Tuesday, November 25, 2025

சர்புதீன் -நடிகர் சிம்பு முன்னாள் உதவியாளரின் போதைப்பொருள் 'நெட் ஒர்க்' குறித்து விசாரணை

 சர்புதீன் -நடிகர் சிம்பு முன்னாள் உதவியாளரின் போதைப்பொருள் 'நெட் ஒர்க்' குறித்து விசாரணை ADDED : நவ 25, 2025                                                                                      https://www.dinamalar.com/news/tamil-nadu-news/investigation-into-actor-simbus-former-assistants-drug-network/4091667

சென்னை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீனின், 'நெட் ஒர்க்' குறித்து, என்.சி.பி., அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகர போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன், தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்தி வந்த இரண்டு பெண்களை, என்.சி.பி., எனும், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ரியல் எஸ்டேட் தொழில் விசாரணையில், ஒரு பெண் போதைப் பொருள் கடத்தலுடன், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

மற்றொரு பெண், சில ஆண்டுகளுக்கு முன், துபாயில் வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்துள்ளார்.

பின் சென்னை வந்து, சினிமாவி ல் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அப்போது தனக்கு பழக்கமான நடிகர், நடிகையருக்கு, போதைப்பொருள் வழங்க, கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதற்கிடையே, சென்னை மாநகர போலீசார், எல்.எஸ்.டி., ஸ்டாம்ப் எனப்படும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, சென்னை திருமங்கலம், பாடி பகுதியை சேர்ந்த தியானேஸ்வரன், 26 என்பவரை கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்படி, சென்னை தேனாம்பேட்டையில் தங்கியிருந்த, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விசுவல் கம்யூனிகேஷன் பட்டதாரி சர்புதீன், 44; வளசரவாக்கத்தை சேர்ந்த, எம்.பி.ஏ., பட்டதாரி சரத், 30; முகப்பேரை சேர்ந்த சட்டப்படிப்பு முடித்துள்ள, சீனிவாசன், 27 ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களில் சர்புதீன், நான்கு ஆண்டுகளுக்கு முன், நடிகர் சிம்புவின் உதவியாளராக இருந்துள்ளார். திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

வார இறுதி நாட்களில், தன் வீட்டில் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விருந்து அளித்துள்ளார்.

நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது, சர்புதீனுக்கும், ஏற்கனவே என்.சி.பி., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 

அதனால், சர்புதீனின் போதைப்பொருள் கடத்தல், 'நெட் ஒர்க்' குறித்து, என்.சி.பி., மற்றும் சென்னை மாநகர போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நடிகர்களுடன் தொடர்பு இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:   என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்துள்ள இரண்டு பெண்களும், சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, போதைப் பொருள் சப்ளை செய்வதையே பிரதான தொழிலாக செய்து வந்தது உறுதியாகி உள்ளது.

இவர்களின் நட்பு வட்டத்தில் சர்புதீன் இருந்துள்ளார். இப்பெண்களுக்கும், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, அஜய் வாண்டையார் உள்ளிட்டோருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடக்கிறது-இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

தோட்டக்கலை துறையில் வீணாகும் மத்திய அரசு நிதி -வீடியோ' எடுத்தது உள்ளிட்ட செலவுக்கு பயன்படுத்தியதாக கணக்கு காட்டி ரூ.75 கோடி முறைகேடு

தோட்டக்கலை துறையில் ரூ.75 கோடி முறைகேடு; வீணாகும் மத்திய அரசு நிதி  நமது நிருபர்  ADDED : நவ 25, 2025 https://www.dinamalar.com/news/tamil-n...