Tuesday, November 25, 2025

. தூய்மைப் பணியாளர் எண்ணிக்கை அதிகமாக் காட்டி ஊழல்- மஸ்டர் ரோல் தொடர்கிறது

400 தூய்மை பணியாளர்களின் பெயரை பயன்படுத்தி அம்பத்தூர் மண்டலத்தில் மாதம் ஒரு கோடி ரூபாய் ஊழல்-  கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு  24 Nov 2025 
https://tamil.hindusthansamachar.in/Encyc/2025/11/24/Karate-thiyaragrajan.php

சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியில் ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமார குருபரன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் பாஜக சார்பில் கலந்து கொண்ட கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர்,

விண்ணப்பத்தில் முதல் காளம் மட்டும் பூர்த்தி செய்தால் போதும், இரண்டாவது மற்றும் மூன்றாவது காளம் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இல்லை,

SIR பணிக்காக சாதாரண கொசு மருந்து அடிப்பவர்கள், சத்துணவு ஆயா, மகளிர் சுய உதவி குழுவில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர் அம்பத்தூர் மண்டலத்தில் 1400 தூய்மை பணியாளர்கள் பணியில் உள்ளதாக கணக்குகூறுகின்றனர், ஆனால் ஆயிரம் பேர் மட்டுமே லிஸ்டில் உள்ளனர் மற்ற 400 பேர் எங்கு பணியாற்றுகிறார்கள் என தெரியவில்லை.

400பேரின் பெயரை பயன்படுத்தி மாதம் தோறும் மாநகராட்சியில் 1கோடிரூபாய் ஊழல் நடைபெற்று வருகிறது, 400 பேரின் சம்பளம் யாரிடம் போகிறது என்றே தெரியவில்லை என்றார்,

இது தொடர்பாக ஆணையரிடம் அவர் புகார் கொடுத்துள்ளதாகவும் ஆணையர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ


 

No comments:

Post a Comment

தோட்டக்கலை துறையில் வீணாகும் மத்திய அரசு நிதி -வீடியோ' எடுத்தது உள்ளிட்ட செலவுக்கு பயன்படுத்தியதாக கணக்கு காட்டி ரூ.75 கோடி முறைகேடு

தோட்டக்கலை துறையில் ரூ.75 கோடி முறைகேடு; வீணாகும் மத்திய அரசு நிதி  நமது நிருபர்  ADDED : நவ 25, 2025 https://www.dinamalar.com/news/tamil-n...