Wednesday, November 5, 2025

'ஹரியானா தேர்தல்' வோட் சோரி' என ஒரு கூத்து ராகுல் காந்தி- கதை அறுந்தது

 வோட் சோரி' கட்டுக்கதையின் தொடர்ச்சியாக நேற்றும் 'ஹரியானா தேர்தல்' பற்றி ஒரு கூத்தை அரங்கேற்றியது வின்சி. அதை ஹரியானா தேர்தல் ஆணையம் உடனே மறுத்திருக்கிறது. வழக்கம் போல வின்சியை எழுத்தில் புகாரளிக்கச் சொல்லியிருக்கிறது - வழக்கு பதிவு செய்து விசாரிக்க. வழக்கம் போல வின்சி டிமிக்கி!

பிரேசில் மாடலின் படத்தை உபயோகித்து பல வாக்காளர் அட்டைகள் இருப்பதாக வின்சி சொன்னதை ஃபேக்ட் செக் செய்திருக்கின்றன ஊடகங்கள்.
வின்சி வெளியிட்ட பூனம் என்ற நபரின் அட்டையையும் அதிலிருக்கும் EPIC எண்ணையும் பார்த்த பூனம் என்பவரின் கணவர், "என் மனைவியின் EPIC எண் உள்ள அட்டையைக் காட்டியிருக்கிறார் வின்சி. அதில் புகைப்படத்தில் பிரேசில் பெண் படம் இருக்கிறது. ஆனால் உண்மையில் என் மனைவியின் வாக்காளர் அட்டையில் என் மனைவியின் படம் தான் உள்ளது. பிரேசில் பெண் இல்லை. ஏனிப்படி பொய் சொல்கிறார் வின்சி" என்று கேட்டிருக்கிறார்.
அரசு ஆவணத்துக்கு எதிராக வின்சி காட்டியிருப்பது ஃபோர்ஜரியில் வரும். இம்மாதிரி ஃபோர்ஜரி செய்து வின்சி சிக்குவது இது முதல் முறை இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுத்தால் வின்சி நிலை பரிதாபத்துக்குரியதாகும்.
வின்சி தொடர்ந்து பாஜகவுக்கு உதவுவதைப் பிடிக்காத பியங்கா வாத்ரா இம்மாதிரி போலி ஆவணங்களைக் கொடுத்து வின்சியை சிக்க வைக்கிறதா?? வின்சி உஷாராயிருந்துக்கோ. உன் சேவை பாஜகவுக்குத் தேவை!

No comments:

Post a Comment

அமெரிக்காவில் ஹிந்துக்கள்

  வெறுப்பைப் பரப்பும் அன்புமார்கத்துக்கு மாறிய பிரௌன் தோலர் Vs அன்பைப் பரப்பும் சநாதனத்துக்கு மாறிய வெள்ளைத் தோலர்! ஸ்தோத்திரத்துக்கு மாறிய ...