பாவேந்தர் நினைவுகள்` என்ற நூலினைப் படித்துக் கொண்டிருந்தேன், அதிலுள்ள ஒரு செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதே இப் பதிவின் நோக்கம். பாவேந்தர் பாரதிதாசன் புதுச்சேரியில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியமையும், அப் பகுதி முன்னர் பிரான்சு நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தமையும் நாம் அறிந்ததே! அவர் பணியாற்றி வந்த பள்ளியில் தமிழாசிரியர்களுக்கும், பிரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குமிடையே எப்போதும் ஒரு போட்டி நிலவி வந்தது. யூல்சு பெர்ரி (Jules Ferry) எனும் பிரெஞ்சுத் தலைவருக்கான விழா ஒன்று பிரான்சிலும் அதன் ஆதிக்கமுள்ள பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. பெர்ரி பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும், இவருடைய சீர்திருத்தத்துக்கு முன் பிரான்சில் கல்வி மதகுருமார்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. அப்போது கல்வி என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாகவிருந்தது. ஏழை எளிய மக்களை அறியாமைக்குள் வைத்திருப்பதன் மூலமே அவர்களை மதத்துக்கும் அதன் வழி செல்வந்தர்களுக்கும் அடிமையாக வைத்திருக்க முடியும், அதனால் அப்போது மதகுருமார் ஏழை- எளிய மக்களின் கல்வி பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இந்த முறையினை பெர்ரி அவர்கள் மாற்றியமைத்தார். இரண்டு முகன்மையான மாற்றங்களை அவர் கல்வியில் புகுத்தினார். முதலாவதாக மதகுருமார்களின் பிடியிலிருந்த கல்வி வழங்கும் செயற்பாட்டினை அரசின் பிடிக்குள் கொண்டு வந்தார் , இரண்டாவதாக பகுத்தறிவினை மதத்துக்கு முன் கல்விமுறையில் வைத்தார். இந்த இரண்டாவது மாற்றத்தினை ஆங்கிலத்தில் `Reason over religion` என்பர் {இன்றும் மேற்குலகக் கல்வியில் இந்த மேற்கோள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது}. இவ்வாறு மதத்தின் பிடியில் இருந்து கல்வியினை மீட்டு எல்லோருக்கும் கிடைக்கச் செய்த தலைவரின் நினைவாகவே அந்த விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் பாவேந்தர் கற்பித்த பள்ளியிலும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு பிரான்சு மொழி மட்டும் அறிந்த ஓர் உயர் அதிகாரி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவ்விழாவைச் சிறப்புச் செய்ய வாழ்த்துப்பாக்கள் பல மொழியிலும் இயற்றச்செய்வது என்ற திட்டத்தையும் போட்டார்கள். அதன்படி தமிழில் வாழ்த்துப்பா புனைய நமது பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் இயற்றிய பாடல் மதகுருமாரைக் கண்டித்து எழுதப்பட்டிருந்ததை அறிந்த சிலர் (பாவேந்தரின் எதிரிகள்), இப் பாடலினை பிரெஞ்சு உயர் அதிகாரியிடம் விழாவின் போது மொழி பெயர்த்துச் சொல்லி, பாவேந்தரை அப் பள்ளியினை விட்டுத் துரத்த வேளை பார்த்திருந்தனர். விழா வந்தது, பாடலும் பாடப்பட்டது. உடனே வஞ்சகர்கள் மொட்டையாக இது மதத்தின் (கிறித்தவ மதத்தின்) மீதான தாக்குதலாக உருவகப்படுத்திக் கோள் சொல்லினர். உடனே அந்த அதிகாரி அப் பாடலினை மீண்டும் தமிழிலும் சொல்லி, வரிக்கு வரி மொழி பெயர்த்துச் சொல்லுமாறு கூறினார். வரிக்கு வரி மொழி பெயர்க்கப்பட்ட பாடல் இதோ

“வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை,
வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை,
நறுக்கத் தொலைந்தது அந்தப்பீடை,
நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!”
பிரான்சில் ஏற்பட்ட இக் கல்விப் புரட்சி, அதாவது மதத்தின் பிடியிலிருந்து அறிவியல் வழிக்கு கொண்டு சென்ற புரட்சி, பிரெஞ்சு நாட்டில் மட்டுமன்றி மேற்கு ஐரோப்பிய நாடுகள் எங்கும் ஏற்றத்தினைத் தந்தது. பிரெஞ்சுச் சீர்திருத்தவாதியினையும் , அவனைப் பாடிய நம் பாவேந்தரையும் போற்றுவோம்
கிறிஸ்துமஸ் பத்தி நேத்து ஒரு செக்யூலரிஸ போஸ்ட் போட, அது ஷேர் ஆக..... என்னோட இன்பாக்ஸ்ல ஊருப்பட்ட மெசேஜ்.
போடா சங்கி, இப்படி மதவாதம் பேசாத, ஆரியன்தானே நீ, போடா பாப்பான்
இப்படி மெசேஜ்கள்.
நான் என்ன சொல்றேன்.... நீங்க எங்க வீட்டுக்கு வந்து பிரேயர் பண்ணுங்க, தொழுகை நடத்துங்க, பிளம் கேக் குடுங்க, ஒயின் குடுங்க, நோம்பு கஞ்சி குடுங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உங்க கூட சேந்து நல்லா சாமி கும்பிட்டு, பிரசாதாம் சாப்பிட நான் ரெடி.... அதே மாதிரி நானும் உங்க வீட்டுக்கு வந்து ஒரு பஜனை வச்சு, ஐயப்ப சாமிக்கு ஒரு அன்னதான பூஜை வச்சு, சாமிக்கு படச்ச பிரசாதம், பழனி பஞ்சாமிர்தம் எல்லாம் தர்றேன் நீங்களும் சாப்பிடுங்க.
எல்லோரும் ஜாதி, மதம் கடந்து ஒன்னா இருக்கலாம், எல்லோரும் செக்யூலரிஸம் ஃபாலோ பண்ணலாம்ன்னு சொல்றேன்.
அது எல்லாம் முடியாது, உங்க சாமி எல்லாம் நாங்க கும்பிட மாட்டோம், சாமிக்கு படச்சதை நாங்க கைல கூட தொடமாட்டோம்ன்னு சொல்ற நீங்க மதவாதியா இல்லை நானா ?
எந்த மத வேறுபாடும் இல்லாம எல்லோரும் ஒன்னா இருக்கலாம்ன்னு சொல்ற நான் செக்யூலரிஸட்டா இல்ல நீங்களா ?
டேய் பரமா டெம்ப்ளேட்தான்டா உங்களுக்கு, போ போய் படி போ.

No comments:
Post a Comment