பைபிள் கதை ஏசு தாயார் மேரியை தெய்வீக மீட்பர் என வணங்க - ஆர்சி போப்பரசர் தடை. இங்கே மேரி திருமணம் - சீர்வரிசைவாடிகன் கத்தோலிக்க சர்ச் சமீபத்தில் வெளியிட்ட Mater Populi Fidelis என்ற ஆவணத்தில், மரியாளை “Co-Redemptrix” (இணை மீட்பவள்) அல்லது “Co-Mediatrix” (இணை நடுவாளர்) என்று அழைப்பது இனி பொருத்தமல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளது. மரியாளின் தனித்துவமான பங்கு மறுக்கப் படவில்லை; ஆனால் இந்த பட்டங்கள் சுவிசேஷக் கதாநாயகர் இயேசுவின் ஒரே மீட்பர் மற்றும் நடுவாளர் என்ற நம்பிக்கையைக் குழப்பக்கூடும் என்பதால் தவிர்க்கப் படுகிறது.
ஏசுவின் சீடர்களில் முக்கியமானவர் ஆன பேதுரு (பீட்டர்) ஏசுவோடு எங்கே எப்படி சேர்ந்தார் என்பதிலேயே முரண்பாடு- அவர் கலிலேயா கடற்கரையில் என 3 சுவிசேஷ தொன்மங்களும் 4ம் சுவி கதை யூதேயா வனாந்திரத்தில் எனும். இது போல 12 சீடர்கள் யார் என்பதிலேயே குழப்பம்.
தன்னை யூதர்களின் ராஜா (கிறிஸ்து - யூத மேசியா- உலக அழிவிற்கு முன்பாக கடைசி சந்ததியில் தாவீது பரம்பரையில் பிறக்கும் மனிதன்) என்றும் உலகம் தன் வாழ்நாளில் அழியும் எனத் திறிந்து, ரோமன் மரணதண்டனையில் இறந்தவரை தெய்வீகர் ஆக்கி புனைந்தவையே புதிய ஏற்பாடு கதைகள்.
ஏசு என ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கு நடுநிலையாளர் ஏற்கும்படியான தரவுகள் ஏதும் கிடையாது
No comments:
Post a Comment