Monday, December 8, 2025

விளக்கு ஏற்ற எண்ணெய் -ஆன்மீகம் பெயரில் 100% போலி.

 தீபம் விளக்கு ஏற்றக்கூடிய எண்ணெய் என்றொரு பிராண்டுக்கு ஹிந்தி நடிகர்கள் நடிகைகள் ஒருநாள் படப்பிடிப்புக்கு இரண்டு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நடிக்கின்றார்கள். அந்த விளம்பரத்தை பார்க்கும் போது தெய்வ பக்தி நம்மிடம் உடனே வந்து ஆசீர்வதிக்கும் என்ற நிலையில் வெகு அற்புதமாக இருக்கும்.    

                                                         

https://www.facebook.com/photo/?fbid=25819903884259971&set=a.218390948171283
தீபத்துக்கு விளக்கேற்றுவது அது சார்ந்த வியாபாரங்கள் குறித்து கடந்த இரண்டு வாரங்களில் மிகப்பெரிய ஆச்சரியத்தை உள்வாங்கினேன்.

ஆன்மீகம் என்ற பெயரில் நடந்து கொண்டிருப்பது 100 சதவீதம் போலி.

கந்த சஷ்டி விழா கடைசி நாள் என்று ஐயர் இப்படி சொன்னார்.

சந்தனம் குங்குமம் மற்ற பொருட்கள் எதையும் கையால் தொடவே முடியவில்லை.

கை எரிகிறது. எல்லாமே மோசமான தரத்தில் உருவாக்கப்பட்டது. பயமாக இருக்கிறது என்று அவ்ளோ பெரிய கூட்டத்தில் வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் வைத்து சந்தன காப்பு செய்வதற்கு முன்னால் கிளறிக் கொண்டிருந்தார்.

கோவிலில் வழங்கப்படும் பொட்டு நெற்றியில் வைத்தால் ஐந்து நிமிடத்திற்குள் தோல் எரிந்து சாம்பல் ஆகுவது போல் சங்கடமாக இருக்கும்.

விபூதியில் பெரிய அளவுக்கு இன்னமும் கலப்படம் வரவில்லை. ஓரளவுக்கு தரமான விபூதி கிடைக்கத்தான் செய்கிறது.

மற்றபடி பூஜை பொருட்களில் பாதிக்கு பாதி கலப்படம் தான்.

எந்த கோவிலுக்கு செல்ல வேண்டுமென்றாலும் முன்பே திட்டமிட்டு குறிப்பிட்ட கடைகளில் சென்று தரம் பார்த்து வாங்கி அதன் பிறகு அமைதியாக கூட்டம் இல்லாத நேரத்தில் கோவிலுக்கு சென்று உங்கள் பக்தியை கடவுளிடம் பேசுங்கள். உரையாடுங்கள். வேண்டுதல் வையுங்கள்.

விளம்பரங்களைப் பார்த்து மயங்காதீர்கள். அவசரம் அவசரமாக பொருட்களை வாங்காதீர்கள். உடல் நலத்திற்கு தீங்கானது.

உங்களுக்கு மட்டுமல்ல. அந்த சிலை எத்தனையோ வருடங்களாக அங்கு இருக்கக்கூடியது. அதன் மேல் மோசமான பொருட்களால் அபிஷேகம் செய்யும்போது அதன் பாதிப்பு விரைவில் தெரிய தொடங்கும் என்பதை உணர்ந்து இருங்கள்.



No comments:

Post a Comment

விளக்கு ஏற்ற எண்ணெய் -ஆன்மீகம் பெயரில் 100% போலி.

  தீபம் விளக்கு ஏற்றக்கூடிய எண்ணெய் என்றொரு பிராண்டுக்கு ஹிந்தி நடிகர்கள் நடிகைகள் ஒருநாள் படப்பிடிப்புக்கு இரண்டு கோடி ரூபாய் வாங்கிக் கொண்...