தேவதானம்: ஹிந்து கோவில்களுக்கு தானமாய் தந்த நிலங்களை குறிப்பவை. சிவன் கோவிலுக்கு சூலமும், திருமால் பள்ளிகளுக்கு சக்கரமும் அதில் இருக்கும்.
பள்ளிச்சந்தம்: ஜைன மற்றும் புத்த விஹாரங்களுக்கு தானமாய் தந்த நிலங்களின்/ கிராமங்களின் எல்லை. இதில் முக்குடை இருக்கும்.
ப்ரம்மதேயம்: அந்தணர்களுக்கு மானியமாய் விடப்பட்ட நிலங்கள்/கிராமங்களை குறிக்கும்.
ஆனால், திருப்பரங்குன்ற தூணின் உயரம் அதிகமானது, மலை உச்சியில் எந்த எல்லையை குறிக்க இதை நிறுவியிருப்பார்கள்..? ஹனுமன் திருவுருவம் இருப்பதாய் குறிப்பும் சொல்கிறது. அதோடு விளக்கு ஏற்றுவதற்கான அடுக்கு பீடமும் கீழே இருக்கிறது. விளக்கே ஏற்றாமல் 100 வருட மரபு இது என்பதெல்லாம்.. திராவிடம் எவ்வளவு உண்மையோ அவ்வளவு அது உண்மை..
உண்மையில் நாயக்கர் காலத்து தூண், மேலே மூன்று நான்கு லிட்டர் எண்ணெய்யை ஊற்றி எரிக்க ஒரு குழியும் இருக்கிறது. இந்த மலையே சிவனின் சொரூபம். கல் என்பவனுக்கு கல்லாய்த்தான் தெரியும். விளக்கு என்பவனுக்கு மட்டுமே விளக்கு தெரியும்.
மதவெறியை ஓட்டுக்காக அரசுடமையாக்கியது அயோக்கியத்தனமானது..
Thanks: Link to Prakash Ramasamy

Neechalkaran Raja- நண்பர் Muthukrishnan Alagarsamy கூறியிருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் Great Trigonometrical Survey யில் பொதுவாகக் கோபுரங்கள் தான் கட்டப்பட்டதாகப் படித்துள்ளேன். மலை உச்சியில் வைக்கப்பட்ட வேறு கல்தூண்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் இதே தூண் வடிவில் பல்வேறு வழிப்பாட்டுத் தலங்களில் விளக்கேற்ற வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக கீழக்குயில்குடி மலையுச்சியிலும் இதே போன்ற ஒரு கல்தூணும் உள்ளது (படம் இணைப்பு). அதுவும் சர்வே கல் தானா? திருப்பரங்குன்ற மலையில் சமணர்கள் எழுப்பிய தீபத்தூணாகக் கூட இருக்கலாம். ஆனால் அளவைக் கல் என்பதற்குக் கூடுதல் ஆதாரம் வேண்டும்.
ஒரு பிரிட்டிஷ் தயாரிப்பான அளவிடும் கல்லின் நடுவில் சதுர - எண்கோண வடிவங்கள் ஏன் இருக்க வேண்டும், அது உண்மையில் ஒரு திராவிட கோவிலின் கட்டிட பாணியாகும்?
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சமணர் கோயிலில் உள்ளது..
மேல்மலையனூர் கோயில் எதிரில் உள்ள சிறு குன்றின் உச்சியிலும் விளக்குத் தூண் உண்டு. அதை மூங்கிலால் ஆனக் கொடிக் கம்பத்திற்கு கொழு கொம்பாய் பாவிப்பர் . தீபம் ஏற்ற வசதியாக உச்சியில் வாயகன்ற சதுரபீடம் கல்லால் செய்து பொருத்தப் பெற்றுள்ளது..பூசாரியரிடம் கேளுங்கள்.தெளிவுறுத்துவர்.









No comments:
Post a Comment