பட்டவர். ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்தவரான ஜே.டி. வான்ஸைத் திருமணம் செய்தபிறகும் இன்னமும் ஹிந்துப் பெண்ணாகவே இருக்கிறார்.
ரிபப்ளிகன் கட்சி பெருமளவு வெள்ளையினம் சார்ந்த, கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் நிரம்பியதொரு கட்சி. டெமாக்கிரட் கட்சிக்காரர்களும் அப்படியொன்றும் உத்தமர்களில்லை. அடிப்படையில் புரொட்டெஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் ரிபப்ளிகன் கட்சியிலும், கத்தோலிக்கர்கள் டெமாக்ரட் கட்சியிலும் இருக்கிறார்கள். ஒருவிதத்தில் அமெரிக்க அதிகாரம் இந்த இரண்டு கிறிஸ்தவர்களுக்கு இடையில் மட்டுமே இருக்கமுடியும். கிறிஸ்தவரல்லாத பிற மதத்தைச் சார்ந்த இன்னொருவர் அமெரிக்க ஜனாதிபதியாவது சாத்தியமே இல்லாத விஷயம். அதிலும் ஒரு ஹிந்து அமெரிக்க ஜனாதிபதியாவது இப்போதைக்கு நடக்காத காரியம். எதிர்காலத்தில் நடக்கலாம் அல்லது நடக்காமலேயே போகலாம். தன்னையொரு ஹிந்து என அறிவித்துக் கொண்ட விவேக் ராமசாமி இன்றைக்கு ஒருமூலையில் ஒதுங்கியிருக்கிறார். சிறிய வயதில் ஹிந்துக் கோவில்களுக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்த கமலா ஹாரிஸ் தன்னை ஒரு கிறிஸ்துவச்சியாக அறிவித்துக் கொண்டபிறகே அவரால் அமெரிக்க உப ஜனாதிபதியாக முடிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நிலைமை இப்படி இருக்கையில் ஜே.டி. வான்ஸின் மனைவி ஹிந்துப் பெண்ணாக இருப்பது நிச்சயமாக ரிபப்ளிகன் கட்சியின் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுக்கு ஒரு உறுத்தலாகவே இருக்கிறது. உஷா இன்னமும் பாகனிய ஹிந்துவாகத் தொடர்ந்தால் அது ஜே.டி. வான்ஸின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும். எனவே சமிபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் ஜே.டி.வான்ஸ் தன்னுடைய மனைவி உஷா கிறிஸ்தவ மதத்தைத் தழுவிவிடுவார் எனவும், அவரது பிள்ளைகளை கிறிஸ்துவர்களாகவே வளர்ப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
அது அவருடைய சொந்த வாழ்க்கை என்றாலும் அதன் பின்னனியில் அமெரிக்க வாழ் ஹிந்துக்களுக்கு மறைமுகமான செய்தியும் விடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை பலரும் உணரவில்லை. வான்ஸ் அமெரிக்க வாழ் ஹிந்துக்கள் அனைவரும் கிறிஸ்தவத்தை ஏற்று மதம் மாறவேண்டும் என்பதே அந்த மறைமுகச் செய்தி. அப்படி மதம் மாறாதவர்களுக்கு பிரச்சினைகள் உருவாக்கப்படும். அப்படியானவர்கள் அமெரிக்காவிலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்கிற செய்தி அதில் பொதிந்திருக்கிறது.
உலகில் கிறிஸ்தவ அடிப்படைவாதம் மிகுந்த தேசத்தில் முன்னனியில் இருப்பது அமெரிக்காதான். பைபிளின் ஒவ்வொரு வரியையும், வார்த்தையையும் நம்புகிற கிறிஸ்தவர்கள் அதிலிலும் வெறித்தனமான கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கலாம். அதற்கு இணையாக அமெரிக்க நிறவெறியும் அங்கு உண்டு. அதேசமயம் கிறிஸ்தவம் மேற்குலகில் மெல்ல, மெல்ல அழிந்துகொண்டு வருகிறது.
அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் வெறுக்கும் பாகனிய கடவுள்களை வணங்கும் ஹிந்து மதம் அதே அமெரிக்காவில் இன்றைக்குத் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 1500 ஹிந்து ஆலயங்கள் இன்றைக்கு அமெரிக்காவில் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அந்த ஆலயங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அமெரிக்க வாழ் ஹிந்துக்கள் இந்திய ஹிந்துக்களைவிடவும் பக்தி சிரத்தையுடன் இருக்கிறார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை. அந்த ஆலயங்களுக்கு வரும் வெள்ளை அமெரிக்கர்கள் அதன் ஆன்மிக பலத்தைப் பார்த்து மலைக்கிறார்கள். மெல்ல, மெல்ல கிறிஸ்தவம் அங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை நிச்சயமாக கிறிஸ்தவ அடிப்படைவாத அமெரிக்கர்கள் விரும்பவில்லை. எனவே ஜே.டி. வான்ஸ் போன்றவர்கள் மூலமாக மறைமுக மிரட்டல்கள் விடுக்கிறார்கள். எதிர்காலத்தில் ஹிந்துக்களும், ஹிந்து ஆலயங்களும் தாக்கப்படும் என்றே நான் அஞ்சுகிறேன் அதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அது எப்போதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
அதே சமயம், அமெரிக்காவில் வாழுவதனை ஒரு பெருமையாகக் கருதி வாழ்கிற இந்தியர்களே அங்கு அதிகம். கிறிஸ்தவர்களாக மதம் மாறாவிட்டால் அவர்கள் இந்தியாவிற்குத் திருப்பியனுப்பப்படும் சூழ்நிலை வந்தால் 90 சதவீத அமெரிக்க வாழ் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிடுவார்கள் என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன். அந்த அளவிற்கு அமெரிக்க வாழ்க்கையின் மீது வெறித்தனம் பிடித்து அலைகிற இந்தியர்கள் அங்கு அதிகம். நான் சொல்லுவதனை நீங்கள் நம்பவேண்டும் என்பதில்லை என்றாலும் நான் அவர்களுக்கு மத்தியில் பல ஆண்டுகாலம் வாழ்ந்தவன்.
நண்பர் கலவை வெங்கட் போன்றவர்கள் இதனை எதிர்த்து அவர்களால் இயன்ற அளவு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு வெற்றியடையும் என்பதனைக் காலம் மட்டுமே பதில் சொல்லும்.

No comments:
Post a Comment