Tuesday, October 21, 2025

தீபாவளி- 6 லட்சம் கோடிகளுக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்று உள்ளது. கலாச்சாரமே பொருளாதாரத்தின் அச்சாணி

  CAIT என்ற அகில இந்திய வியாபாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ள தகவல் தான் மிகவும் முக்கியமானது. 

  






புதிய உச்சத்தை எட்டியுள்ளது இந்த வருட தீபாவளி வர்த்தகம். தீபாவளியை முன்னிட்டு சுமார் 6 லட்சம் கோடிகளுக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்ற புள்ளி விவரத்தை CAIT வெளியிடப்பட்டுள்ளது.

 நமது பொருளாதாரத்தின் அச்சாணி நமது கலாச்சாரமே என்பதை மீண்டும் உணர்த்தி உள்ளது இந்த தீபாவளி அதுவும் 81% சுதேசி தீபாவளியாக...

வடக்கே ராமனது அயோத்தி வருகை என்றும், கிழக்கே வங்காளத்தில் காளி பூஜை என்றும், மேற்கே குஜராத் மஹாராஷட்டிரத்தில் லஷ்மி பூஜையாகவும் தெற்கே நரகாசுரன் வதை என்வும் பல்வேறாக கொண்டாடபடும் இந்த தீப ஒளி திருநாள் நாடு முழுவதும் பட்டாசுகளாலும் இனிப்புகளாலும் புத்தாடைகளாலும் அலங்கார ஒளி விளக்குகளாலும் ஒளியூட்டபட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடபடுகிறது...

தீபாவளி மட்டுமல்ல இது போன்ற ஒரு பெரிய பண்டிகை எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு பெயரில் உதாரணமாக பொங்கல் லோரி ஹோலி தாய்மொழி புத்தாண்டுகள் அது இது என ஏதோ ஒரு விதமாக நாடு முழுவதும் கொண்டாடபட்டே வருகிறது...

இவை தான் இந்த நாட்டின் பொருளாதார சுழற்சி மற்றும் வளர்ச்சியின் மிகப்பெரிய காரணமாக இருக்கின்றன என்பது நமக்கு தெரியுமா?? இவற்றை அழிக்க தான் பல்வேறு NGOக்கள் பல நூறு நடிகர்களை வாடகை வாய்களை அரசியல் வியாதிகளை பல்லாயிரம் கோடிகளை கொட்டி விலைக்கு வாங்கி முயல்கின்றன என்பதாவது தெரியுமா? இவை அழிந்தால் நம் பொருளாதாரம் அழியும் அதோடு நாடு நாசமாகும் அது அவர்கள் இலக்கு...

ஆனால் இந்த தீபாவளி நமது பிரதமரின் அறைகூவல் ஏற்ற மக்கள் கிட்டதட்ட 81% சுதேசி பொருட்களை அதாவது மேக் இன் இந்தியா அல்லது மேட் இன் இந்தியா பொருட்களை மட்டுமே வாங்கி குவித்து உள்ளனர் அதுவும் எவ்வளவுக்கு தெரியுமா?? கிட்டதட்ட ₹5 லட்சம் கோடி அளவுக்கு...

ஆம் மொத்த தீபாவளி வியாபாரம் இந்த ஆண்டு GST 2.0 மற்றும் வருமான வரி 12 லட்சம் வரை விலக்கு என்ற மத்திய அரசின் நடவடிக்கை காரணங்களால் சுமார் 6லட்சம் கோடி ரூபாய்களை கடந்து உள்ளது...

நமது நாட்டின் மொத்த GDPல் 63% அதாவது கிட்டதட்ட 2/3 பங்கு நமது உள்நாட்டு வர்த்தகத்தால் மட்டுமே நடைபெறுகிறது இதனால் தான் உலகளாவிய பொருளாதார தேக்கங்கள் கூட நம்மை சிறிதளவே பாதிக்கின்றன...

இவற்றால் இந்த தீபாவளி மாதம் நமது பொருளாதரம் எதிர்பார்த்தை விட 20% அதிகரித்து 6.8% என்ற GDPயில் உள்ளது...

கலாச்சாரம் காப்போம்... பண்டிகைகளை கொண்டாடுவோம்... தேசமாக முன்னேறுவோம்... #ஜெய்ஹிந்த்

ஜிஎஸ்டி சீர்திருத்தம் இதற்கான காரணியாக இருந்துள்ளது என்றுமே தெரிவித்துள்ளது. சுதேசி வர்த்தகம் சுமார் 25 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்பதும் அடுத்த முக்கிய தகவல்.

தீபாவளியைக் கொண்டாடாதே, காசை கரியாக்கும் பண்டிகை, சுற்றுச் சூழல் மாசு போன்ற ஒப்பாரிகள் அனைத்தும் ஒற்றைப் புள்ளியில் தான் தொடங்குகின்றன. தீபாவளியை முடக்கினால், அதனைக் கொண்டாடுவதை பூமியை சீர்கேடாக்கும் ஒரு பாவச் செயலாக உள்வாங்க வைத்தால், புராணக் கட்டுக்கதை தான் தீபாவளி என்று நம்ப வைத்தால், இந்த தேசத்தின் பொருளாதரத்தின் முக்கிய முதுகெலும்பினை முறித்து விடலாம். பிறகு அவர்கள் விரும்பும் அனைத்தும் எளிதாக நடந்தேறி விடும். "அவர்கள்"? அது தான் சார், "அவர்களே" தான்.


ரூ.37 ஆயிரம் கோடி - இந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் விற்பனையான உடைகள் / பட்டாசுகளின் விற்பனைத் தொகை.


இதில், தீபாவளிக்கு முந்தைய தினம் - ஞாயிறு - மட்டும் தமிழகத்தில் பல கிளைகளைக் கொண்ட மூன்று ஜவுளிக் கடைகளில் தலா ரூ.5 + கோடிகள் அளவுக்கு விற்பனையாகி உள்ளன. இதில் ஒரு நிறுவனத்தில் ரூ.10 கோடிக்கு சேல்ஸ் நடந்திருக்கிறது.
நடைப்பாதை கடைகளின் விற்பனை இதில் சேராது. அது தனி.
கவனிக்க இந்த ரூ.37 ஆயிரம் கோடி என்பது கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ள தொகை மட்டுமே.
இன்னும் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பலகாரங்கள் -
டாஸ்மாக் விற்பனை -
காய்கறிகள் / பழங்கள் / இறைச்சிகளின் சேல்ஸ் -
திரைப்பட வசூல் / திரையரங்க பார்க்கிங் - கேண்டீன் விற்பனை -
ரயில் / ஆம்னி பஸ் / அரசுப் போக்குவரத்துக் கழக வருமானம் / சொந்தக் கார் - டூ வீலர் - cab ஆகியவற்றில் சொந்த ஊர்களுக்கு பயணபட்டது / பெட்ரோல் டீசல் நிரப்பியது / டோல்கேட் கட்டணங்கள்...
சேர்க்கப்படவில்லை.
போலவே உணவகங்கள், ஆன்லைன் வழியாக உணவு ஆர்டர், ஹோம் அப்ளையன்ஸ் - நகைக்கடைகள் விற்பனை...  
உள்ளிட்டவற்றின் தீபாவளி டர்ன் ஓவர் தெரியவில்லை.
அடுத்து -
லிக்விட் கேஷ் ஆக எவ்வளவு, யுபிஐ / டெபிட் கார்ட் வழியாக எவ்வளவு செலுத்தப்பட்டது...
கிரெடிட் கார்டில் எவ்வளவு ஸ்வைப் ஆனது...
குறுகியகால மைக்ரோ ஃபைனான்ஸில் - ஆன்லைன் app / தனிநபரிடம் வட்டியில்லா கடன் / வட்டிக்கு கடன்... 
எத்தனை பேர் எவ்வளவுக்கு வாங்கினார்கள் என்ற விவரமும் கிடைக்கவில்லை.
இவற்றையெல்லாம் விட அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் வழியாக பர்சேஸ் செய்யப்பட்ட தொகை(கள்) விவரமும் கண்ணில் படவில்லை.
இவற்றில் -
தமிழகத்தில் வாழும் மற்ற மாநிலத்தவர்களின் பங்கையும் அறுதியிட முடியவில்லை.
முக்கியமான விஷயம் -
தீபாவளியை ஒட்டி பங்கு வணிகத்தில் எவ்வளவு முதலீடு தமிழ்நாட்டில் இருந்து செய்யப்பட்டது என்ற விவரத்தையும் எடுக்க முடியவில்லை.
இங்கே பட்டியலிடப்பட்டவை தமிழ்நாட்டின் கணக்கு மட்டுமே.
இதிலும் மாவட்ட வாரியாக புள்ளிவிபரம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
இதில் தேசிய முதலாளிகள் / பன்னாட்டு முதலாளிகள் / பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் தரகர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சதவிகித லாபம் கிடைத்திருக்கும்? 
நோ ஐடியா.
ஒரு பண்டிகை -
அதனைச்சுற்றி நடக்கும் உற்பத்தி / விற்பனை / உறவுகளை துல்லியமாக கணக்கிட்டால், ஆராய்ந்தால் ஓரளவு இன்றைய தமிழ்நாட்டின் சமுதாயப் பொருளாதார படிவத்தை வரையறுக்க இயலும். 
கவனத்தில் கொள்ள வேண்டியது -
இதுவரை சொல்லப்பட்டவை / செலவு செய்யப்பட்ட தொகை - அனைத்தும் நுகர்வு கலாசாரத்துக்குள் அடங்கும் என்பதுதான்.
இதில் தீபாவளிக்கு செலவு செய்ய முடியாத நிலையில் இருந்த தமிழ்நாட்டு மக்களின் சதவிகிதம் எவ்வளவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த 2025ம் ஆண்டு கிட்டத்தட்ட ரூபாய் ஒரு லட்சம் கோடி தீபாவளி என்றப் புள்ளியைச் சுற்றி அதிகப்பட்சம் 10 நாட்களில் நம் தமிழ்நாட்டில் டர்ன் ஓவர் ஆகியிருக்கிறது.
இதை எப்படி புரிந்து கொள்வது? 
தமிழகத்துக்கான இன்றைய அரசியல் திசைவழியை எப்படி வரையறுப்பது?

No comments:

Post a Comment

தீபாவளி- 6 லட்சம் கோடிகளுக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்று உள்ளது. கலாச்சாரமே பொருளாதாரத்தின் அச்சாணி

   CAIT என்ற அகில இந்திய வியாபாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ள தகவல் தான் மிகவும் முக்கியமானது.     புதிய உச்சத்தை எட்டியுள்ளது இந்த வருட ...