சேலம் ஏற்காடு மலைப் பாதை எட்டாவது கொண்டை ஊசி வளைவுக்கு மீண்டும் தகடூர் அதியமான் பெயர் !
தமிழ் புலவர் ஔவையாருக்கு கிடைத்தலுக்கு அரிய நெல்லிக்கனி தந்த தமிழ் பற்றாளர் அதியமான்
சேலம் ஏற்காடு மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவுக்கும் கம்பர், திருவள்ளுவர், கபிலர், தகடூர் அதியமான் உள்ளிட்ட தமிழர் சான்றோர்கள் பெயர் சூட்டப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தகடூர் அதியமான் பெயரை அழித்து ஈ.வெ. இராமசாமி (பெரியார்) பெயரை சில சமூக விரோதிகள் எழுதி வைத்து விட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தி தகடூர் அதியமான் பெயரை மீண்டும் எழுதினர்.
பிறகு அங்கு வந்த திராவிட இயக்கத்தினர் அதியமான் பெயரை அழித்து விட்டு மீண்டும் இராமசாமியின் பட்டப் பெயரை எழுதினர்.
இதையடுத்து இது குறித்து மாவட்டக் காவல் தலைமையிடம் புகார் அளித்தனர் நாம் தமிழர் கட்சியினர்.
இன்று மீண்டும் அதியமான் பெயரை நெடுஞ்சாலைத் துறையினரே எழுதினர்.
தமிழர் அடையாளங்களை ஈ வெ இராமசாமி, கருணாநிதி பெயர்களைக் கொண்டு அழிக்கும் திராவிட இயக்கத்தினரின் அடாவடிச் செயல்கள் பொது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment