Tuesday, January 4, 2022

*குந்தவை மதம் மாறினாரா..?* Marirajan Rajan

 *குந்தவை மதம் மாறினாரா..?*

இவ்விடயம் சமீபமாக இணையத்தில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.. நம் நண்பர்கள் ஒரு சிலர்

இது குறித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்..
அப்படி என்னதான் இருக்கிறது என நானும் ஒரு ரவுண்டு வர, சோழச்சுடரொளி என்னும் நூலை எழுதிய
ஆசிரியர் குந்தவை நாச்சியார் என்னும் நூலை மேற்கோள் காட்ட, அந்நூலை நம் நண்பர் ஒருவர்
அனுப்ப, அதை படிப்பது Waste of time என நம் நண்பர்
எச்சரிக்கையும் மீறி வாசித்ததன் விளைவு..
மந்திரிச்சு விட்டது போல் ஆனேன்...
இனி..
பேராசிரியர் திரு. அகத்தியதாசன் எழுதிய
குந்தவை நாச்சியார் என்னும் ஆய்வு நூலில் இருந்து..
கருத்து சுதந்திரம் என்பது ஒருவரின் தனியுரிமை..
அதை விமர்சிப்பது அநாகரீகம் என்றபோதும்..
ஒரு வரலாற்றுப் பிழையொன்றை வலுக்கட்டாயமாக
ஒருவர் முன் வைக்கும் போது, வரலாற்றை நேசிக்கும்
ஒவ்வொறுவரும் தங்கள் கண்டனத்தை முன் வைப்பது
கடமையாகிறது..
பல அறிஞர் பெருமக்கள் பல்லாண்டுகளாக ஆய்வு செய்து, கோவில் கோவிலாக தேடி, சரிபார்த்து, தொகுத்து, கொடுக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை
கொச்சைப் படுத்த யாருக்கும் உரிமையில்லை..
ஆய்வுச்செய்திகள், புதுத்தகவல்கள் என்ற முன்னோட்டத்துடன் ஆரம்பமாகிறது.. முழுவதும்
மததுவேச கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது...
வாசிக்க ஆரம்பித்ததும் பளீரென்று கோபம்..
போக. . போக.. சிரிப்பாய் சிரித்தது..
962 ஆம் ஆண்டூ இராஜராஜர் பிறந்தார் என்கிறார்..
கலி என்றால் புத்தமதத்தை அழித்து என்கிறார்.
கண்டாதிரத்தர், தனக்குத்தானே ஒரு சமாதி கட்டினார்.
குந்தவையும் ஆதித்தனும் இரட்டையாம் என்று பாரசீக
நூல் கூறுகிறதாம்.. குந்தவையின் பெயர் மந்தாகினி.
குந்தவை மதம் மாறினார் என்பதற்கு சமயபுரம் மாரியம்மன் தாலாட்டே ஆதாரம்.. இராஜராஜனை திருமாலாக்கி, குந்தவையை மாரியம்மனாக்கி, துலுக்கநாச்சியர் என்னும் பெயர் கொடுத்து,
ஆதித்தகரிகாலனுக்கு பள்ளிப்படை கட்டி, உத்தமச்சோழனை கொலைகாரனாக்கி, குந்தவையை
தவம் இருக்க செய்து... வந்தியத்தேவனை நெடுங்களத்தில் புதைத்து,

புதிய அகராதி ஒன்று..
வந்தியதேவன் என்றால் வாழ வந்தான் என்று பொருளாம்.. பூதி ஆதித்தன் பிடாரி என்றால் குதிரைகள்
நிரம்பிய தேசமாம்..
கடைசியா வச்சாரு பாருங்க..
தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை தனக்குத்தானே
செப்புத்திருமேனி எடுத்தார்களாம்..
அதனால்தான் சொல்கிறேன்...
குந்தவை நாச்சியார் மதம் மாறி..
ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார் என்னும் பெயருடன்..
உறையூர் தர்காவில் அடக்கமாகி..
சமயபுரத்தில் மாரியம்மனாக எழுந்தருளி..
சார்.. சார்.. இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் சார்..
நத்தர் பாப கனவுல வந்து கடவுள் சொன்னாறு..
என்னாது..? கனவுல கடவுள் வந்தாரா..?
ஏங்க.. திருவாருர் கோவில்ல விக்ரமச்சோழன் கனவுல
வந்து கடவுள் சொல்லி, மனுநீதிச்சோழன் வரலாற்றை
கல்வெட்டா வெட்டியிருக்கிங்க.. கனவு எல்லோருக்கும்
வரும்ங்க..
இனி.. நான் ரசித்த சில பக்கங்களை மேற்கோள் காட்டுகிறேன்..
நண்பர்கள் யாரும், மத துவேச கருத்துக்களை பின்னூட்டமாய் இடக்கூடாது..
*இது ஒரு Full Entertainment show..*
இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார் பொ. ஆ 980 ல் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வெகு காலமாக உருட்டப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பேராசிரியர் அகத்தியதாசன் எழுதிய குந்தவை நாச்சியார் எனும் நூலை மேற்கோள் காட்டி இதுபோன்ற வரலாற்றுத்திரிபுகள் வலம் வருகின்றன. நாம் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்காதபோதே மதவாதி என்ற பட்டத்தை சூட்டும் சில தமிழறிஞர்கள் இதற்கெல்லாம் மறுப்பு பதிவு எழுதினால் நேரடியாக மதவாதியாக மாற்றிவிடுவர் என்ற ஐயம் இருந்தாலும் இதற்கு எதாவது ஒரு வகையில் மறுப்பு எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலர் வலியுறித்தியதன் விளைவாக இப்பதிவை தொடர்கிறேன்...!
முதலில் இதுபற்றிய தகவல்கள் கிடைக்கும் நூல் அகத்தியதாசன் அவர்கள் எழுதிய ஒரு ஆய்வுநூலாகும். இந்நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டு இதற்கு மறுப்பு எழுதுவோம்.
1. இராஜராஜ சோழன் பொ.ஆ 962 ல் பிறந்தார்.
2. குந்தவை நாச்சியார் பொ.ஆ 953ஆம் ஆண்டு பிறந்தார்.
3. குந்தவை நாச்சியார் பொ.ஆ 1026 ல் இயற்கை எய்தினார்.
4. இந்த தரவுகளுக்கு ஆதாரங்கள் அரேபியாவில் இருந்து வந்ததாம்.
5. குந்தவை நாச்சியார் மதம் மாறியதால் மாரியம்மன். மதம் விட்டு நீங்கியதால் காளியம்மன்.
6. வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்தான் பரவியது. அரச குடும்பத்தினரை கொலை செய்வதன் மூலமும் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதன் மூலமும் வைணவம் பரப்பப்பட்டதால் தனது தன்மானத்தை காக்க குந்தவை நாச்சியார் மதம் மாறினார்.
7. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார் தனக்கு தானே திருமேனி ஒன்று எடுத்தார்.
இப்படியாக ஏகப்பட்ட தகவல்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டி கிடக்கின்றன அந்நூலில். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அரேபியாவில் உள்ளது என்று எளிதாக கடந்துசென்றுள்ளார் ஆசிரியர். சரி இவற்றிற்கு நாம் பதில் சொல்வதானால் சில வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்களிடம் வினவியபோது ஒருசில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன...!
இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 962 என்பதே தவறான தகவல் எனவும், இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 947 என்பதே பெருவாரியான தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவு என்பது அந்நூலின் கூற்றுகளுக்கு பெருத்த அடியாகும். குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி என்பதால் தோராயமாக பொ.ஆ 945 ல்தான் குந்தவை நாச்சியார் பிறந்திருக வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் குந்தவை நாச்சியாரை மதமாற்றம் செய்தவர்கள் பொ.ஆ 953 வரை எடுத்துச்செல்வது விந்தையிலும் விந்தை...!
பொ.ஆ 1004 வரைதான் குந்தவை நாச்சியார் வைதீக முறையை பின்பற்றி வந்தார் எனவும், அதுவும் 9 வயதில் பாபா நந்தர் எனும் இஸ்லாமிய போதனையாளரை சந்தித்ததில் இருந்து வைதீக முறைகளில் நாட்டமில்லாமல்தான் இருந்தார் எனவும் எழுதிய ஆசிரியர் பொ.ஆ 1004 க்கு பின் இஸ்லாம் மதத்தை நேரடியாக தழுவினார் என்று எழுதுகிறார். இங்கே மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுகிறது.
அது என்ன🤔🤔🤔🤔
பொ.ஆ 1004 ல் இஸ்லாம் மதத்தை ஏற்ற குந்தவை நாச்சியார் 14 ஆண்டுகள் கழித்து எப்படி பழயாறை அரண்மனையில் தங்கி அரசு பணிகள் மேற்கொண்டார்?
அதாவது பொ.ஆ 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப்பணிகள்
மேற்கொண்டார் என்றும் கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார் என்பதும் கல்வெட்டு கூறும் செய்தி. அதாவது தனது 73 வயதிலும் ( 1018 - 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார். இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம். ஆக குந்தவை நாச்சியார் தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார் என்பது மதவெறியின் உச்சமே...!
வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் பரவியது என்று கூறும் ஆசிரியர் வைணவ மதமாற்றத்திற்கு அஞ்சியே குந்தவை நாச்சியார் மதமாறியதாக தனது பிராமண வெறுப்பை வைதீக பிராமணர்கள்மீது காட்டியுள்ளார். ஒருவேளை 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தான் வைணவம் வளர்ந்தது என்றால் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வைணவர்களுக்கென தனியாக சித்தாந்தங்களை வகுத்தார்?
"ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே"
- திருமந்திரம்.
12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில்தான் வைணவம் வளர்ந்தது என்றால் ஐந்தாம் நூற்றாண்டில் வைணவம் என்றொரு சமயம் இருந்ததை திருமூலர் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இது கொடுமணல் அகழாய்வில் வெளிப்பட்ட பானையோடுகளில் பழந்தமிழ் எழுத்தான தமிழியில் காணப்படும் பெயர்களில் ஒன்றுதான்,
" கண்ணன் ஆதன் "
இது திருமால் வழிபாட்டின் எச்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தொல்காப்பியத்தின் மாயோன் வழிபாட்டை அடிப்படையாகக்கொண்டு அறியலாம். இதன் அடிப்படையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கண்ணன் எனும் திருமால் வழிபாட்டை கொண்டுள்ளோம் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது. அதுபோல சங்க இலக்கியங்களில் பெருமளவில் புகழப்படும் தெய்வம் திருமால்தான் என்பதை அந்நூலின் ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் வைணவம் வளர்ந்தது என்பதுபோன்ற கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார்...!
அடுத்ததாக தஞ்சை பெரிய கோவிலில் தனக்குத்தானே திருமேனி ஒன்றை குந்தவை நாச்சியார் எடுத்ததாக அந்நூலில் பதிவு செய்துள்ள ஆசிரியர், தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத்திருமேனிகள்
எடுத்துள்ளார் என்பதைத்தான் "தம்மை" என்ற சொல்லால் குறிக்கப்பட்ட கல்வெட்டு கிறிப்பிடுகிறதே அன்றி "தம்மை" என்றால் தனக்குத்தானே என்று
பொருள் அல்ல. இதை "தம் அம்மை" அதாவது தனது தாய் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல வரலாற்றுத் திரிபுகள்தான் அந்நூலில் இடம்பெற்றுள்ளதே அன்றி குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை...!
- பா இந்துவன்.

No comments:

Post a Comment

போதை மருந்து -ஜாபர் சாதிக் - அமீர் சுல்தான்

எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.    ஆடு அமீர் : டாக...