பெருமாள் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் கொதிப்பு அளவீடு செய்ய தாசில்தார் உத்தரவு ADDED : டிச 10, 2025
இந்நிலையில் கோவில் சுற்றுச் சுவர் கட்டுமான பணிகளுக்கு கோவிலை ஒட்டியே, வீட்டை கட்டி உள்ள அருக்காணி என்பவர் வீட்டிற்கு செல்ல வழி விட வேண்டும் எனக் கூறி கோவில் கட்டுமான பணிக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தார்.
இது தொடர்பாக, கலெக்டர் உத்தரவின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோவில் கட்டுமானம் தொடர அனுமதிக்கப்பட்டது. அதற்காக, கடந்த, 11ம் தேதி அளவீடு பணிகளும் நடந்தது. ஆனால், கோவில் கட்டுமானத்தின் போது பல்வேறு வகையில் இடையூறு ஏற்படுத்தி பணிகள் நடைபெறாமல் அருக்காணி தரப்பில் தடுத்து வந்தனர்
இதனால், அப்பகுதியினர் மக்கள் நேற்று முன்தினம் அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கோவில் கட்டுமானப் பணிகள் போலீசார் பாதுகாப்பில் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் அருக்காணி உள்ளிட்ட உறவினர்கள் கட்டுமான பணி நடக்க விடாமல் தடுத்தனர்.
நேற்று அவிநாசி தாசில்தார் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கோவில் கட்டுமான பகுதிக்கு சென்று இருதரப்பினரிடமும் அவரவருக்கு உரிய இடங்களை அளந்து தர வருவாய் துறைக்கு மனு தரும்படி அறிவுறுத்தினர்.
தாசில்தார் சந்திரசேகர் கூறுகையில், ''தேவம்பாளையம் அழகு மாயவர் பெருமாள் கோவில் கட்டுமானம் தொடர்பாக, இரு தரப்பினரிடையே ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையாக இரு தரப்பினரும் உரிய அளவீடு செய்து தருவதற்கான மனுவை பெற்றுள்ளோம். அளவீடு பணிகள் நடைபெற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,'' என்றார்.
.

No comments:
Post a Comment