தீபாவளி குறித்த சில வரலாற்றுத் தொல்லியல் தரவுகள்.

நரகாசுரனை திருமால் வதம் செய்த நாள்தான் தீபாவளி என்பது ஒரு நம்பிக்கை. இந்நிகழ்வு பொஆ.8 ஆம் நூற்றாண்டு முதலே தொல்லியல் தரவுகளாக உள்ளது.
பொஆ.8 ஆம் நூற்றாண்டு பல்லவர் செப்பேடும் பொஆ. 10 ஆம் நூற்றாண்டு சோழர் செப்பேடான அன்பில் செப்பேடும் நரகாசுரனை அழித்த திருமாலின் பெருமையைப் பதிவு செய்கிறது.
பொஆ. 7 ஆம் நூற்றாண்டில் ஹர்சவர்த்தனர் எழுதிய நாகானந்தம் என்னும் நாடக நூலில் தீபஉற்சவம் என்று ஒரு நாள் கொண்டாடப்பட்டதாகவும் தீபங்களின் அணிவரிசை அழகுற அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்நாளில் புதுமணத் தம்பதியினருக்கு பரிசு வழங்கப்பட்டது. ( தலைத்தீபாவளி.? )
பொஆ. 939 -967 வரை ஆட்சி செய்த இராஷ்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் செப்பேடு ஒன்று ,
பார்வதி தேவி கோயிலில் விளக்கேற்றும் உற்சவத்தை தீபாவளி என்று குறிப்பிட்டு தானம் வழங்கியுள்ள செய்தியைப் பதிவுசெய்கிறது.
பொஆ. 10 நூற்றாண்டு..
பிரபலமான சௌந்தட்டி கல்வெட்டு ( Saundatti inscription. ) மகாவீரர் முக்தியடைந்த நாளை தீபம் ஏற்றி தீபாவளியாக கொண்டாட
சமணர்களுக்கு எண்ணெய் தானம் வழங்கப்பட்டது.
கௌதம புத்தர் கபிலவஸ்துக்கு திரும்பிய நாளன்று மக்கள் தீபமேற்றி வணங்கி வழிபட்டதாக சிதவிரகாதை என்னும் பௌத்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தீபங்களைத் தானமாக வழங்கப்பட்ட நிகழ்வு தீபதானஉற்சவம் என்று குறிப்பிடப்படுகிறது.
பொஆ.11 ஆம் நூற்றாண்டு.
பாரசீகப்பயணி அல்ஃபருனி அவர்கள் எழுதிய பயணக்கட்டுரை ஒன்றில் கோவில்கள், வீடுகளில் விளக்கேற்றி புத்தாடை அணிந்த மக்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்ற செய்தியைக் கூறுகிறார். இந்த நாள் எது என்பதையும் அல்ஃபருனி குறிப்பிடுகிறார்.
New moon in the month of karthika..
அதாவது கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசை நாளை தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில்..
ஸ்ரீரங்கத்தில் உள்ள வேணாட்டு அரசன் ராமவர்மன் குலசேகரனது கல்வெட்டு ஒன்றில் ஸ்ரீரங்கத்தில் பேரிருளை நீக்க தீபோத்சவம் நிகழ நிவந்தம் தந்த செய்தி பதிவாகியுள்ளது. இந்நாள் தீபாவளி நாள் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். காலம் 13 ஆம் நூற்றாண்டு.
காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் கல்வெட்டு. விஜயநகர சதாசிவராயர் காலம். பொஆ.1558.
கோவிலில் நூறுநாட்கள் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி மிக விரிவானத் தகவல்களை கல்வெட்டு பதிவுசெய்கிறது.
. மார்கழித்திருநாள், தைத்திருநாள்,
ஆழ்வார் திருநாள், திருக்கார்த்திகை, தீவிளித் திருநாள் என்று விழாக்கள் கொண்டாடப்பட்டன. தீவிளி நாள் என்பது இன்றைய தீபாவளியே என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு.
இந்த நாளுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்களின் பட்டியல்..
திருமுன் குத்து விளக்கேற்றுவதற்கு நெய், அமுது செய்ய அரிசி பயிறு நெய் ,
கறியமது பொறிக்க நெய், மிளகு, சீரகம், வெந்தயம், புளி ,தயிர்.
பலகாரங்களின் பட்டியல்...
அப்பப்பம், அதிரசம், கொதி, வடை, சுகியான், தோசை, பணியாரம்.-இவ்வாறான செய்தியை கல்வெட்டு பதிவு செய்கிறது.
திருப்பதியில் உள்ள கல்வெட்டு ஒன்று தீபாவளி நாளில் அதிரசம் செய்யப்பட்ட விபரத்தைக் கூறுகிறது. காலம் பொஆ.1542
பொஆ.1130 ஆம் ஆண்டு என்று சொல்லப்படும் இலங்கை போசராச பண்டிதர் எழுதிய சரசோதிமாலை என்னும் ஜோதிட நூலில் தீபாவளி பற்றிய நேரடித் தரவுகள் உண்டு.
" உரிய நற்பிதிர்கள் இன்பமுரு தீபாவலியாம் எண்ணெய் மருவி வெந்நீரின் மூழ்கி மகிழ்ந்து நல் தருமம் செய்யே "
இந்த ஜோதிட நூலின் காலம் குறித்து அறிஞர்களிடையே கருத்துபேதம் உண்டு.
திருவாரூர் மாவட்டம் சித்தாய்மூர் கோவில் இறைவனுக்கு ஆண்டுதோரும் தீபாவளி நாளில் சிறப்பு வழிபாடு செய்ய தானம் வழங்கப்பட்ட செய்தி ஒரு செப்பேட்டில் காணப்படுகிறது.
செப்பேட்டின் காலம். - 7 . 12. 1753
================
அன்புடன்..
மா.மாரிராஜன்.
Refrence ..
1. Studies in the religious life of ancient medival india. P. 128 - 129
2. Religious institutions and cults in the decon
A.D. 600- 1000 P.38
3. Epigraphia Indica and Record of the Archæological Survey of India, Volume V.
Here Marathi Poet Ekanatha describes rocket & variety of fireworks called Chandrajyoti. Below are the list of 7 types of Fireworks. I've to point out Roopa IPS One Haatananka is a type of Firework that can be held in the hand & emitting a glow of firey fire sparks.
Below is the chronology since 6th century as to how crackers were being used in Bhaarata. Pls don't say these are all Chinese history. In that case you don't know about about Bhaarata at all.
In KautukaChintamani, below materials were used in the manufacture of fireworks as found in the Sanskrit verses describing the formulas:
Another Maharashtra Author Raamadasa refers to guns and fireworks in various writings. Following are the references in Raamadasa Samagra Grantha. This can be found in Page 345, 588, 621, 623 and more.
In Tanjore Manuscript Library there is one Sanskrit work called AakashaBairava Kalpa. There, Paatala 62 deals with several entertainment(vinodas) for the king. The following passage found describing a display of Fireworks.
In the glossary of non Sanskrit terms called RaajaVyavahaaraKosha composed by Raghunatha Pandita by order of Maratha King Shivaji, he explains the term Baana Agninalika. A tube filled with gunpowder. In AkashaBhairava Kalpa description of #Deepavali Fest is given.
It is in this connection the King is advised to witness a display of fireworks at nightfall along with tributary princess etc. (Pic 1) Tavernier(A.D.1676) in his TRAVELS IN INDIA refers to the use of fireworks in India and Java in the following extracts:
Mahadji Scindia(1727-1794) informed Peshwa Savai Madhavrao as follows: The Diwali Festival is celebrated for 4 days in Kota(Rajasthan) when lacs of lamps are lighted. Raja of Kota gives display of fireworks outside the premises of his capital. It is called Daaruchi Lanka.
The Peshwa ordered to Mahadji to give a similar display of fireworks for his entertainment. Mahadji made all preparations within 15 days and the display was carried out on a dark night before the Peshwa and his Sardars. It took place at the foot of Parvati Hills(near Poona)
We even recorded methods of manufacturing diff., fireworks for Diwali. Small booklet by Lakshmana Pamji Khopkar mentioned few materials. Many of such ingredients are mentioned in KautukaChintamani Gajapati PrataapaRudradeva.
Now let's see how is it in South India. Abdur Razzaq, the ambassador from the court of Sultan Shah, who stayed in Vijayanagara from April end A.D 1443 till the 5th of Dec 1443, during the term of Devaraya-2 mentions the use of fireworks in Mahanavami Festival.
Verthema in his work TRAVELS(Argonaut Press, London 1928) writes about Malacca and Sumatra in in Captr-12. He was at Pidar(Pedir) in Sumatra. About the people of this place he observes on page 86 as below
Verthema also describes the city of Vijayanagar, it's elephants and elephant-fights. In this connection he observes in page 52 as below
The manufacture of fireworks at Vijayanagar and their display observed by Abdur Razzaq in A.D.1443 had reached the perfection by A.D.1500 as vouched by the above remarks by Verthema.
Marathi Poet Ekanatha, he in poem RUKMINI-SWAYAMVARA which was completed in 1570A.D. gives display of fireworks in marriage procession of Rukmini and Krishna. Chapter 15 of the same book says as below. 👇 Kindly look into the words which are in bold.
No comments:
Post a Comment