கோயில் நிலம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
03:14 AM Jun 25, 2025
சென்னை: கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் தேவநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் உள்ள செயி. ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியை அகற்றக் கோரி பாஜவின் ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளியை அப்புறப்படுத்தி, கோயில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என 2024ல் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக வருவாய் துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, அறநிலைய துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் தர், கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார், அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு, 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை ஜூலை 10ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தது.
பழனி மலை முருகன் கோவில் தமிழகத்தில் அதிக மக்களை ஈர்ப்பதாகவும், அதிக வருமானம் ஈட்டும் கோவிலாக உள்ளது. மலையிலேயே போகர் சமாதியும் உள்ளது. ஆனால் சுகிசிவம் என்ற தமிழ் பேச்சாளர் சிறிதும் கூச்சம் இல்லாமலே அந்த மலை பழனி மூலவர் சிலை முருகன் இல்லை போகர் சிலை என வாயை வாடகை விட்டுப் பேசி உள்ளார்.
போகர் சித்தர் அதிலும் பழனி வாழ் போகர் காலம் 18ம் நூற்றாண்டு என்கிறது தமிழ் சித்தர் பற்றிய பி.ஹெச்.டி கட்டுரை
No comments:
Post a Comment