Saturday, January 29, 2022

ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்துள்ளது = எந்த ஆதாரமும் இன்றி செவிவழித் தகவல் மூலமே வழக்கு -சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை வழக்கு: ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டம் ரத்து வி. எம். மன்சூர் கைரி

ஆன்லைன் வகுப்பே இல்லாதபோது தவறு நடக்க வாய்ப்பு இல்லை; பாலியல் புகாருக்கு ஆளான தனியார் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனை விடுவிக்க உத்தரவு: குண்டர் சட்டத்தில் கைது செய்ததையும் ரத்து செய்தது நீதிமன்றம்

News
சென்னை உயர் நீதிமன்றம்
மாணவிகளிடம் பாலியல்ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதற்காகக் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்திலிருந்து விடுவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
https://www.hindutamil.in/news/tamilnadu/760644-the-court-also-quashed-the-arrest-under-the-goondas-act.html
https://www.vikatan.com/government-and-politics/judiciary/teacher-rajagobalan-free-from-gundaas-act 
கடந்த ஆண்டு, மே மாதம், சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றிய வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல்ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்தது. மாணவிகளிடம் அநாகரிகமாகப் பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இதையடுத்து அசோக் நகர் மகளிர் காவல்துறையினர் ராஜகோபலன்மீது போக்சோ சட்டப் பிரிவு, 354(ஏ)- பாலியல் தொல்லை, தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர் ராஜகோபாலன்
ஆசிரியர் ராஜகோபாலன்

இந்த நிலையில், இந்த உத்தரவை ரத்துசெய்து, தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என அவரின் மனைவி சுதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ``2015 -ல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரின் மீது தனது கணவர்மீது குற்றம் சாட்டியிருப்பதாகவும், 2015-ல் ஆன்லைன் வகுப்பு எதுவும் நடைபெறவில்லை. மேலும், தாமதமாக அளிக்கப்பட்ட இந்தப் புகாரின் உண்மைத்தன்மையை ஆராயாமல், எந்த ஆதாரமும் இன்றி செவிவழித் தகவல் மூலமே வழக்கு பதியப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அமர்வு, ``ஆன்லைன் வகுப்புகள் இல்லாதபோது நடந்த சம்பவத்துக்காக, ராஜகோபலன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அதற்கு பின்பும் குண்டர் சட்டத்தில் அடைக்கச் சரியான காரணம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாலும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...