Saturday, January 22, 2022

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊட்டி பெந்தகோஸ்தே பாஸ்டர் சூரி ஸ்டீபன் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; மதபோதகர் போக்சோவில் கைது ஊட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் போக்சோவில்
 கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை; மதபோதகர் 
போக்சோவில் கைது  



ஊட்டி

ஊட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் 
போக்சோவில்  கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர்
 சூரிய மூர்த்தி என்ற சூரி ஸ்டீபன்(வயது 54). மதபோதகரான இவர்,
 ஜெபக்கூடம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்
 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சூரி ஸ்டீபன், தனது வீட்டுக்கு
 அருகில் உள்ள மற்றொரு பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் 13 வயது 
சிறுமி தனியாக இருந்தாள். இதை அறிந்த சூரி ஸ்டீபன் அந்த வீட்டுக்குள்
அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி 
சென்றார். 

போலீசில் புகார்

இதையடுத்து வேலைக்கு சென்றிருந்த அந்த சிறுமியின் தாயார் வீட்டுக்கு 
வந்தார். அப்போது நடந்த சம்பவத்தை அவரிடம், சிறுமி தெரிவித்தாள். இதை 
கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் 
நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு 
சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்கு சூரி ஸ்டீபன் 
பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 

போக்சோவில் கைது

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சூரி ஸ்டீபனை 
போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஊட்டி மகளிர் கோர்ட்டில் 
நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை  2 வாரம் நீதிமன்ற 
காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து மதபோதகரை 
பாதுகாப்பாக சிறைக்கு போலீசார் அழைத்து சென்று அடைத்தனர். இந்த 
சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா