"ஜாதி - தீண்டாமை- பெண்ணடிமைக்கு எவை அடிப்படையோ அவை அத்தனையும் ஒழியவேண்டும்!" என்கிற தலைப்பில் 04-06-19 நாள் விடுதலையில் வந்த ஒரு செய்தியில் கி.வீரமணி கூறியது. "பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள், "பணத்தைத் திருடிக் கொண்டு, நீங்கள் காங்கிரசை விட்டுப் போய்விட்டீர்களாமே?'' என்று. 50 ஆண்டுகள் கழித்து இந்தக் கேள்வியை கேட்டார்கள். "இல்லை, இல்லை, அப்படி எல்லாம் இல்லை'' என்று பெரியார் சொல்லமாட்டார்.
"ஆமாம், நான்தான் திருடுவேன் என்று தெரியும் அல்லவா! நீ ஏண்டா, பெட்டியைத் திறந்து வைத்துவிட்டுச் சென்றாய். நீ ஏன் அவ்வளவு அலட்சியமாக இருந்தாய்; நீ அலட்சியமாக இருந்தாய், நான் எடுத்துக்கொண்டு போனேன்; அலட்சியமாக இருந்தால், யார் வேண்டு மானாலும் எடுத்துக்கொண்டுதான் போவார்கள்'' என்று சொன்னவுடன் தான் அவர்கள் அடங்கினார்கள்." என்று சொன்னதாக கி.வீரமணி கூறினார்.
No comments:
Post a Comment