Thursday, November 13, 2025

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் RC கிறிஸ்துவ பிஷப் அவுஸ் கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க தாக்கலான வழக்கில், அங்கு RC விவிலிய மாவட்ட பிஷப் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர இடைக்கால உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு வழக்கில் 1966ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால், இன்னும் ரோமன் கத்தோலிக்க மிஷனின், தற்போது மதுரை ஆர்சி விவிலிய ஆர்ப் பிஷப்பகம் - மதுரை விவிலிய மாவட்ட பிஷப் இல்லம் வசமே உள்ளது.

'மதுரை புரோக்ரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரீஸ்' என்ற பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை மீட்டு மீண்டும் மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

நிலத்தில் கட்டுமானத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். நில நிர்வாக கமிஷனர், அறநிலையத்துறை கமிஷனர், மண்டல இணை கமிஷனர், கலெக்டர், கோவில் செயல் அலுவலர், மறைமாவட்ட பிஷப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி நவ., 25க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.  https://www.dinamalar.com/news/tamil-nadu-news/christian-construction-on-meenakshi-temple-land-high-court-issues-notice/4081517

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துகள்: உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை மீட்டு, புனரமைத்து குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கில், கோவில் நிர்வாகம் தாக்கல் செய்த சொத்து விவர அறிக்கையில் மனுதாரருக்கு சந்தேகம் இருந்தால், அதை மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து விவரங்கள் குறித்து சந்தேகம் இருந்தால் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து விவரங்கள்: பொது நல வழக்கு தாக்கல்!

கோவில் சொத்து விவர அறிக்கையை படித்துப் பார்த்து, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை மனுவாக தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், வருகிற வெள்ளிக்கிழமை மனுதாரர் கோவில் அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களைப் பார்வையிடவும் அனுமதி அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 117 வகையான சொத்துக்கள்!

இந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் அதன் சொத்து விவரங்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் படி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமாக 1233.98 ஏக்கர் நிலங்கள் உள்ளன. மேலும், 133 வீடுகள், 108 கடைகள், ஏழு கடல் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் 157 கடைகள், கோவில் பணியாளர்களுக்கான 50 குடியிருப்புகள் என மொத்தம் 117 வகையான சொத்துக்கள் இருப்பதாக கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவில் அலுவலகத்தில் நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்க கோரிக்கை!

ஆனால், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவர அறிக்கையில் கூடுதல் தகவல்கள் இடம்பெற வேண்டும் என்றும், வருவாய்த் துறையினரிடமிருந்தும் அறிக்கை பெற உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார். மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அலுவலகத்தில் நேரில் சென்று ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை - வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

இந்த வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கோவில் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவர அறிக்கையை மனுதாரர் படித்துப் பார்த்துவிட்டு, ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை மனுவாக தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர். மேலும், வருகிற வெள்ளிக்கிழமை அன்று மனுதாரர் கோவில் அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களைப் பார்வையிடலாம் என்றும் கூறி, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கு, கோவில் சொத்துக்களை மீட்டுப் பாதுகாப்பது மற்றும் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்துவது தொடர்பான பொதுநல வழக்கின் ஒரு பகுதியாகும்.

No comments:

Post a Comment

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் RC கிறிஸ்துவ பிஷப் அவுஸ் கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ் மதுரை:  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத...