விவேக் ராமஸ்வாமி போன்றவர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பானது தானா???
நேற்று அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ரிபப்ளிகன் கட்சி மண்ணைக் கவ்வியதை அடுத்து ரிபப்ளிகன் விவேக், "ரிபப்ளிகன் நண்பர்களே, இந்தத் தேர்தல் நம்மை பொருளாதாரத்தில் கவனம் செலுத்தச் சொல்கிறது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். நிற, மத அடையாள அரசியல் (identity politics) நமக்கானதில்லை. அதைக் கைவிடுவோம்" என்று பதிவிட...
ரிபப்ளிகன் நிக்கி ஹேலியின் மகன் நலின் ஹேலி, "நாங்கள் ஸ்தோத்திரம். ஸ்தோத்திரம் தான் ஆட்சியில் அமரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில் என்ன தவறு" என்று பதிவிட்டிருக்கிறான்.
"ஸ்தோத்திரம் ஸ்தோத்திரத்தை ஆட்சியில் அமர்த்துவதில் என்ன தவறு? அது ஜனநாயக உரிமை தானே?" என்பதைப் பற்றி விவேக் பேசவில்லை. 'விலைவாசி ஏறிவிட்டது (டிரம்ப் வரியால்). விலைவாசி ஏற்றத்தால் மக்கள் கடுப்பாகி டெமாக்ரட்டுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டார்கள். விழித்துக் கொள்வோம்" என்பதே விவேக்கின் கோரிக்கை.
அதைத் தவறு என்று சொல்லி அதிலும் மதத்தை நுழைக்கிறது கிறிஸ்துவ மதவெறி. இதுகள் எங்கே உருப்படப் போகின்றன??
விவேக் என்ன பதிவிட்டாலும் மத வெறி பிடித்த ப்ரௌன் - வெள்ளை - மஞ்சள் தோலர்கள் வந்து சாடுகிறார்கள், 'இது ஸ்தோத்திர நாடு. இதை விட்டு வெளியேறு' என்று. ஸ்தோத்திர கூட்டம் இப்படி எதிர்க்கும் வேளையில் வெள்ளை இன வெறியர்கள், 'இது வெள்ளைக்கார நாடு. பிரௌனுக்கு இடமில்லை' என்று விவேக்கை சாடுகிறார்கள்.
பாரதத்தில் பிரிவினை செய்ய மொழி, ஜாதி, மதம், பொருளாதாரம் என எத்தனையோ fault lines உருவாக்கினார்கள் மிஷநரிகளும், மர்ம கூட்டமும்! என்றாலும், அத்தனை வேறுபாடுகளுக்கும் ஈடு கொடுத்து ஒன்றிணைத்து வைத்திருக்கிறது சநாதனம்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இரண்டே fault lines தான்: மதம், நிறம். இந்த இரண்டிலேயே அமெரிக்கா இப்போது வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றிணைக்க ஸ்தோத்திரம் உதவவில்லை.
இதில் கவனிக்க வேண்டியது: நிக்கி ஹேலியும் விவேக்கும் ரிபப்ளிகன் ஜனாதிபதி பிரைமரியில் போட்டியிட்ட ரிபப்ளிகன்கள். இதில் விவேக் உழைத்து முன்னுக்கு வந்த மில்லியனர். தன் ஹிந்து அடையாளத்தை மறைக்காதவர். நிக்கி ஹேலி பூர்விகம் சீக்கிய மதம் என்றாலும் ஸ்தோத்திரத்தை தழுவியவர். தன் மகனும் ஸ்தோத்திரம். நிக்கி ஹேலி தன் வேட்பாளர் படிவத்தில் தன்னை ப்ரௌன் என்று சொல்லாமல் 'வெள்ளை' என்று சொன்னது கேலி செய்யப்பட்டது அங்கே. தன் நிற, மத அடையாளத்தை வெறுப்பவர்கள் மதம் மாறுகிறார்கள். என்றாலும், அதனால் எந்த பலனுமில்லை! வெள்ளைக்காரனைப் பொறுத்தவரை, ப்ரௌன் தோலர்கள் அத்தனை பேரும் வெளியேற்றப்பட வேண்டியவர்கள்.
Lessons from tonight, no sugar coating.
Wrong again. We care about religion and Christians have every right to want to be represented by another Christian. The 2010’s talking points are so cringe bro
NIKKI HALEY’S SON, NALIN, BECOMES CATHOLIC – NATIONAL CATHOLIC REGISTER
No comments:
Post a Comment