திருச்சி நத்தர்ஷா வலி தர்கா -நத்தர்ஷா யார்?
திருச்சி நகரில் சிங்காரதோப்பு பகுதியில் அமைந்துள்ளது அரேபிய வழியான முஹம்மதிய நத்தர்ஷா வலி தர்கா -நத்தர்ஷா யார்?
நாம் தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் திருச்சி தர்கா யார் பெயரால் எப்போது கட்டப் பட்டது என்பதைக் காண்போம்
அபுல் ஹசன் நத்தர் என்றும் அழைக்கப்படும் நாதர் ஷா, 15 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவி மற்றும் பிரபல சூஃபி குருவான க்வாஜா பண்டா நவாஸ் கெசுதராஸின் முக்கிய சீடர் ஆவார்.
Hazrath Nathervali Darga popularly known as NatharSha Pallivasal is located in Tiruchirappalli, Tamil Nadu.
https://goo.gl/maps/gW3eeBSpzBbbQFa4A
A brief History on Trichy Thable Alam Badhusha Nathervali Oliyullah –
Hazrat Nathar vali Sha Baba born in 956 A.D. in a place called Bahannis near Baiplas City in Syria modern day Lebanon.
He was the king of Dimishk (now Damascus) for 18 Years.
One day Prophet Muhammed (Peace) ordered Natharsha valiyullah in a dream to reach Trichy and preach the religion of peace (Islam).
He came to India with 900 Qalandars and settled in Tiruchirappalli.
During his time in Trichy, many pious persons visited Baba’s Kanqah. Among them Great Chola king Raja Raja Cholan (Ponniyin Selvan), his sister Kundavai, Sithar Bogar and his disciples were attracted by Nathar Vali sha’s preaching and it is said that they have turned to Islam.
This video will give you enough information on the complete life history of the Great Sufi Saint Hazrath Thable Alam Nathar vali Badhusha (r.a.) https://www.netsufi.com/38/
இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார் பொ. ஆ 980 ல் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வெகு காலமாக உருட்டப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பேராசிரியர் அகத்தியதாசன் எழுதிய குந்தவை நாச்சியார் எனும் நூலை மேற்கோள் காட்டி இது போன்ற வரலாற்றுத் திரிபுகள் வலம் வருகின்றன.

நாம் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்காத போதே மதவாதி என்ற பட்டத்தை சூட்டும் சில தமிழறிஞர்கள் இதற்கெல்லாம் மறுப்பு பதிவு எழுதினால் நேரடியாக மதவாதியாக மாற்றி விடுவர் என்ற ஐயம் இருந்தாலும் இதற்கு எதாவது ஒரு வகையில் மறுப்பு எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலர் வலியுறித்தியதன் விளைவாக இப்பதிவு..!
முதலில் இது பற்றிய தகவல்கள் கிடைக்கும் நூல் அகத்தியதாசன் அவர்கள் எழுதிய ஒரு ஆய்வு நூலாகும். இந்நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டு இதற்கு மறுப்பு எழுதுவோம்.
1. இராஜராஜ சோழன் பொ.ஆ 962 ல் பிறந்தார்.
2. குந்தவை நாச்சியார் பொ.ஆ 953ஆம் ஆண்டு பிறந்தார்.
3. குந்தவை நாச்சியார் பொ.ஆ 1026 ல் இயற்கை எய்தினார்.
4. இந்த தரவுகளுக்கு ஆதாரங்கள் அரேபியாவில் இருந்து வந்ததாம்.
5. குந்தவை நாச்சியார் மதம் மாறியதால் மாரியம்மன். மதம் விட்டு நீங்கியதால் காளியம்மன்.
6. வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்தான் பரவியது அரச குடும்பத்தினரை கொலை செய்வதன் மூலமும் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதன் மூலமும் வைணவம் பரப்பப்பட்டதால் தனது தன்மானத்தை காக்க குந்தவை நாச்சியார் மதம் மாறினார்.
7. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார் தனக்கு தானே திருமேனி ஒன்று எடுத்தார்.
இப்படியாக ஏகப்பட்ட தகவல்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டி கிடக்கின்றன அந்நூலில். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அரேபியாவில் உள்ளது என்று எளிதாக கடந்து சென்றுள்ளார் ஆசிரியர்.
சரி இவற்றிற்கு நாம் பதில் சொல்வதானால் சில வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்களிடம் வினவியபோது ஒருசில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன…!
இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 962 என்பதே தவறான தகவல் எனவும், இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 947 என்பதே பெருவாரியான தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவு என்பது அந்நூலின் கூற்றுகளுக்கு பெருத்த அடியாகும்.
குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி என்பதால் தோராயமாக பொ.ஆ 945 ல்தான் குந்தவை நாச்சியார் பிறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் குந்தவை நாச்சியாரை மதமாற்றம் செய்தவர்கள் பொ.ஆ 953 வரை எடுத்துச்செல்வது விந்தையிலும் விந்தை…!
பொ.ஆ 1004 வரை தான் குந்தவை நாச்சியார் வைதீக முறையை பின்பற்றி வந்தார் எனவும், அதுவும் 9 வயதில் பாபா நந்தர் எனும் இஸ்லாமிய போதனையாளரை சந்தித்ததில் இருந்து வைதீக முறைகளில் நாட்டமில்லாமல் தான் இருந்தார் எனவும் எழுதிய ஆசிரியர் பொ.ஆ 1004 க்கு பின் இஸ்லாம் மதத்தை நேரடியாக தழுவினார் என்று எழுதுகிறார்.
இங்கே மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுகிறது. அது என்ன?
பொ.ஆ 1004 ல் இஸ்லாம் மதத்தை ஏற்ற குந்தவை நாச்சியார் 14 ஆண்டுகள் கழித்து எப்படி பழயாறை அரண்மனையில் தங்கி அரசு பணிகள் மேற்கொண்டார்?அதாவது பொ.ஆ 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப் பணிகள் மேற்கொண்டார் என்றும் கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார் என்பதும் கல்வெட்டு கூறும் செய்தி. அதாவது தனது 73 வயதிலும் ( 1018 – 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார்.
இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம். ஆக குந்தவை நாச்சியார் தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார் என்பது மதவெறியின் உச்சமே!
வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் பரவியது என்று கூறும் ஆசிரியர் வைணவ மத மாற்றத்திற்கு அஞ்சியே குந்தவை நாச்சியார் மதமாறியதாக தனது பிராமண வெறுப்பை வைதீக பிராமணர்கள் மீது காட்டியுள்ளார்.
ஒருவேளை 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தான் வைணவம் வளர்ந்தது என்றால் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வைணவர்களுக்கென தனியாக சித்தாந்தங்களை வகுத்தார்?
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்குஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே
-திருமந்திரம்.
12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில்தான் வைணவம் வளர்ந்தது என்றால் ஐந்தாம் நூற்றாண்டில் வைணவம் என்றொரு சமயம் இருந்ததைத் திருமூலர் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இது கொடு மணல் அகழாய்வில் வெளிப்பட்ட பானையோடுகளில் பழந்தமிழ் எழுத்தான தமிழியில் காணப்படும் பெயர்களில் ஒன்றுதான்,
“கண்ணன் ஆதன்”
இது திருமால் வழிபாட்டின் எச்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தொல்காப்பியத்தின் மாயோன் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு அறியலாம். இதன் அடிப்படையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கண்ணன் எனும் திருமால் வழிபாட்டை கொண்டுள்ளோம் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது.
அதுபோல சங்க இலக்கியங்களில் பெருமளவில் புகழப்படும் தெய்வம் திருமால்தான் என்பதை அந்நூலின் ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் வைணவம் வளர்ந்தது என்பதுபோன்ற கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார்…!
அடுத்ததாக தஞ்சை பெரிய கோவிலில் தனக்குத்தானே திருமேனி ஒன்றை குந்தவை நாச்சியார் எடுத்ததாக அந்நூலில் பதிவு செய்துள்ள ஆசிரியர், தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்துள்ளார் என்பதைத் தான் “தம்மை” என்ற சொல்லால் குறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறதே அன்றி “தம்மை” என்றால் தனக்குத்தானே என்று பொருள் அல்ல.
இதை “தம் அம்மை” அதாவது தனது தாய் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல வரலாற்றுத் திரிபுகள் தான் அந்நூலில் இடம் பெற்றுள்ளதே அன்றி குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை!
-பா இந்துவன்
படித்ததில் பிடித்தது!!
குந்தவை நாச்சியார் இஸ்லாத்துக்கு மாறினாரா?
குந்தவை இசுலாமியர் தொடர்பு சோழர் இசுலா நத்தார் ஆலம்
| 24/10/15 | |||
ஸ்ரீ ரங்கம் கோயிலொழுகு கூறும் செய்திகள், சமயபுரம் கோயில் தலபுராணம் கூறும் செய்திகள், ஸ்ரீ ரங்கம் கோயில்,சமயபுரம் கோயில் அமைவிடங்கள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்தால் குந்தவை நாச்சியார் மதம் மாறிய இடம்,சமயப்புரட்சி செய்த இடம் சமயபுரமாக இப்போது அழைக்கபட்டுவருகிறது என்பதையும் ஆதியில் சமயபுரத்தின் பெயர் கண்ணனூர்,கண்ணபுரம் என்றே"கோயில் புராணம்" சொல்வதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், குந்தவையின் மதமாற்றத்துக்கு பிறகே, இப்பெயர் வந்திருக்கும் என்பதையும் நாம் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்!
குந்தவை இஸ்லாம் மதத்துக்கு மாறி, இஸ்லாமிய பெண்ணாகவே இறந்துள்ளார்.!
அவர் இறந்து, அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதியும் கூட திருச்சியிலேயே தான் இருக்கிறது!
அவரது சமாதி, இஸ்லாமிய ஞானியும்,குந்தவையின் வளர்ப்பு தந்தையுமான "ஹஜரத் தபலே ஆலம் பாதுஷா, நத்தார் வலியாரின்" அடக்க இடமான தர்காவிலேயே குந்தவையும் அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்! இன்றும் இவரது சமாதி, நத்தாரின் தர்காவில் இருந்து வருகிறது!
குந்தவை நாச்சியார் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருச்சி, நத்தர்வலி தர்கா இவரது சமாதியை "மாமா ஜிகினி" என்றபெயரிலும், "சோழ ராஜாகி பேடி' என்றும் அழைத்துவருகிறார்கள்!
"மந்தாகினி" என்ற குந்தவையின் மற்றொரு பெயரே, "மாமா ஜிகினி" என்று மருவி அழைக்கப்பட்டு வருவதாக நெல்லிக்குப்பம.'ஹைதர் அலி' என்ற இஸ்லாமிய அறிஞரும், பன்னூலாசிரியரும் கருத்து தெரிவிக்கிறார்!
"ஜிகினி" என்பதற்கு பிரகாசம், ஒளிரும் என்று பொருள் என்றும், மிகவும்
"பிரகாசமானவர்',"மிக பிரசித்தி பெற்றவர்" குந்தவை என்பதால், "மாமா
ஜிகினி" என்ற பெயர் வந்தது என்றும் சிலர் கருதுகிறார்கள்!
1998 -ஆம் ஆண்டு, திருச்சி நத்தார் தர்காவின் ஆயிரமாண்டு நினைவுநாள்
நடத்தப்பட்டது! தர்கா வெளியிட்டுள்ள ஆயிரமாண்டு மலரில் "மாமா ஜிகினி"
என்பதற்கு காரணமான ஒரு நிகழ்ச்சி கூறப்பட்டு உள்ளது!
சிறுவயதில், நத்தாரின் பாதுகாப்பில் குந்தவை வளர்ந்தபோது,ஒருநாள்
மின்மினிப் பூச்சி ஒன்றைபிடிக்க குந்தவை முயன்று அது முடியாமல்
போனாதால், அழுததாகவும், அவரது அழுகையைப் போக்க நத்தார் வலியார்
அவர்கள்,குந்தவியைச் சுற்றிவருமாறு மின்மின்ப் பூச்சிகளை செய்ததாகவும்,
அப்படி மின்மினிப் பூச்சிகள் சுற்றிவரும்போது ஏற்பட்ட வெளிச்சத்தைப்
பார்த்து,குந்தவை வியந்து "மாமாஜிகினி" என்று கூறியதால்,அவரை அப்படியே
இஸ்லாமியர்கள் அழைத்துவந்தனர் என்கிறது. மின்மினி வெளிச்ச்ச்தில்
மிகபிரகாசமாக குந்தவை தோன்றியதால் அவருக்கு அந்தபெயர் வந்தது என்றும்
கூறுகிறார்கள்!
எது எப்படியோ! ,எத்தனையோ அறிய வெற்றிகளுக்கு,சாதனைகளுக்கு சொந்தமான
ராஜராஜனின் சமாதி, அடக்க இடம் எது ? எனபது குறித்து சர்ச்சைகள் இன்றும்
நிலவிவரும் நிலையில்....,
குந்தவை என்று அறியாமலேயே,அவரது சமாதியை, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
இன்றுவரை இஸ்லாமியர்கள் பேணிக் காத்து வருகிறார்கள் எனபது வியப்பளிக்கும்
உண்மையாகும்!
குந்தவை எப்போது மதம் மாறியிருப்பார்? எனபது குறித்தும், அவர் தொடர்பான
முக்கிய செய்திகளையும் அடுத்து பார்க்கலாம்!
கடுங்கோன் பாண்டியன் 30 April 2013 at 03:59
Hosur rajan sir,
Please tell me your address sir.I am also in hosur.
I have a book on 'Kundhavai naachchiyaar' written by 'ayoththi thaasan'. He quoated you in his book review. I want more information on Kundhavai naachchiyaar history. Please send me your phone/address
details to tryponraj@gmail.com





No comments:
Post a Comment