Monday, October 20, 2025

நவீன திராவிட பட்டாசு ஊழல் பல கோடி மோசடி (கிருஷ்ணகிரி இன்ஸ்டா செலிபிரடி)

தீபாவளி சிட்பன்ட்ஸ்னு பணம் ஏமாந்து பாத்திருகோம்.. பட்டாச வச்சி ஏமாத்தி பாத்திருக்கீங்களா..??

ஆமா அது நடந்திருக்கு அதுவும் நம்ம தமிழ்நாட்டுல...பெருசா எவனும் கண்டுக்கல அதான் மேட்டர்...

நடந்த விஷயத்த ஆர்டரா சொல்றேன் புரிஞ்சிகோங்க...

நம்ம கிருஷ்ணகிரில ஒரு இன்ஸ்டா ரீல்ஸ் போடுற செலிபிரடி இருகாப்ல...

பலரும் அவரோட வீடியோவ அவருனு தெரியாமயே பாத்துருபீங்க...

லட்ச கனக்குல பாலோவர்ஸ் இருகாங்க...

போன மாசம் அவருக்கு "பாண்டியன் பட்டாசு கம்பெனி" சிவகாசில இருந்து பேசுறோம்..எங்களுக்கு Promotion வீடியோ போட்டு தரனும்னு கேட்ருகாங்க...

அவங்களுக்கு வீடியோவுக்கு இவ்வளவுனு சொன்னதும்.. அவங்க அக்கவுன்டுக்கு 35ஆயிரம் பணமும் 20ஆயிரம் மதிப்புடைய பட்டாசுகள் அவங்க முகவரிக்கும் வந்துருக்கு...

அந்த பட்டாசுகள வச்சி வீடியோ எடுத்து இன்ஸ்டாவுல இவங்க விளம்பர படுத்த.. நல்ல ரீச் ஆகிருக்கு...

அந்த பாண்டியன் பட்டாசுகள் ஒரு லிங்க் குடுத்துருகங்க.. அதுல போனா பட்டாசு விலை பட்டியல் & ஆர்டர் செய்யுற முறை இருந்துருக்கு...

நம்ம Swiggy zomotoவுல இருக்குமே அது போல...

ஆர்டர் செஞ்சிட்டு அதுல இருக்குற QR Code Scan பன்னி பணம் கட்ட சொல்லிருகாங்க...

மக்களும் கட்டிருகாங்க... அதுலயும் 100பட்டாசு உள்ள பொருள் 3ஆயிரம்னு ஒரு விஷேச Combo போட.. அது பயங்கர லீச் ஆகிருக்கு...

கிருஷ்ணகிரி & எல்லைய ஒட்டின பல பேரு அந்த ஆர்டர போட்ருகாங்க... தீபாளிக்கு முந்தின நாள் பார்சல் வரும்னு மெசேஜ் வந்துருக்கு...

அந்த இன்ஸ்டா காரங்க தனக்கே வேணும்னு ரெண்டு நாள் முன்ன 30ஆயிர் Payபன்னி ஒரு Orderரும் போட்ருகாங்க...

பார்சல் வரும்னு காத்திருந்தவங்களுக்கு ஏமாற்றமே... நேற்று அந்த லிங்க்ல போனா Link Expired னு வந்திருக்கு...

சந்தேக பட்ட அவங்க Phoneநம்பருக்கு போட்டா போகல.. சரினு சிவகாசில தெரிஞ்சவங்க மூலமா விசாரிச்சா.. "பாண்டியன் பட்டாசுகள்"னு அவங்க குடுத்த முகவரில அப்புடி ஒரு நிறுவனமே இல்லயாம்...

இதையடுத்து போலீஸ்ல புகார் குடுத்து விசாரிச்சப்ப.. இதே மாதிரி தமிழக எல்லைகள்ல இருக்குற இன்ஸ்டா & யூடியூபர்கள குறி வச்சி பணம் குடுத்து ஏமாத்தி போலியான ஒரு நிறுவன பெயர வச்சி ஏமத்தினது தெரிஞ்சுருக்கு...

PhonePay & gpayல காட்டுன Account க்கு சொந்தகாரர் இறந்து 3வருசம் ஆச்சாம்...

கிட்டத்தட்ட தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவ சேர்ந்த 30இன்ஸ்டா & யூடியூபர்கள் இவங்க வலைல விழுந்துருகாங்க...

அவங்களோட விளம்பரத்த நம்பி ஏகபட்ட பேரு பணத்த குடுத்துருகாங்க.. குத்து மதிப்பா எவ்வளவுனு யோசிங்க..?.

லட்சத்துல இல்ல....

கிட்டதட்ட 20கோடி ரூவா ஏமாத்திருகானுக.. இன்னும் ஏமாத்தபட்ட மக்களோட புகார்கள் வரதுனால இன்னும் தொகை அதிகம் ஆகும்னு சொல்லிகிறாங்க....

அதே மாதிரி சாத்தூல்ல இயங்கி வரும் "சன்ரைசர்ஸ் பட்டாசுகள்" கம்பெனியும் விளம்பரம் பண்ணியிருக்காங்க.

(பாலிமர் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)

அதுவும் பெரிய பெரிய யூடியூபர்கள் & செலிபிரட்டிகள வச்சி..

VJ Siddu, சன் டீவி மணிமேகலை, ஆட்டோகாரன் சேனல்னு ஏகபட்ட பேரு விளம்பர வீடியோ போட்டாங்க..

10ஆயிரத்துக்கு ஆர்டர் போட்டவங்களுக்கு 2 ஆயிரம் ரூவாக்கு பட்டாசு போயிருக்கு..

பணம் கட்டுன 75% பேருக்கு இன்னும் அந்த கொசுரு பட்டாசு கூட போகவே இல்லயாம்...

இப்போ அந்த கம்பெனிய பூட்டு போட்டு பூட்டிட்டு ஓடிருகாங்க...

அதுலயும் பல கோடி மோசடினு சொல்றாங்க...

வருசத்துல ஒருநாள் சந்தோசமா கொண்டாட வேண்டிய தீபாளிய பணத்த ஏமாந்து கொண்டாடுறவங்க மனநிலைய யோசிச்சி பாருங்க..?.

இதுல 2 தப்பு இருக்கு...

எவனோ ஒரு இன்ஸ்டா யூடியுபர் சொல்றான்னு பணத்த போடுற அவங்க மேலயும் தப்பு இருக்கு...

அதே நேரம் விளம்பரம் பண்ண சொல்லி காசு குடுத்தா அந்த நிறுவனம் என்ன ஏதுனு ஆராயாம விளம்பர படுத்துற இன்ஸ்டா காரனுக மேல அதிகபட்ச தப்பு இருக்கு..

தன்னோட பேச்ச கேட்டு தன்னைய நம்பி தான இத்தன பேரு பணம் போடுறாங்க..? அப்ப அவங்களுக்கு இவங்க எந்த அளவு உண்மைய தேடி குடுக்கனும்..??.

மக்களே.. இது நவீன யுகம்..எப்படி எப்படியோ பணம் பறிக்கிறாங்க.. சூதனமா இருங்க.        

No comments:

Post a Comment

தமிழர் பண்டிகை தீபாவளி- பட்டாசு வெடித்தல்- தொல்லியல் ஆதாரங்கள்

தீபாவளி குறித்த சில வரலாற்றுத் தொல்லியல் தரவுகள். https://x.com/monidipadey/status/1975562278415085865 பட்டாசுகளை பண்டைய இந்தியர்களே பயன்படு...