வைதீக முறைப்படி நடந்த புத்தர் திருமணம்!
பிரகாசிக்கும் ஒளிவட்டம் (பாமண்டலம்) தலைக்குப் பின்னால் தோன்றும்படிக்கு அழகிய கிரீடத்தையும் ஆரத்தையும் அணிந்த போதிசத்வ சித்தார்த்தர், மேலாடை (உத்தரீயம்) மற்றும் கீழாடையுடன் (பரிதானம்) காதணிகளையும் அணிந்துகொண்டு, தன் மணமகளான யசோதரையின் கையைப் பற்றுகிறார். இது பரவலாகத் திருமணத்தில் நிகழும் பாணிக்ரஹணம் என்ற முக்கியச் சடங்காகும். காதணிகள், வளையல்கள், கழுத்தணி, அட்டிகை மற்றும் கால் அணிகலன்களுடன் யசோதரைக் காணப்படுகிறார்.
திருமணச் சடங்கின்படி, அவர்கள் இருவரும் அக்னியைச் சுற்றி ஏழு அடிகள் (ஸப்தபதி) எடுத்து வைக்கிறார்கள். மணமகளுக்குப் பின்னால், ஆபரணங்கள் அணிந்த ஒரு பணிப்பெண், யசோதரையின் மேலாடையின் நீண்ட பகுதியைப் பிடித்துள்ளார்.
சித்தார்த்தருக்கு அருகில், தலைப்பாகை அணிந்த ஒரு பிராமணர் நின்றிருக்கிறார்.
கீழே சடங்குத் தீயும் (ஹோமம்), இரண்டு புனித நீர்ப் பானைகளும் (கலசங்கள்) காணப்படுகின்றன. கீழே சிறிய பீடத்தில் அமர்ந்திருக்கும் மற்றொரு பிராமாணர் (ஹோம கர்த்தா), மரக்கரண்டியைக் கொண்டு பசுநெய்யை ஹோம குண்டத்தில் (ஆஹுதி) சேர்க்கிறார். பண்டைய காலதத்து திருமணங்களில் இந்தப் பாணிக்ரஹனமே முக்கியமான சடங்காக இருந்தது. பொயு இரண்டாம் அல்லது மூன்றாம் நூண்றாண்டைச் சேர்ந்த காந்தார தேசத்துச் சிற்பப் பலகைகள் இவை. மிக அரிதானவை.
சக்கரவர்த்தி பாரதி,
22.11.2025
திருக்குறள் கூறும் ஆன்மா எனும் உயிர் நிலையானது என்பதை முழுமையாக ஏற்காதது பௌத்தம்






No comments:
Post a Comment