Friday, October 24, 2025

சுக்ரநீதி மற்றும் பிரஹஸ்பதி சூத்ரம் -தமிழர் மெய்யியல் அறநூல்கள் - சங்க இலக்கியச் சான்று

 சங்க இலக்கியம் கலித்தொகை 99 பாடல் (8ம் நூற்றாண்டு) அசுரர்கள்- தேவர்கள் பற்றிய விளக்கம்

சுக்ரநீதி மற்றும் பிரஹஸ்பதி சூத்ரம் பரவலாக பயன்படுத்தினர்
மருதன் இளநாகனார், மருதம், மன்னனிடம் அவன் மனைவியின் தோழி சொன்னது
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் 5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த
_________________________________


கள்ளை நீக்கின தேவர்க்கும், அதனை நீக்காத அசுரர்க்கும், அவ்விரண்டையும் கைக்கொண்டு
அறத்தொழிலாக இன்புறுத்தும் அந்தணராகிய வியாழன், வெள்ளி ஆகிய இருவரும்
வெவ்வேறு வகையாகச் செய்த அரசியலைக் கூறும் நூல் நெறியிலிருந்து பிறழாது,
குழந்தையைப் பார்த்து அதற்குப் பாலூட்டும் தாயைப் போல, இந்த உலகத்தில்
மழையைப் பொழிந்து அருள்செய்து பாதுகாக்கும் நல்ல ஊழான விதியை எல்லார்க்கும்
தப்பாமல் கிடைக்கச் செய்தலை, உனது செம்மையான ஆட்சியின் காரணமாக உலகத்துக்குத் தர வாய்த்த,
O king with a sturdy chariot with flags
and many jingling bells, decorations and
elephants, who is righteous like the unfailing
rains that fall on earth nurturing its citizens
like a mother who feeds and cares for her child,
and like the two Brahmins who do not stray
from righteousness providing joy to both
groups,
the celestials who do not drink liquor and the
Asurars who drink it!

No comments:

Post a Comment