Saturday, December 6, 2025

திருப்பரங்குன்றம் - தீபத் தூண் & மோட்ச தீபத் தூண்

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளில் கிருத்திகை என தமிழர் மெய்யியல் வழிபாட்டில் பூஜையறையில் அகல் ஏற்றி செய்வர்.


கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்றே அந்த நட்சத்திரம் வருவதால் திருக்கார்த்திகை என வீடு முழுவதும் & கோவில் குன்றுகளில் ஏற்றுவது பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது. 

திருவண்ணாமலை தீபம் பெருமை பெற்றது. முதல் நாள் பரணி தீபம், அடுத்த நாள் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பெரும்பாலும் பௌர்ணமி திதி மறுநாள் அதிக நேரம் இருக்க வீடுகளில் 3ம் நாள் தீபம் ஏற்றுவர்‌. வைணவர்கள் பஞ்சாங்க முறை மாறுபாடு உள்ளதால் 4ம் நாளே தீபம் ஏற்றுவர்.

நெருங்கிய சொந்தம் யாராவது தவறினால் அடுத்த மாத கார்த்திகை நட்சத்திர நாளில் பண்டிகை கொண்டாடி விளக்கீடு செய்வர்.

தீபத்தூணிலும் மேலே எண்ணெய் கொப்பரை வைத்து ஏற்றும்படி குழி அமைப்பு மற்றும் கோவில் தூண் போன்ற சிற்ப வேலைப்பாடுகளும் உள்ளது


எல்லைக்கல், சர்வே கல் என்று புதிது புதிதாக கதை சொல்பவர்களுக்கு, இந்த மாதிரி வேலைப்பாடுகளோடு மலை உச்சியில் எந்த எல்லைக்கல் இருக்கும் ? நாயக்கர் காலத் தூணின் வேலைப்பாடுகளோடு சுமார் மூன்று லிட்டர் எண்ணெய் ஊற்றக்கூடிய குழியோடு இருப்பது இந்தத் தீபத்தூண்.



திருப்பரங்குன்றம் மலையே சிவனுடைய சொரூபமாகக் கருதப்படுவதால், அதன் உச்சியில் இந்தத் தீபத்தூண் இருக்கிறது என்ற சாசனம் கூட உண்டு. தூணின் கீழே இரண்டு அடுக்குப் பீடமும் உண்டு. இது போன்று குன்று தோறும் விளக்குத்தூண்கள் வைப்பதும். நல்ல நாட்களில் அங்கே விளக்கேற்றுவதும் தமிழர் வழக்கம். அதைப் பற்றியெல்லாம் தெரியாதவர்களுக்கு இது வெறும் கல்லாகத்தான் தெரியும். #Tirupparankundram

முதலில் தீபத் தூணில் தீபம் ஏற்றக்கூடாது அது முஸ்ஸிம்கள் மனதை புண்படுத்தும் என்றானுக. தர்கா நிர்வாகமே தீபத் தூணில் தீபம் ஏற்ற ஆட்சேபனை இல்லை என எழுதிக் கொடுத்த பிறகு அது தீபத் தூண் இல்லை சர்வே கல் என்கிறானுக - சில்லறைக்கு என whatsapp மூலம் பரப்பும் அறிவிலிகள்

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் - தீபத் தூண் & மோட்ச தீபத் தூண்

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளில் கிருத்திகை என தமிழர் மெய்யியல் வழிபாட்டில் பூஜையறையில் அகல் ஏற்றி செய்வர். கார்த்திகை மாதம் பௌர்...