Thursday, October 23, 2025

விழுப்புரம் ஐயனார் கோவில் குளத்தில் . திருமேனிகள் பாதுகாப்பு மைய கட்டடம்

 தமிழகத்தின் இறைவன் திருக்கோவில் உற்சவர் திருமேனிகளைப் பாதுகாக்க ஐகான் சென்டர்- திருமேனிகள் பாதுகாப்பு கூடம் 6 மாதத்தில் கட்ட 2018ல் உத்தரவு, ஆனால் 3500 பெரிய கோவில்களில் 250ல் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். விழுப்புரத்தில் கோவில் குளத்தில் . திருமேனிகள் பாதுகாப்பு மைய கட்டடம் கட்டி உள்ளனராம்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டடம் எதுவும் கூடாது! அரசு விதிகள் இதற்கு இடம் கொடுக்கவில்லை!
ஏரியில் பெருந்திட்ட வளாகம், மருத்துவக் கல்லூரி... இதெல்லாம் விதிவிலக்காக, அரசாணையின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், விழுப்புரம் ஐயனார் குளத்தில் அமைந்துள்ளது.. திருமேனிகள் பாதுகாப்பு மைய கட்டடம்...
இக்கட்டடம் கட்டுவதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள்? எந்த அரசாணை இதற்கு இடம் கொடுத்துள்ளது?
எதுவும் கிடையாது. யாரிடமும் அனுமதி பெறவில்லை..!
மாவட்டம் முழுவதும் உள்ள உலோகத் திருமேனிகள் பாதுகாப்பிற்கு, வேறு எங்கும் பாதுகாப்பான இடமே இல்லையா அறநிலையத்துறைக்கு?
கட்டடம் கட்டுவதற்கு குளக்கரையை அல்ல; குளத்தைத் தேர்ந்தெடுத்தது எதற்காக?
போலி ஆவணத்தின் மூலம் ஐயனார் குளத்திற்குச் சொந்தம் கொண்டாடும் ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகம்... அதே பாணியில், இந்தக் கட்டடத்தைக் கட்டுவதற்கு, அறநிலையத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதுபற்றி எல்லாம் இதுவரை யாரும் கேள்வி எழுப்பவில்லை. நாம் எழுப்புவோம், உரிய விடை கிடைக்கும் வரை...


No comments:

Post a Comment