Wednesday, January 12, 2022

திருக்குறள் மெய்யியல் மரபை சிறுமை செய்யும் திராவிடியார் + விஷநரிகள் கூட்டணி

அன்றாடாம் ஓதும் வேதத்தை கூறுகையில் மறந்தாலும், மீண்டும் கற்கலாம், தன் பிறப்பு குடி ஒழுக்கத்தை விட்டால் இழிந்தவனாய் கெடுவான் என்கிறார் வள்ளுவர்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.   குறள் 543- செங்கோன்மை
மணக்குடவர் உரைஅந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.    குறள் 560:  கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.


திருவள்ளுவர் நன்கு வளர்ச்சி அடிஅந்த மொழிநிலையோடு, பாயிரத்தோடு இடைக்காலத்தில் எழுந்த நூல் ஆகும். கடவுள் வாழ்த்து எனத் தொடங்கினாலும் அதன் ஆரம்பமே அறிவை வலியுறுத்தலும், கல்வியின் பயனை சொல்வதுமே. 

நாம் கல்வியினை கற்கத் தொடங்குவது "அ" என எழுதுவதிலிருந்து, இந்த உலகம் இறைவனில் இருந்து தொடங்கியது என்பார். கல்வி கற்றதன் பயன் என்பது அனைத்து அறிவினையும் உள்ளான இறைவன் திருவடி பற்றுவதற்கே என அடுத்த குறளிலேயே தெளிவாக்குவார். உலகமே, அனைத்திலும் என்ற வள்ளுவர் அடுத்த குறளிலேயே நம் மனத்தினுள்ளேயே உள்ளவர் என மேலும் எளிமையாக்குவார்.  வள்ளுவம் மனிதனின் இறுதி தேவை என்பது பிறவிப் பெருங்கடலை மீண்டும் மீண்டும் இவ்வுஅலகில் பிறக்கும் நிலையை இறைவன் திருவடியை பற்றினால் மட்டுமே என அவ்வதிகாரத்தை முடிப்பார்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்.                                   மணக்குடவர் உரை:பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்.
மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

வள்ளுவர் பாயிரத்தில் கடைசியாக அறன் வலியுறுத்தல் வைத்துள்ளது, வள்ளுவத்தின் திரள் பொருளே ஒவ்வொரு செயலிலும் அறம் செய்ய வேண்டும் 

வள்ளுவத்தின் வேர் கடவுள் நம்பிக்கை.

கல்வி கற்பதின் பயன் நிறைவான அறிவின்னர் உலகின் தொடக்கமான இறைவன் திருவடி பற்றவே- அந்த இறைவன் திருவடியைப் பற்றினால் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிக்கடலை கடக்க இயலும்.
திராவிட நச்சுக் கயமை உரைகளின் சான்று
மு.கருணாநிதி உரை- வாலறிவன் என்பதை தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர் குறள் 10- இறைவன் என்பதற்கு -தலையானவனாக இருப்பவன்

நல்ல குடி பிறந்தவனிடம் தான் நல்ல பண்பு இருக்கும் - வள்ளுவம்

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409:
கலைஞர் மு.கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
Translation:Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.
Explanation:The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 96:8

சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையார்-கண்ணே உள - குறள் 23:3

மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் - குறள் 46:5

மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 46:7

மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 46:8

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6

மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3

நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல் - குறள் 46:10

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2

மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது
மு.வரதராசனார் உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
சாலமன் பாப்பையா உரை:நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்
கலைஞர் மு.கருணாநிதி உரை: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
மு.வரதராசனார் உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. குறள் 503: தெரிந்துதெளிதல்
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.




ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. குறள் 323: கொல்லாமை

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. குறள் 297: வாய்மை
மு.வரதராசனார் உரை: பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. குறள் 181:புறங்கூறாமை
மு.வரதராசனார் உரை: ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். குறள் 183: புறங்கூறாமை
மு.வரதராசனார் உரை: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். குறள் 35: அறன்வலியுறுத்தல்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. குறள் 34: அறன்வலியுறுத்தல்


குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. குறள் 502: தெரிந்துதெளிதல்
மு.வரதராசனார் உரை: நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். குறள் 462: தெரிந்துசெயல்வகை
மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.



செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:466)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்

 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் 362:அவாவறுத்தல்
மணக்குடவர் உரை:வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338:நிலையாமை
மணக்குடவர் உரை:கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. 

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.  குறள் 36: அறன்வலியுறுத்தல்.
அறத்தைச் முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு வரும் பிறவிகளும் துணை ஆகும்.

நாட்டின் அரசிற்கு வள்ள்வம் கொடுக்கும் அடிப்படையும் - பண்டைய முதல் உரையான மணக்குடவர் உரையும்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை
மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560: கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை:பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.  



மனித வாழ்வில் நடைபெறும் உண்மையான நிகழ்வுகளைத் திருவள்ளுவர் தொகுத்து அவற்றிற்கு ஏற்ற தெய்வங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

குறள் 1) எழுத்தென்றால் பகவனையும்,
குறள் 2) கற்றல் என்றால் வாலறிவனையும்,
குறள் 3) நீடுவாழ மலர்மிசை ஏகியவனையும்.
குறள் 4) இடும்பை இல்லாத வாழ்விற்கு வேண்டுதல் வேண்டாமை இலாதவனையும்,
குறள் 5) இருள்சேர் இருவினையும் சேராமல் இருக்க இறைவனையும்,
குறள் 6) நெறி நின்று, நீடுவாழப் பொறிவாயில் ஐந்தவித்தானையும்,
குறள் 7) மனக்கவலையை மாற்றிடத் தனக்குவமை இல்லாதனையும்,
குறள் 8) பிறவாழிகளை நீத்தல் செய்ய, அறவாழி அந்தணனையும்,
குறள் 9) கோள்கள் பொறியில் குணமில்லாமல் போக, எண்குணத்தானையும்
குறள் 10) பிறவிப் பெருங்கடல் நீந்த இறைவனையும்

’திருக்குறளைச் சமயச் சிமிழுக்குள் அடக்க முயல வேண்டா’
சமயநூற் பயிற்சியற்ற, வள்ளுவத்துக்கான உரைகளையும் பார்த்திராத போலி முற்போக்கு கும்பலின் வெற்றுவேட்டு ஜல்லி!
குறட்பாக்களைக் கட்டாயம் சமயச் சிமிழுக்குள் அடைத்தே ஆகவேண்டும் எனும் நேர்ச்சைக்கடன் எதுவும் எமக்கில்லை.
பற்றுநீங்கி ஆன்மிகத்தில் தோய்ந்தாருக்கென்றே ‘நீத்தார் பெருமை’ எனும் அதிகாரம் வகுத்துள்ளது வள்ளுவம். குறளின்கண் மறைமுகமாக இடம் பெறும் புராணத் தகவல்களும் பல. ’அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ ததீசி முனிவரைச் சொல்வதை மறுப்பது பாசாங்குத்தனம் இல்லாமல் வேறு என்ன?
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவர்பிரான், உயிரினம் பல இருக்க ஆவுக்கு நீரளிக்கும் உயர்ந்த தர்மத்தை உவமை கூறுவார்.
சேரமான் பெருமாள் நாயனாரின் ‘திருக்கயிலாய ஞான உலா’ குறட்பாக்களை அப்படியே எடுத்தாண்டுள்ளது.
குறளின்கண் இடம் பெறும் சமயம்சார் சொற்கள் பல. அவற்றையெல்லாம் நீக்க முடியுமா? அவ்விதம் நீக்க முடியுமானால் சமயச் சிமிழுக்கு வெளியே வள்ளுவத்தை எடுத்து விடலாம்.

*ஆதி பகவன்
*எண்குணத்தான் (விஜரத்வாதி அஷ்டகுணா:)
*அடியளந்தான் (திரிவிக்கிரமன்)
*செய்யாள் (இலக்குமி)
*உலகியற்றியான் (விச்வஸ்ய கர்த்தா)
*இந்திரன்
*அவியுணவின் ஆன்றோர் (தேவர்கள்)
*ஆவுக்கு நீர் (கோ ஸம்ரக்ஷணம்)
*அளறு (நரகம்)
*புத்தேள் உலகு (சுவர்க்கம்)
*ஓத்து (வேத அத்யயநம்)
*பார்ப்பான் (வேதியன்)
*அறுதொழிலோர் (ஷட்கர்ம நிரதர்)
*தென் புலத்தார் (பித்ருக்கள்)
*விருந்து (ஆதித்யம்)
*தவம்
*அவி சொரிந்து வேட்டல் (யாகம்)
*நோன்பு (விரதம்)
*புத்தேளிர் (தேவர்)
*கூற்று (யமன்)
*பிறவாமை (அபுநர்பவம்)
*மறை மொழி (மந்திரம்)
*ஊழ் (விதி)
*திங்களைப் பாம்பு கொள்வது (சந்திர கிரஹணம்)
*வாய்மை (ஸத்யம்)
*கள்ளாமை (அஸ்தேயம்)
*கொல்லாமை (அஹிம்ஸை)
*மற்றீண்டு வாரா நெறி (மோக்ஷம்)
*தாமரைக் கண்ணான் உலகு (பரமபதம்)

திரு,
செய்யாள்,
தாமரையினாள்,
தவ்வை,
முகடி,617
இந்திரன், 25
வேந்தன்,
காமன்,
நிலமென்னும் நல்லாள்,
அணங்கு,
தென்புலத்தார்,
அமரர்,
அவியுணவின் ஆன்றோர்,
தெய்வம்,
தேவர்,
புத்தேளிர்,
வானத்தவர்,
வானோர்,
விசும்புளார்

மறை ஓத்துக்கு (வேத அத்யயனத்துக்கு) முதன்மை தரும் விதத்தில் ‘ஓத்தூர்’ என்றே ஒரு பாடல் பெற்ற சைவத்தலம் ஒன்றும் தமிழகத்தில் உள்ளது - ‘குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' (காழிப் பிள்ளையார்).
வள்ளுவத்தை சநாதனத்திலிருந்து பிரிப்பதும், சமணத்தோடு ஒட்ட வைப்பதும் மிகவும் செயற்கையான பயனற்ற நிலைக்காத முயற்சிக










 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...