Monday, October 20, 2025

தமிழர்கள் காட்டுமிராண்டி என்ற வெள்ளைக்கார கிறிஸ்துவ பிரின்சிபலை சுட்டுக் கொன்ற இரு இளைய பாண்டியர்கள்

 'காட்டுமிராண்டித் தமிழர்கள்' என்று ஏளனம் செய்த வெள்ளைக்கார பிரின்சிபலை சுட்டுக் கொன்ற இரு இளைய பாண்டியர்கள் - வருடம் 1919

https://en.wikipedia.org/wiki/Murder_of_Clement_De_La_Haye

கொலை செய்யப்பட்டவர், கடும் வெள்ளை இனவாதி, மதறாஸ் (சென்னை) அண்ணாசாலையில் இருந்த ஜமீந்தார் வீட்டு பிள்ளைகள் படிக்கும் உயர்தர பள்ளியான Newington House இன் பின்ஸிபல் இன்சார்ஜ் திரு டெலா ஹயெ (De La Haye). 

பொதுவாகவே வெள்ளை இனத்தவர்கள் தான் உயர்ந்தவர்கள், இந்தியர்கள் தாழ்ந்தவர்கள் என்ற மனோபாவம் கொண்ட இனவெறியர் டெலாஹயே. இவர் அடிக்கடி தமிழர்களை இழிவாகப் பேசியதால் அங்கு படித்த இளைஞர்கள் - அனைவரும் இளைய ஜமீந்தார்கள் (16லிருந்து 19 வயது இளைஞர்கள்) கொந்தளித்தனர். 

ஆனால் இதில் திட்டம் தீட்டி துப்பாக்கியுடன் சென்றது இரு இளைஞர்கள் - கடம்பூர், சிங்கம்பட்டி இளைய ஜமீந்தார்கள். அதில் சிங்கம்பட்டி இளவரசர் பின்னாளில் அப்ரூவர் ஆனார். #கடம்பூர் இளவரசரான சீனி வெள்ளாள சுப்ரமணிய பாண்டியத்தலைவனே கடும் கோபத்தில் #சிங்கம்பட்டி இளவரசரையும் அழைத்துக்கொண்டு போய் அந்த பிரின்சிபலை சுட்டுக்கொன்றதாக குற்றப்பத்திரிகை சொல்கிறது.

ரிவால்வரால் சுட்டுவிட்டு ஓடிய சிங்கம்பட்டி இளவரசர் திரு டி.என்.சிவசுப்ரமணிய சங்கர தீர்த்தபதி மற்றும் கடம்பூர் இளவரசர் திரு சிவ சுப்ரமணிய பாண்டிய தலைவன் ஆகிய இருவரையும் கண்ணால் பார்த்த சாட்சி இருந்தும் குற்றம் சரிவர நீருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆங்கில அரசு தன் உச்சகட்ட அதிகாரத்துடன் (முதலாம் உலகப்போர் துவங்கிய நிலையில்) ஆங்கிலேய துரை ஒருவரை இந்தியர்கள், அதுவும் சிறுவர்கள் சுட்டுக்கொன்றது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ட்ரையல் இதனால் சென்னையிலிருந்து பாம்பேக்கு மாற்றப்பட்டு நடந்தது.

நன்றி: Bigbang Bogan & விக்கிபீடியா

குறிப்பு: இதில் சாப்டூர் ஜமீன் இளவரசர் இவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். அவர் மட்டும் காட்டிக்கொடுத்திருந்தால் தூக்கு கிடைத்திருக்கும்.

No comments:

Post a Comment

மெக்காலேவின் ஆங்கில கல்வி கொள்கை - கிறிஸ்தவ மதமாற்றம்

மெக்காலேவின் ஆங்கில கல்வி கொள்கை மற்றும் கிறிஸ்தவ மதமாற்றம் தொடர்பான கடிதம் மெக்காலே தந்தைக்கு எழுதிய கடிதத்தில் - நாம் ஆரம்பித்த ஆங்கிலக் க...