GTS சர்வே திரிகோண மிதி அளவைத் தூண் என்றால் அந்த சர்வே கருவியை மேலே வைத்து பார்க்க என இருகக் வேண்டும் https://en.wikipedia.org/wiki/Great_Trigonometrical_Survey

சர்வே கற்கள் என்றால் அவை சிறிதாக சர்வே எண் அடையாளமுடன் இருக்கும். மலை மேல் தூண் தேவை இல்லை, அங்கிருந்து ஊரே தெரியும்
1725 ல் கண்டுபிடிக்கப்பட்ட கருவி... காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிக் கொண்டே வருகிறது
இந்த தியோடலைட் கருவி, இந்திய வரைபடத்தைத் தயாரிக்கத் தொடங்கிய வெள்ளைக்காரர் லாம்ப்டன் காலத்தது. இதன் எடை அரை டன். அதாவது 500 கிலோ. இதைத் துாக்கிச் செல்வதற்கு குறைந்தது 12 பேர் தேவை. இந்தக் கருவியை, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் மீது பொருத்த முடியுமா? இதன் உயரத்தைப் பார்க்கும்போது, அப்படிப் பொருத்தாமலேயே அளவையை மேற்கொள்ள முடியும் என்று தெரிகிறதே!
தீபத் துாணின் உச்சிப் பகுதியின் நீள, அகலம் அதிகபட்சம் ஒன்றரையடி கூட இருக்காதே!
இந்தக் கருவிக்கும் அந்தத் துாணுக்கும் தொடர்பே இல்லையே!
இந்த கணக்கெடுப்பின் ஆரம்பப் பணி, சென்னைக்கு (சென்னை) அருகில் தொடங்கியது.
சென்னை (மெட்ராஸ்): முழு GTS திட்டமும் அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 10, 1802 அன்று முதல் அடித்தள அளவீட்டோடு தொடங்கியது. சென்னை ஆலந்தூர் பரங்கி மலை: இந்த மலை அசல் 7.5-மைல் (12.1 கிமீ) அடித்தளத்தின் வடக்கு முனைப்புள்ளியாக இருந்தது. சர்ச் மொட்டை மாடியில் உள்ள ஒரு குறுகிய கட்டமைப்பில் உள்ள ஒரு அம்பு போன்ற குறியீடு முதல் பிளம்ப் கோடு விழுந்த சரியான இடத்தைக் குறிக்கலாம்.
பெரும்பாக்கம் மலை (தாம்பரத்திற்கு அருகில்): இது முதல் அடித்தளத்தின் தெற்கு முனைப்புள்ளி.
நுங்கம்பாக்கம்: இங்குள்ள மெட்ராஸ் ஆய்வகம் (இப்போது வானிலை ஆய்வு நிலையம்) ஒரு முக்கிய நிலையமாகவும் செயல்பட்டது, மேலும் எச்சங்கள் எஞ்சியிருப்பதாகக் கூறப்படுகிறது








No comments:
Post a Comment