Tuesday, December 2, 2025

இந்திய அரசு - "Sanchar Saathi" app

 Reuters வெளியிட்ட ஒரே ஒரு கட்டுரை: ‘India orders smartphone makers to preload state-owned cyber safety app.’ போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரகசியமாக அனுப்பிய ஒரு memo, Reuters கையில் கிடைத்திருக்கிறது. சஞ்சார் சாதி குறித்து வெளியான இந்த ஒரு செய்தி மிகப் பெரிய அளவில் பிரச்சனையாக வெடித்துள்ளது.

Sanchar Saathi என்பது என்ன? ஏமாற்றும் நோக்கோடு வரும் அழைப்புகள், commercial அழைப்புகள், போன்றவற்றை எளிதாக report செய்வதற்கும், தொலைந்து போன போன்களை எளிதாக கண்டுபிடிப்பதற்கும் Sanchar Saathi app உதவும் என்கிறது அரசு. இதுவரை 7 லட்சம் தொலைந்த போன்களை trace செய்து மீட்க இந்த app உதவியது என்பது நல்ல செய்தி.
ஆனால் பிரச்சனை என்னவென்றால், இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து புதிய போன்களிலும் அடுத்த 90 நாட்களுக்குள் இந்த செயலியை கட்டாயமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிறது மத்திய தொலைத் தொடர்புத் துறை. அப்படி install செய்யப்படும் இந்த app and its “functionalites cannot be disabled or restricted.”
நமது போனில் அழைப்புகளை செய்யவும், செய்திகளை அனுப்பவும், call and message logs, photos, files, camera போன்றவற்றை access செய்யவும் இந்த app-ஆல் முடியும்.
இந்தியாவில் 120 கோடி mobile users இருக்கிறார்கள். புதிய போன்களுக்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் போன்களிலும் software update மூலம் இந்த app-ஐ ஏற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது.
2 problems.
One, பொது மக்களின் போன்களில் கட்டாயப்படுத்தி ஒரு செயலியை அரசு திணிப்பது ஆரோக்கியமான விஷயம் அல்ல.
இது privacy சார்ந்த விஷயம் என்பதால் அரசின் இந்த உத்தரவை ஏற்க முடியாதென Apple சொல்லிவிட்டது. ஆப்பிளின் முடிவு 100% சரி.
Two, சமீபத்தில் நான் படித்ததில் என்னை உலுக்கிய புத்தகம் பத்திரிக்கையாளர் Strittmatter எழுதிய ‘We Have Been Harmonised.’ பல ஆண்டுகள் சீனாவில் foreign correspondent-ஆக இருந்தவர். எப்படி சீன கம்யூனிஸ்ட் அரசு authoritarianism-ல் இருந்து (strong control, but limited freedom) totalitarianism-க்கு (complete control of private and public life) நகர்ந்தது என்பதை மிக விரிவாக எழுதியிருக்கிறார்.
சீனா தான் உலகின் முதல் digital totalitarian state என்கிறார் Strittmatter. எங்கு திரும்பினாலும் facial recognition, AI மூலம் கண்காணிப்பது, internet censorship என முழுக்க முழுக்க தன் நாட்டு குடிமக்களை சீனா வேவு பார்க்கிறதாம்.
Sanchar Saathi செயலியை கட்டாயமாக்குவது கண்டிப்பாக இது போன்ற ஒரு நிலைக்கே இந்தியாவைத் தள்ளும்.
தங்கள் போன்களுக்கு cyber security வேண்டுமென்போர் இந்த செயலியை ஏற்றிக்கொள்ளட்டும்.

No comments:

Post a Comment