பீஹார் தேர்தல் முடிவுகள் வந்த நொடியில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக SIR க்கு எதிராக தொடர்ச்சியாக அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். முன்பெல்லாம் ஒரு மாநில தேர்தல் முடிந்தவுடன் பலவேறு ஆய்வு கட்டுரைகள் வெளிவரும்.
பீஹார் தேர்தலில் sir நடத்தில் 63 லட்சம் வாக்காளர்களை நீக்கி விட்டார்கள் என்று குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. ஆனால் அதில் இவர்கள் சொல்ல மறுக்கும், மறைக்கும் ஒரு செய்தி, அந்த 63 லட்சம் வாக்காளர்களின்
22 லட்சம் பேர் இறந்தவர்கள்
35 லட்சம் பேர் இடம் மாறியவர்கள்
8 லட்சம் பேர் போலி மற்றும் இரட்டை வாக்காளர்கள்
இந்த தகவல்களை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட யாருமே சொல்வதில்லை என்பதில் இருந்தே இவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மாஸ் பிரச்சாரத்தை கையில் எடுத்து மக்களை குழப்பும் வேலையை செய்து வருகிறார்கள்.
பிஹாரில் sir நடந்த பிறகு ஓட்டு சதவிகிதம் குறையவில்லை, கூடியிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் எழுதியிருந்தேன். தற்போது 2020 vs 2025 தேர்தல்களில் வாக்காளர்கள் எண்ணிக்கையை பற்றி விரிவாக பாப்போம் .
1. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை
2020 - 6.79 கோடி
2025 - 7.43 கோடி
அதாவது SIR நடத்திய பிறகு 64 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இந்த தகவலும் மறைக்கப்படுகிறது.
ஆண் வாக்காளர்கள்
2020 - 3.59 கோடி
2025 - 3.92 கோடி
பெண் வாக்காளர்கள்
2020 - 3.20 கோடி
2025 - 3.50 கோடி
2. வாக்கு செலுத்தியவர்கள் எண்ணிக்கை VOTERS TURNOUT
ஆண் வாக்காளர்கள்
2020 - 1.96 கோடி 54.68%
2025 - 2.46 கோடி 62.8%
பெண் வாக்காளர்கள்
2020 - 1.91 கோடி 59.58%
2025 - 2.51 கோடி 71.6%
மொத்த வாக்கு சதவிகிதம்
2020 - 57.13 %
2025 - 67.2 %
SIR நடத்திய பிறகு வாக்கு சதவிகிதமும் கூடியிருக்கிறது. வாக்களிக்கும் உரிமை konda வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள் என்று சொல்வது பொய்யான குற்றச்சாட்டு என்று இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். 10% வாக்க்களர்களை தேர்தல் ஆணையம் நீக்கிய பிறகும் பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடந்திருக்கிறது என்பதே தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தியிருக்கிறது என்பதற்கு சான்று.
3. கட்சிகள் வாரியாக வாக்கு சதவிகிதம்.
RJD தேஜஸ்வி யாதவ்.
2020 - 23.11%
2025 - 22.76%
காங்கிரஸ்
2020 - 9.48%
2025 - 8%
JDU- நிதிஷ்
2020 - 15.39%
2025 - 18.92%
பாஜக
2020 - 19.46%
2025 - 20.92%
கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்திலும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இல்லை. சென்ற தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தை பெரும்பாலும் தக்க வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமே 2% வாக்குகளை இழந்திருக்கிறது.
இந்த எண்களை பார்த்தாலே திமுக மற்றும் காங்கிரஸ் சொல்லும் 10% வாக்குதிருட்டு எங்கேயும் எதிரொலிக்கவில்லை என்பது புரியும்.
10% வாக்காளர்களை நீக்கியது உண்மை என்றால்
வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கவேண்டும்.
வாக்கு சதவிகிதம் குறைந்திருக்க வேண்டும்.
கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதமும் குறைந்திருக்க வேண்டும்.
ஆனால் மாறாக எல்லாமே அதிகரித்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் கூட்டணி.
சென்ற தேர்தலில் தனியாக நின்ற சிராக் பாஸ்வான் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தார்.
நிதிஷ்குமார் கொண்டு வந்த மதுவிலக்கு + பெண்களுக்கு உதவித்தொகை இரண்டும் பெண் வாக்காளர்களை மொத்தமாக தேஜ கூட்டணி பக்கம் திரும்பியிருக்கிறது. இவை தான் தேஜ கூட்டணியின் வரலாற்று வெற்றிக்கு மிக முக்கிய காரணங்கள்.
இந்தி கூட்டணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் காங்கிரஸ். ராகுல்.
இறுதி வரை கூட்டணிக்குள் இணக்கம் இல்லை. கூட்டணிக்குள்ளேயே எதிர் வேட்பாளர்களை நிறுத்தியது. ஒவைசி கூட்டணிக்கு வர தயாராக இருந்தும் அவரை அவமதித்தது. தேஜஸ்வியின் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகள். நிதிஷ் மதுவிலக்கை கொண்டு வந்த பிறகும், கள்ளுக்கடையை திறப்பேன் என்று தேஜஸ்வி வாக்குறுதி கொடுத்தது. பீஹார் மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமல் ஓட்டு அதிகார யாத்திரை நடத்திய ராகுல். இவை தான் இந்தி கூட்டணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்கள்.
ஆனால் இந்த காரணங்கள் எதைப்பற்றியும் விவாதிக்கவே எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை.
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொய்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி தேர்தல் ஆணையத்தின் மீதி அவதூறு பரப்புகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் பாஜக வெற்றி பெற்றது என்பதும் தவறான பொய்யான தகவல்.
மொத்தம் 109 இடங்களில் 20 ஆயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது தேஜ கூட்டணி.
53 இடங்களில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
மேலும் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வெற்ற வாக்கு விபரங்கள், பூத் வாரியான விபரங்கள் வெளியாகும் போது, யாருடைய வாக்குரிமையும் பறிக்கப்படவில்லை என்பதை எளிதாக நிரூபிக்க முடியும்.
அவதூறு பரப்புபவர்கள் இது போன்ற எந்த ஒரு தரவுகளையும் சொல்வதில் என்பதில் இருந்தே திமுக, காங்கிரஸ் கூட்டணி பொய்களை பரப்புகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
https://www.facebook.com/photo/?fbid=25830820339844593&set=pcb.25830873476505946

No comments:
Post a Comment