யணத்தின் முதல் படி குடியரசு வார இதழ் துவக்கம்தான்.
குடிஅரசு முதல் இதழ் 1925ஆம் ஆண்டு
மே மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை அன்று வெளிவந்தது.
பிறப்பொக்கும் என்று தொடங்கும் வள்ளுளுவரின் அறத்தோடு கூடிய குறளைத் துவக்கமாகக் கொண்டு குடியரசு முதல் இதழ் வெளிவருகிறது.
முன்பக்கத்தில் மூன்று திருக்குறள்கள் இடம்பெற்றன.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."
"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்"
"வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்."
என்னும் மூன்று குறள்கள் இடம்பெற்றன.
முதல் இதழின்
தலையங்கத்தில்.....
"இறைவனின் திருவடிகளில் இறைஞ்சுகிறோம்"
என்று தொடங்கி -
"எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் பாலிப்பானாக" என்று முடியும்..
/தாய்த்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றளவு ஆற்றிவர வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். /
தலையங்கம் இவ்வாறு முடிகிறது..
/மேற்கூறிய உயரிய நோக்கங்களைத் தாங்கித் தாய்த்திருநாட்டிற்குத் தொண்டியற்ற வெளிவந்துள்ள எமதருங்குழவியைத் தமிழ்மக்கள் அனைவரும் முழுமனதுடன் ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடையோம். இப் பத்திரிகையின் வருடச் சந்தா ரூபா மூன்றே தான். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று வெளிவரும். இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள் பாலிப்பானாக./
அறிவையும் ஆற்றலையும் இறைவனிடம் வேண்டி தலையங்கம் முடிகிறது.
No comments:
Post a Comment